Tuesday, 31 December 2024

வருக 2025🥰

அமைதியான மனம்,
ஆழமான அறிவு, 
இனிமையான வாழ்க்கை, 
உன்னதமான உற்றார்,
எப்போதும் நல்ல ஆரோக்கியம், 
நிறைவான செல்வம்,
பல்லுயிர்க்கும் ஏற்ற இயற்கை சூழல் 
வழங்க இருக்கும் 2025 ஆண்டுக்கு நன்றி 🙏 🌟 

நன்றி 2024🙏

எப்போதும் நினைவு கூறும்,
பல நல்ல நிகழ்வுகளை மனதில் வைத்து,
எப்போதும் புன்னகையை பெருக்கிடும், நினைவுகளை அசைப்போட்டு, ஆனந்தமாக வாழ, வழி வகுத்த இயற்கைக்கு நன்றி 🙏 
நன்றி 2024 💐 
வாழ்வில் சில புரிதல் வரவழைத்த ஆண்டு ♥️

நல்லவற்றை அளித்து, 
அப்படி இல்லாதவற்றை தவிர்த்து, அந்த நினைவுகளை அழித்து, 
வாழ்வை புரிய செய்த 2024 ஆண்டுக்கு நன்றி 🙏 


Monday, 30 December 2024

அனுமன் ஜெயந்தி 🙏

அஞ்சனை வாயு மைந்தனே,
ஆஞ்சநேயனே🙏
ஆதித்ய பகவானை ஆசானாக பற்றிய 
அனுமானே🙏, 
ராம ஜெயத்தை பாரெங்கும் ஒலிக்க செய்த, ராம பக்தனே, 
சீரஞ்சீவியே 🙏
செந்தூர நாயகனே 🙏🙏

Friday, 27 December 2024

Dr. திரு. மன்மோகன் சிங்

இந்திய பொருளாதாரம் புதிய பாதையில் பயணித்து, பொற்காலம் தொடங்க வித்திட்ட பொருளாதார சீர்திருத்த சிற்பி.. 
தாராளமாக்களின் தலைவர்.
ஆர்பாட்டம் இல்லாத, 
அமைதியான ஆசிரியர். 
ஆடையில் ஆர்வம் கொள்ளா அரசியல்வாதி. 
திரு.மன்மோகன் சிங் 🙏



Wednesday, 25 December 2024

வெட்கம்

அன்பே, நீ வெட்கத்தில் சிவப்பதால்,
செவ்வானம் உன்னிடம் தோற்று.. வருந்தி.. 
மழை பொழிகிறதே

Monday, 23 December 2024

சுதந்திர காற்று🪽🪽

சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் தருணம், 
எவ்வளவு அலாதியானது
என்று அடைபட்டிருந்த பறவைக்கே தெரியும்.
பூர்ண சுதந்திரமும், 
விடுதலை அடைந்த உணர்வும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை 🪽🪽

Saturday, 21 December 2024

தூக்கி எறி

வீட்டில், கை கீறிடும் உடைந்த கண்ணாடியை வைத்திருப்பாயா? 
பின் ஏன் மனதை உறுத்தும் நினைவுகளையும், உணர்வுகளையும் பொன்னான மனதில் புதைக்கிறாய்.
தூக்கி எறி❤️‍🔥

மனமே விடை

பிரச்சனைகளின் அளவு,
நம் மனது அதற்குத் தரும் உருவத்தில் தான் உள்ளது. சிறிது என்றால் சிறிதே.. பெரிது என்றால் பெரிது தான் 

Thursday, 19 December 2024

மானிட மிருகங்கள்

நம் துயரில் தோள் தராது போயினும், தவறில்லை.., எதிர்பார்ப்பும் இல்லை.. 
ஆனால் தேள் நஞ்சினும் கொடிய நெஞ்சுடைய மனித முகமுடி இட்ட கீழ்மக்கள்,
தம் வன்மம் வெளிக்காட்டாமல், நம்மிடத்தே இனிப்புணவு வேண்டி மகிழ்வர். 

வாழ்வியல் உண்மை

உலகை, 
உலகில் உள்ள உங்கள் உறவுகளை,
சில வாழ்வியல் உண்மைகளை உணர்ந்து விட்டால், 
வாழ்க்கை எளிமையே, உள்ளன்போடு வாழலாம் 🙂🥰

அழகு - 4

பெண்ணின் மௌனம் கலந்த சிரிப்பு ஒரு அழகு. (நீ என்ன வேணுமோ சொல்லு, நம்பிட்டேன்😉) 
பெண்ணின் ஆத்திரம் கலந்த அமைதி ஒரு அழகு (உன்னிடம் பேசி புரிய வைக்க அவசியம் இல்லை / புரியபோவது இல்லை🤫) 
பெண்ணின் ஆதீத நம்பிக்கை, அழகு (உன் உயிராய் நான் இருப்பேன்😍)
பெண்ணின் அளவு கடந்த அன்பு, அழகு (உலகமே நீ தான்🥰) 

Wednesday, 18 December 2024

அன்பு சேயே 👶

சுழல் குழலைச் சிலிப்பிடும் சிங்காரியே.. ..
சின்னஞ்சிறு கண்களைச் சிமிட்டிடும் செந்தூரமே.. 
சிரிப்பினாலே எனை சிறை கொள்ளும் சித்திரமே..
என் அன்பு சேயே(குழந்தையே) 

Tuesday, 17 December 2024

புயலே புதையலே💘❤️

தென்றல் தீண்டும் நேரத்தில்(மாலை நேரம்) புயலைக் கடந்து வந்தேனே. 
புயலாக அவள் என்னை கடக்கயிலே ஆழ்ந்த காற்றழுத்த நிலை(படபடப்பு) என்னில் உருவாக உணர்ந்தேனே.. 
புயலானவள், நெஞ்சில் நிலை கொண்டாள். 
புயலோ, அவள் எனக்கு கிடைத்த வாழ்நாள் புதையலோ அறியேனே 


Eye liner💘

கண்மூடித்தனமான காதலே கரை சேரும்.. 
சற்று விழித்துக் கொண்டாலும் காதல் காணாமல் போய்விடும்.
கண்விழிகாமல் இருக்க பிறர் இடும் "eye liner" யே, 
"எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா".. எனும் 
"பொய் liner" 

Monday, 16 December 2024

மன்னிப்பு 🙂

மரணம் யாரையும் மன்னித்து விடும்...🙂
பின் ஏன் மரணம் வரை அந்த மன்னிப்பை தராமல் வன்மத்தை நாம் சுமக்க வேண்டும்?? 🤔
மனமே "மன்னித்து விடு"
மனமே மகிழ்ச்சி கொள் 🙂🙂

நூலாடை நேசம் 👗🥰

உந்தன் வாசனையில்.. 
எந்தன் யோசனை முற்று பெறுகிறதே.. 
உந்தன் (நூல்) இதழ்களை நான் தொட,
அந்த மென்மையில் மெய் மறக்கிறேனே..
நீ எனை தீண்ட, என் ஸ்பரிசம் சுவாசம் பெறுகிறதே..
உந்தன் வண்ண, 
(நூல்) இதழ்கள் என் மேனியில் படர, நான் வடிவழகாக வானில் பறக்கின்றேனே..
என் மென்மையான புத்தாடையே👗

Friday, 13 December 2024

உலகழகி ❤️

பளபளன்னு இருப்பா.. 
பக்கம் போன முறைப்பா.. 
விறு விறுன்னு நடப்பா, 
வண்ணத்துப்பூச்சியா பறப்பா.. 
மந்தாரப்பூவழகி.. எனை மயக்கும் பேரழகி.. 
மத்தாப்பு சிரிப்பழகி, எனக்கு வாய்த்த (பிறந்த) உலகழகி.. 
அவ பார்வையால சொக்கிடுவேன்.. சொர்க்கத்தையும் பார்த்திடுவேன்.. 



Thursday, 12 December 2024

உயிரே உயிரே😘❤️

தீரா காதல் தீர்ந்திடுமா, சொல்லா சொற்கள் புரிந்திடுமா!! 
இனியும் இந்த இடைவெளியை மனம் தாங்கிடுமா.. 
இணையும் காலம் கண்ணில் தென்படுமா

அனல் மேலே பனித்துளி❤️

சிலிர்த்தது தேகம் சில்லென்ற மழையில், 
அனலாய் மனம், அருகில் நீ இல்லாததால்.. 
அணைத்திட வாராயோ.. 

Wednesday, 11 December 2024

இசை கலைஞனே🎤🎶

உன்னருகில் நான், 
ஓர் அடி தூரத்தில்..ஆனால் தொலைவை உணர்கிறேன். 
உன் இசை மழையில் அனைவரும் ஆர்ப்பரிக்க..
உன் நினைவுகள் நிரம்பிய
என் மனமோ, உன் இசை வெள்ளத்தால் அடித்து செல்கிறதே 🎶🎼🎤🎙️

பாரதி 2

பாரதியின் எழுத்துக்கள்✒️
கவி படைக்கும்,
கதை சொல்லும், 
காதல் உணர்த்தும், 
குழந்தைக்கு குதூகலம் தரும், 
கண்ணனைக் கண் முன்னே காட்டும். 
கன்னியர் முன்னேற்றத்தைப் பேசும்.
புரட்சி போர் செய்யும், 
குயிலின் கீதம் பாடும், 
நாம் சுவாசிக்க விரும்பும் சுதந்திர காற்றை வீசும்🖋️

Tuesday, 10 December 2024

அன்பெனும் ஆயுதம் 💞

நான் கண்ட அதீத காதலும் உன்னிடத்தில் தான்.. 
நான் கொண்ட அதீத கோபமும் உன்னிடத்தில் தான்.. 
எனது கோபம் உன்னை தீண்டாது, காதல் அரணாய் இருக்கும். 
ஆனால் என் காதல் உன்னை தீண்டிடுமே அதிலிருந்து நீ எப்படி பிழைப்பாய்

Friday, 6 December 2024

வேண்டாத உறவு


ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் நண்பர்களாகவும் நினைக்காதே, 
நம்பிக்கையும் வைக்காதே நம்பி எதையும் சொல்லவும் சொல்லாதே

வெறும் வார்த்தைகளில் யார் வேண்டுமானாலும் நண்பர் ஆகி விடலாம்

Thursday, 5 December 2024

online trap 🛒🛑

Online purchase and Online food order
We should know, 
WHAT and WHY to BUY🛒, 
and WHEN to STOP🛑 .



Wednesday, 4 December 2024

மொழி

மனிதன் எப்போது நிம்மதியாக இருந்தான், 
மொழி பிறப்பதற்கு முன். 
ஏனென்றால் மொழி பிறந்த பின், நாம் ஒன்று சொல்ல, 
அதை வேறுவிதமாக திரித்து புரிந்து 
கொள்(ல்)வதே 
வா(வே)டிக்கையாக விட்டதல்லவா🤔

கூகுள் 👀

நாம் பேசும் நபர் நம் பேச்சை முழு முறையாக கேட்கிறாரோ இல்லையோ நான் பேசாத ஒரு நபர் எப்போதும் நம் வார்த்தைகளை கவனித்துக் கொண்டே இருக்கிறார் மொபைல் (அ) கூகுள்

நம் பேச்சை யார் கேட்கிறார் என்று விரக்தி அடையாதீர்கள். நான் இருக்கிறேன், என்று பின் தொடர்ந்து வரும் கூகுள்.

Saturday, 30 November 2024

காதல் கனமே❤️

என் காதலின் கனவானவள்👸
கனமானவள்❤️... 
குளிர் காலத்தில்💞💕.., 
கனிவானவள்.. வெயில் 
நேரத்தில்..., 
என்றும் என் எனக்கானவள்.. 
எனை ஏற்றவள்.. 

Friday, 29 November 2024

Happy Birthday தமிழ் காதல் கவிதை - one year of youtube - lessons

1. முயற்சி செய், 
2. எல்லா நாளும் ஒன்று போல் இருக்காது
ஏற்ற, இறக்கம் இருக்கும்.
3. நிதானத்தை கடைபிடி.
4. எல்லாம் நன்மைக்கே
5. புதிய செயல்கள் மூலம் புதிய உறவுகள்

Wednesday, 27 November 2024

பெண்கள் புயலோ😜

Fengal புயலோ??
அவள் கண்கள் புயலோ??
சுட்டும் விழியால், சுற்ற வைக்கிறாள் எனை, 
வில் விழியால், எனை வளைகிறாள்,
கட்டி இழுக்கிறாள், 
மெல்ல சாய்கிறாள் .. 


Tuesday, 26 November 2024

திருமணம் ❤️❤️

ஒற்றை விரல் பற்றி,
இரண்டு மனம் ஒன்றி,
மூன்று முடிச்சு இட்டு,
நான்கு பேர் வாழ்த்துக்களுடன், 
பஞ்ச பூத சாட்சியாய், 
அறுசுவை உணவிட்டு, 
ஏழு ஸ்வரங்கள் கீர்த்தனை ஒலிக்க, 
எட்டு கோள்கள் ஆசீர்வதிக்க, 
நவரசமும் மனதில் தோன்றி 
அழகாய் நடந்தேறும் 
திருமணத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️




பெண் பிள்ளைகள் பாதுகாப்பு 👸

நெருங்கிய நபர்களுடனும்,
நெருப்பாய் இரு குழந்தாய்..
அவர்களிலும் சில நரகாசுர்கள் நல்லவர் அரிதாரம் பூசியிருப்பர். 
அகத்தில் ஆயிரம் வன்மம் சுமந்து, முகத்தில் சிரிப்பார்கள். 
பார்த்து இரு, பாதுகாப்பாய் இரு குழந்தாய்.

காதலிக்க நேரமுண்டு❤️❤️

தேகம் சுடு, சுடு சுடுவென சுடுவதேனோ.. உன்னருகில்
மனம் பட பட படவென துடிப்பதேனோ.. உன் பார்வையால். 
அடி இள மனம் உன்னிடம் கரைவது ஏனோ.. 
மின்னல் மழை என்னுள் அனுதினமும் நிகழ்வதேனோ
காதலே

ARR Kadhalika Neramillai.. Film tune

காதலிக்க நேரமில்லை

Film : Kadhalika Neramillai 
Arr: ezhu ezhu ezhukadhu

உன்னை பார்த்து, பேசி பகிர 
பல்லாண்டாசை என்னுள் புதைந்திருக்கு, 
அதை சொல்லி செல்ல என் சின்னஞ்சிறு மனம் காத்து கிடக்கு, 
உன் கரம் பற்றி உரையாட ஒரு வரம் தா எனக்கு.. 
உன்னோடு இருப்பதே வாழ் நாள் வரம் எனக்கு 
காதலிக்க நேரமில்லையோ உனக்கு... 

Thursday, 21 November 2024

அதிர்ஷ்டசாலி

சந்தோசமோ, சோகமோ
அதை பகிர நம்பிக்கையான, நம்மை மதிப்பிடாத உறவு உள்ளவர் தான் மகிழ்ச்சியானவர், அதிர்ஷ்டசாலி 

உங்களுக்காக

காலப்போக்கில், குழல் கழிவதை போல,
கரைந்திடும் சில நினைவுகளும்..
எலும்பு தேய்வது போல, தேய்ந்திடும் சில உறவுகளும். அன்பு அடிமைத்தனம் இல்லை, ஓர் சுதந்திரம். 
பிரியா 

Tuesday, 19 November 2024

காதலும் கடந்து போகும்❤️

நான் அறியாமல்,
என்னில் தோன்றிய புன்னகை.. நீ அன்பே.. 
நான் உணர்ந்த , 
காதல் எல்லாம் உன்னால் அன்பே... 
வெளியுலகம் பற்றி அறிந்தது 
உன்னால் அன்பே.. 
உன்னை விட உன் மனம் நான் அறிவேன் அன்பே




இமை தாண்டாதே

கண் இமைகளைத் திறக்க மனமில்லை. 
ஆழ்ந்த நித்திரையினால என்றால்... 
இல்லை, 
உன் நினைவுகளால் கண்களில் பெருகிய கண்ணீர்
இமை தாண்டி கன்னங்களில் கால் பதிப்பதை பிறர் காணாதிருக்கவே

Monday, 18 November 2024

பாசம் எனும் வேசம்

அழையா துணையாக வந்த அன்பு உறவே, 
பாசம் வேண்டும் என்று வேசமிட்ட கலைஞனே, 
வஞ்சத்தில் உன்னை விஞ்சிட யாரும் இல்லை. 
தேவைகேற்ப நிறுவி பின் நீக்கிட, அன்பும் பாசமும் 
ஒன்றும் தொழில்நுட்பம் இல்லை. 



Sunday, 17 November 2024

காதல் யாதெனில்

ஒருத்தர் கூட இருக்கும் போது நம்ம சந்தோஷமா இருக்கிறோம் என்பதை விட, கூட இல்லானாலும் அவங்க சந்தோஷத்தை பார்த்து நம்ம ஹாப்பியா இருக்குறது தான் காதல்னு நினைக்கிறேன்

போகாதே🎼🎵🫶..

போகாதே❤️...போ..காதலே❤️‍🔥..
போ... கதையேதும் கதைக்காதே🎼.. 
என்னையும் 
வதைக்காதே🎵..
சிரித்து மகிழ்ந்தது, சில காலம் தானே😊.. 
நினைவுகள் நெடுந்தூரம் என்னோடு மட்டும் வர,
என்ன மாயம் செய்தாயோ❣️

Saturday, 16 November 2024

அன்பு

அன்பு அழகானது,
அளவான அன்பு, ஆபத்தில்லாதது.
உணர்வு பூர்வமான அன்பு,
உயிரோட்டமிக்கது

மதிப்பாய்வு

நம் வாழ்க்கையை, 
நம் எண்ணங்களை, 
நம் செயல்களை, 
நாமே அவ்வப்போது மதிப்பாய்வு செய்தல் நன்று,
இல்லையேல் பிறர் செய்ய நேரிடும். 

நன்றி 🙏 🙏

என் உயிரை சுமக்கும் உடலுக்கு நன்றி,
உள்ளத்தை சுமக்கும் உயிருக்கு நன்றி, 
உணவு, உறைவிடம், உடை, உடல் நலம், சிறந்த உயிர் குடுத்தோர், உற்றார் உறவினர் கொடுத்து, அளப்பரிய வாழ்க்கை அளித்து, எப்போதும் என்னை காக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி நன்றி 🙏 🙏 

Friday, 15 November 2024

சுதந்திரம் ❤️

சுதந்திரம்
இன்றும் தனிமனிதனின் தேவையாக உள்ளது. 

அன்பில் சுதந்திரம், 
அலுவலில் சுதந்திரம், 
பேச்சில் சுதந்திரம், 
எண்ணங்களில் சுதந்திரம், 
எழுத்து சுதந்திரம்.. 
அடுப்படி சுதந்திரம்.. 
இப்படி பல

Wednesday, 13 November 2024

பாடல்

கடவுளே,
கண்ணீர் சிந்தாமல்... 
சில பாடல்களைக் கேட்கும் தைரியம் எனக்கு குடு..🙏

Tuesday, 12 November 2024

அன்பான கோபம்

என்னிடம் என்ன இருந்ததோ அதை நான் தந்தேன் உன்னிடம் என்ன இருந்ததோ அதை நீ கொடுத்தாய் கொடுத்ததற்கு நன்றி. உன்னிடம் இருந்தது கோபம் என்னிடம் இருந்தது அன்பு

Sunday, 10 November 2024

பப்பி ஹேப்பி

மகிழ்ச்சியான வழியில் எண்ணங்களை மடை மாற்றம் செய் மனமே,
உன் வாழ்க்கை மேம்பட 🙏❤️

33 ஆண்டுகள் இனிய பிறந்தநாள் பிரியா ❤️

மூவிரண்டு வருடங்கள் முன்பிருந்த அகமே..

சிரிப்பினாலே சிவந்த முகமே..

பொய்களையும் புன்னகையால் ஏற்கும் குணமே..

ஆழ்ந்து அதிகம் சிந்திக்காத மனமே..

அன்பர் எல்லாம் நண்பர் என்று நேசித்த நெஞ்சமே

உண்மை என்றும், உறவென்றும் நம்பிய உள்ளமே

போய் வா.. நன்றி 🙏

Happy Birthday to Me 🎂

Sunday, 3 November 2024

நன்றி வாத்தியாரே

வாஞ்சையான வார்த்தைகளோடு வருபவர்கள் எல்லாம் வானவில் உறவுகள் அல்ல... 
வன்மத்தை உமிழ்ந்து,
வஞ்சம் தீர்க்க வந்தவர்களாக கூட இருக்கலாம். 
வாழ்க்கை வாத்தியார்கள் அவர்கள். 

Saturday, 2 November 2024

மின்னலே🎇

செந்தாழினி நீ..செந்தாழினி நீ...
சிரிப்பினாலே சினத்தைக் கொல்லும் மாய மோகினி நீ..
செந்தாழினி நீ, செந்தாழினி நீ 
செம்மையான மனம் உடைய அழகிய மோகினி நீ..
யாழ்மொழி, என் சேய்மொழி.. 
என் தாய் மடி, என் உயிர் நாடி 
இனி நீ..

Friday, 1 November 2024

அழகு 🌹

மலர் இதழின் ஓரத்தில் பனி துளி
மணப்பெண் இதழ் ஓரம்
கண்பாடா பொட்டு
இரண்டுமே கண்கொள்ளா அழகு குழந்தையின் சிரிப்பு
பனி படர்ந்த மலை தொடர்கள்
பசுமை சூழ்ந்த வயல்வெளிகள்
ஆர்ப்பரிக்கும் அருவி
எப்போதும் மனதிற்கு மகிழ்வை தருபவை 

காதலி❤️

காதலைக்❤️.... காதலி❤️... 
காதலே... உன்னை காதலிக்கும்
காலம் எல்லாம்❤️❤️.
கண்ணாலே சொல்லடி, 
காதலின் கனத்தை
கைக்கோர்த்து காதலிப்போம்
வா என் காதலே


தீபாவளி வாழ்த்து

பொங்கும் இன்பம் என்றும் தங்கிட
காலையில் வர்ணஜால ஆடையில்,
புன்னகையோடு பூத்திருக்கும் மலர்களைக் கொண்டு
இறைவனை வணங்கி,..
இனிப்புகள் உண்டு..
இரவில் வானில் கோலமிடும் வாண்டுகள் என இந்நாளில்
மனம் மத்தாப்பு போன்று மகிழ்ந்திடும்!!
அனைவருக்கும் தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

உறவுகள்

உலகம் அறிந்து வாழாதவர் வாழ்க்கை
பிற உற(ள)வுகளால் கெடும் 

நடிப்பு அரக்கன்

மெய்யறிந்தும் அறியாதார் போல்
                       பொய்யுரைத்து 
பூசல் நாடகமிடுவர் சிலர்

நம் வாழ்வின் உண்மை நிலையை பிறர் வழியே அறிந்தும், 
ஒன்றும் தெரியாதவர் போல், 
மீண்டும் நம்மிடமே கேட்டறிந்து,
வருத்தம் கொள்வதாய் போலியாக வேஷமிடுவர் சிலர். 

Sweet ❤️Savoury

அவன் அவளிடம்....

உன் கருப்பட்டி நிற கார்குழல்
சோன்பப்டி நிறமானாலும்..
உன் குலாம் ஜாமூன் கன்னங்கள், 
காஜு கட்லி ஆனாலும்..
பன்னீர் ஜாமூன் இதழ்கள்,
பால்கோவா நிறமானாலும்..
நீ என்றுமே என் Sweet❤️

அவள் அவனிடம்..
உன் முள் முறுக்கு மீசை,
தட்டை ஆனாலும்..
உன் போண்டா போன்ற கன்னங்கள்... காரா பூந்தி ஆனாலும்..
காரா சேவ் கரங்கள், ரிப்பன் பகோடா ஆனாலும்..
நீயே என் Savoury❤️

Thursday, 31 October 2024

பாப்பா👶❤️

தரையில் தவழும் என் தங்கமே, இடையில் அமரும் என் இமயமே, 
என் சின்ன கண்மணி சிரித்திட
சிறகில்லாமல் வானில் பறக்கிறேனே, 
உன் மேனி எனை தீண்டிட, 
மேகக் கூட்டத்தில் மிதக்கிறேன் நானே, 
மழலை முனங்களில், மொழிகள் பல கற்கிறேன் நித்தமும்.. ❤️👶

யோசி.. நேசி❤️

அதிகம் யோசித்தால் யாரையும் நேசிக்க முடியாது..
ஏதும் யோசிக்காமல் நேசித்தால்,
ஏன் நேசித்தோம், என்று யோசிக்க வைக்கிறார்கள்... 

Wednesday, 30 October 2024

அமரன்

அடைமொழி கொண்டு என்னை அழைத்த போது ஆகாயத்தில் பறந்தேன்..
❤️ ஓய் மம்முட்டி❤️
அன்பாய் என்னை அணைத்த போது, அவரிடத்தில் வீழ்ந்தேன்.. 
கடலோரம் காதல் சொல்லி, கடலலைகளில் கரைந்தோம். 
ஆயிரம் வேற்றுமையிலும், ஓர் ஒற்றுமை கண்டோம்.. காதல்❤️
ராணுவ வீரனுக்குக் களத்தில் போராட்டம். 
துணைவிக்கோ அவரை கண்டால் தான் உயிரோட்டம். 
கண்ணயராது காத்திருந்தேன்,
களம் கண்டு, நம் அகம் வருவீர் என.. 
வந்தீர் வீரனாக...அமரனாக
கண்களில் நில்லாமல் நீரோட்டம். 
என் சுருள் குழல் ஒவ்வொன்றிலும், 
நம் சுகமான நினைவுகள் உள்ளன. 
உங்கள் தோள் சாய்ந்து கோதிவிடுகிறேன். 

      - இந்து முகுந்த்




Monday, 28 October 2024

பிரியா❤️

ஓர் பொழுதினில், ஓர் மழையினில், ஓர் தனிமையில், ஓர் குடையினில், சிறு சிறு கதைகளைப் பரிமாறி, 
நாம் இருவரும் பல நெடுந்தூரம் மெல்லிய மௌனத்தில் நடந்திட.. உள்ளம் இடம் மாறிட.. 
நம் சிரிப்பினில் நாம் நனைந்திட.. 

ஓர் இடியினில் நம் இடைவெளி சுருங்கிட, 
நம் விரல்களின் இடைவெளி மறைந்திட, 
வாழ்நாள் எல்லாம் இந்த அடை மழை தொடர்ந்திட மனம் இறைவனை வேண்டிடுமே.
உன் முகப்புத்தகத்தில் உள்ள முக வரிகளில், என் காதல் முகவரி இருந்திட.. இதயங்கள் இணைந்திட.. 
வரம் என வாழ்நாள் எல்லாம் உன்னுடன் நான் இருந்திட வேண்டுமே. 

உன் உள்ளத்தில இடம் பிடிக்க ஒரு வழி சொல்லம்மா.. 
நம் இல்லத்தில, உன் மணம் கமழும் 
நாள் வருமா.. 

பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா
பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா




Thursday, 10 October 2024

ரத்தன் டாடா🙏

எளிமையின் சிகரம் நீங்கள்,
எதார்த்தத்தின் விலாசம் நீங்கள், 
உழைப்பின் வடிவம் நீங்கள், 
உன்னதமான உள்ளம் நீங்கள், 
சிந்தனைவாதி நீங்கள், 
சாதனையாளர் நீங்கள். 
பலரின் வாழ்வை மெருகேற்றிய
இந்தியாவின் மேன்மை மனிதர் நீங்கள்.
நீங்கள், மண்ணுலகை விட்டு 
நீங்கினாலும், மனிதர்களின் மனங்களில் நீங்கா சரித்திரம். 
ரத்தன் டாடா 🙏

Monday, 16 September 2024

கண்கள் 😍

களவாணிக் கண்கள், 
காட்டி கொடுத்து விடும், 
காதலை.
அது ஒரு கண்கட்டி வித்தை

Monday, 9 September 2024

மைண்ட் வாய்ஷ்

மைண்டும் மனதும் வெவ்வேறே..
மைண்ட் உண்மையை உரக்க சொல்லும்... ஆனால் மனதிற்கு அது உரைக்காது..
அன்பே அகிலம் என்று மனம் சொல்லும்.. 
அறமற்ற அன்பும் அகிலத்தில் உள்ளது.. பார்த்து இரு என்று மைண்ட் கதறும். 
மைண்ட் வாய்ஷ்  சரி தானே

Saturday, 31 August 2024

அன்பெனும் ஆயுதம்❤️

அன்பெனும் அம்பை எய்து, என் இதயத்தில் நுழைந்தாய். 
ஓர் சொல்லால், என் வாழ்க்கை எனும் வாக்கியத்தில் வார்த்தை ஆனாய். 
ஒரு விரல் பிடித்து, என் உலகமானாய்.
ஓ அன்பே, எய்திய அம்பைக் கொண்டே இதயத்தை கிழித்திடாதே



Thursday, 29 August 2024

நன்றி உணர்வு

நன்றி சொல்ல ஆயிரம் நல் விஷயங்கள் இருக்கும் சமயத்தில் நொந்து கொள்வது ஏன் மனமே.. நஞ்சு என்று தெரிந்த பின்பும் நொந்து கொள்ளாதே..
நீங்கிவிட்டது என்று நன்றி சொல்

மனிதம்

உன் வார்த்தைகளையே வேதமாய் நம்பிய மனம்... 
இன்று யார் வார்த்தையையும் செவி கொடுத்து கேட்க மறுக்கிறது..
மீண்டும் அனைத்தும் பொய்யாகி விடுமோ என்ற பயத்தில். 
உன் வெற்றியிலும் , மகிழ்ச்சியிலும் நான் மகிழ்ந்தேன்.
ஏனோ என் மகிழ்ச்சியை திருடி பொதைத்து விட்டாய். 
நீ யார் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய்.. 
நன்றி. 

Sunday, 25 August 2024

Self Reliance

After Looking at the Sun
Looking at the moon, 
I am Looking into your face..
Something that brightens your face more than the above.. 
Its Self Satisfactory ❤️

Saturday, 24 August 2024

மனித மிருகம்

மிருகம் கூட மனிதாபிமானம் காட்டும் உலகில்,
மனிதன் ஏனோ மிருகமாகிறான்

#narcissist #manipulators #abuser

Wednesday, 14 August 2024

நதி... ரதி😍

ஹாய் ஹலோ ஹவ் ஆர் யூ என்றாள்,,, 
மீ சுகம் தான்.. 
நலமா என்றேன்..
என் பெண் நதியிடம்... 😉ரதியிடம்... 
தீரா நதி அவளே என் தீரா விதி... 
மோக நதி,... 
அவளே என்னை
மயக்கிடும் ரதி... 

பறந்திடவா🦋

நான் இங்கு இருக்கையிலே பறப்பது போல் உணர்கிறதே... மனம்...
மகிழ் உணர்வால், மரத்திருந்த மனம் இங்கு பஞ்சாய் பறக்கிறதே..
வருத்தங்கள் எல்லாம் வடிந்து ஓடிய பின் வண்ணத்துப்பூச்சியாய் மனம் தான் பறக்கிறதே
பறந்திட வா... 

Sunday, 11 August 2024

போலி உறவு

முதுகில் குத்தியதால் வலிக்கவில்லை...
ஆனால் குத்தியது நீயாக 
இருப்பதால் தான்.. 
அதீத நம்பிக்கை மற்றும் பாசம் 
அர்த்தம் மற்ற இடத்தில் கொண்டதால் வந்த வலி 

Friday, 9 August 2024

வா.. வா.. அன்பே🫶

கண்ணடித்துவிட்டு, காணாத தூரம் ஓடும் கண்மணி,
என் கைக்கோர்க்கும் தூரம் 
வா... 
வா....... 
என்னை தந்து விட்டு, உனை 
சேர வேண்டுகிறேன்..
தள்ளி செல்லாமல், என் அருகினில் 
வா... 
வா....... 
நீ நினைத்த மாத்திரத்தில், நிஜம் என உன் முன்னே நிற்பேனே.. 
என் எதிர் காலமே.... 
வா... 
வா....... 

காதல் கயல்விழி😍

கண்ணதாசன் கண்டிராத காதல் அமுதம் நிரம்பிய கண்கள்😍...
கட்டி போடுமே என்னை அவள் விழிகள்.. 
எழுத மறுத்தாலும், நினைக்க நிறுத்தினாலும்🖋️😎.. 
கனவில் வந்து கத்தி முனையில் சண்டை போட்டு🗡️, 
கட்டாயம் 
காகிதத்தில் கறைப் படிய செய்கிறாள்📃📜 
என் காதல் கயல்விழி😍

#350

Sight Checking😎

நான் தேடி கொண்டு இருக்கும் சமயத்தில் தென்பட்டால் அவள்😍.
அவளைக் காணாதது போல், கண்களை திசை திருப்பினேன்🫣.
அவள் இதழ் ஓரத்தில் மெல்லிய புன்னகை😊. 
கண்டு விட்டாள் போலும், நான் அவளை தினமும் தூரத்தில் இருந்து காண்பதை😉
இதை தான் Sight அடிப்பது என்பார்களோ.... 😎

Monday, 5 August 2024

நிதர்சனம்✒️

நரி எண்ணம் கொண்டு,
நண்பர் என்ற வர்ணம் பூசிக் கொண்டு, 
நம்மிடையே நடமாடும் நபர்கள் நிகழ்காலத்தில் நிறையவே நிறைந்துள்ளனர்.
இக்காலத்தில் யாரையும் விரட்ட முடியாது. விட்டு விலகி இருப்பது
நன்று.

Sunday, 4 August 2024

நந்தவனம்🌷🌻🌼🌹🌸

பனித்துளிகளைப் போர்த்தி கொண்டு உறங்கும் இலைகளே🌿..
இதழ்களை இறுக பற்றி கொண்டு 
உறங்கும் மலர்களே (மொட்டு) 🌹
என் மலர் கொடி எழுந்து நந்தவனம் பார்கையில் புன்சிரிப்பை வீசுங்கள்🌷🌺🌻🌸🌼🌹🌿 

Saturday, 3 August 2024

உறவே🫶

நிலைபெறுமா.. நீங்காமல்🫶 நிலைத்திடுமா.. பிரியாமல்❤️
ஹே உறவே... ஓர் உயிரே..😊
உன்னை தேடி வருகிறேன்🧐
நீ யார் என்றே தெரியாமல்😉

Friday, 2 August 2024

Inner Child ❤️

True Beauty lies in Happy and Peaceful Heart ❤️
A Heart to Love and Live for Yourself is a Blessing. 
See the Mirror. 
The Heart is ALL YOURS❤️🫶 only. 

Foundation and compact doesn't give real feel of Blushing. 
Lipstick doesn't show the real Smile from the heart.
Kajal don't control our tears. 
Additional Make over helps only when your Inner Child is Happy ❤️❤️

Live and Love Happily ❤️

சில உறவுகள், சரியாக புரிந்து கொள்ளாமல் போனதால் பிரிகிறார்கள்.
சில உறவுகள், சரியாக புரிந்து கொண்டதால் பிரிகிறார்கள்.

Assumptions instead of asking.. 
Assumptions without opening up.. 
Assumptions relating past..
Don't create a peace of mind.. 

Live and Love Happily ❤️

Thursday, 1 August 2024

Beware👶

Set Boundaries with Everyone 
and for Everything.. Else
One Day You need to Shut All 
your ways.
If you don't open your mouth for you, thinking 
It might hurt them,
They will simply hurt your life, 
peace and leave.
Beware of Trespassers

உண்மை🫶

நமக்கென இல்லாத உறவுகளை தேடுகிறோம்.. 
பொய்யான வார்த்தைகளையே நாடுகிறோம்.. 
நமக்கென இருக்கும் உறவுகளை சாடுகிறோம்..
உண்மையான வாழ்க்கையின் அர்த்தத்தை உணர சில பொய்களை கடக்க வேண்டியுள்ளது. 

Wednesday, 31 July 2024

love expression❤️

Once it was a popular brand. But later 
It vanishes.. 
Once it was a trend setting, but now it is normal
Once it is affordable to upper class only but now it's for all. 
Once having it is a pride, but later it is not so.
Once Expressing Love is a tedious task..
Still it is❤️

சாத்தியமே👍

மறக்கமுடியாதது என்று உலகில்
ஒன்றும் இல்லை..
காலத்தினால் ஒருவர் செய்த 
உதவியை மறந்திடும் நன்றி நிறைந்த உலகில், எல்லாம் சாத்தியமே. 

நன்றி🙏
மறக்க கூடியதே😥.. 

வலியும் வடுவும்😥
மறைய கூடியதே😊

கோபமும், காதலும்❤️
மறைக்க கூடியதே😊

Tuesday, 30 July 2024

கண்ணம்மா❤️

பார் வியக்கும் ரதி போன்றவள் என்
பாரதி. 
கண்களில் கனிவும், 
செயல்களில் செறிவும் 
நிறைந்தவள் என் கண்ணம்மா 
பாரதி கண்ணம்மா❤️

நல்லரசு😉

Budget
தனியாருக்கு வரி விலக்கு தனிமனிதனுக்கு வரியே விலங்கு

Madhya Pradesh Atrocity Budget 
விலங்குகளுக்கு மானியம் மனிதனுக்கு சூனியம்

Monday, 29 July 2024

கிள்ளை🦜

கிள்ளை🦜, கிள்ளாதே என்னை.. 
உன் கொஞ்சும் மொழி அழ(ள) கால்.
பிள்ளை👶, பிரியாதே என்னை.. 
யாரிடம் கேட்டிடுவேன் உன் பிள்ளைத்தமிழை. 
சிரிப்பால் என்னை சரித்திடாதே
உன்னைச் சேர, இமயத்தையும் எட்டி தொடுவேன்🗻.
என் தொடுவானமே இந்த தொலை தூரம் நம்மிடையே வேண்டாமே😊

Sunday, 28 July 2024

Go with the flow🌊

சேர்க்க நினைத்தது குற்றமா
ஓர் நொடி பொழுதில் 
சிதறியதே..உறவுகள்
பணம் சேமிக்க சிந்தித்தது
குற்றமா.. 
வரி வரி என வாரி கொண்டு 
போகிறதே அரசாங்கம்.. 
Go with the flow 🌊

Saturday, 27 July 2024

Signal📶🚂

Tower Signal இல்லாத இடத்தில் தடுமாறும் இணையம் போல,
Signal வேண்டி தண்டவாளத்தில் நிற்கும் தொடர்வண்டி போல, 
நானும் தவிக்கிறேன் உன் விழி வார்த்தைக்காக... 
சமிக்கை வந்ததும் காலில் சக்கரம் கட்டியது போல் உன் முன்னே இருப்பேன்😉😉
🫶

Thursday, 25 July 2024

கல்லையும், கவிஞன் ஆக்கிவிட்டாய்❤️

கண்ணதாசன் பாடலில் கண்டிராத தத்துவ களஞ்சியம் நீ❤️.
வாலி வரிகளில் வந்திராத வர்ணஜால வானவில் வரிகள் நீ❤️. 
முத்துகுமார் சொல்லாத முத்து முத்து காவியம் நீ❤️. 
தாமரை தவற விட்ட தங்க தமிழ் நீ❤️.
கார்த்திக் நேத்தா கண்டிராத 
கதிர் மிஞ்சிய கவிதை நீ❤️❤️
எந்த கவிஞர் கண்களிலும் படாமல், 
எனக்கு காட்சி கொடுத்து, கல்லையும், கவிஞன் ஆக்கிவிட்டாய்.

களத்தில் களை🇮🇳

அரசியல் களம்.. பல கழகங்களால்
நிரம்பியது. 
கழகங்கள்.. பல நல்லெண்ண கலகங்களால் உருவானது. 
ஆனால் தற்போது கழகங்கள், 
கலங்கம் நிறையப்பெற்று வருகின்றன. 
களத்தில் உள்ள களை எடுக்க காலமாயிற்று. 

Wednesday, 24 July 2024

பிழை💘

சில நேரம் உன்னை கண்டு சிறகடிக்கிறேன். 
பல நேரம் உன்னைக் காணப் பரிதவிக்கிறேன்.
எங்காவது உன் முகம் தெரிந்திடுமா என்று தேடி பார்க்கிறேன். 
தெரிந்து விட்டால், தெரியாதது போல் விலகி செல்கிறேன். 
மனதை மூடி மறைக்கிறேன். 
இது கோழையின் பிழையே. 

தொலைவு தொலையாதோ தென்றலே❤️

உன் தோளில் சாய்வதாய் எண்ணி
தூணில் சாய்கிறேன்.
உன் மடியில் துயில் கொள்வதாய் நினைத்து, 
நிலத்தில் நித்திரை கொள்கிறேன்.
தென்றல் காற்று தலை முடியை வருடும் போது, 
நீ முடியை கோதிவிடுவதாய் உணர்கிறேன்.
தொலைவில் நீ, 
தொலைகிறேன் நான்.

Monday, 22 July 2024

மாயக்காரி❤️😍

மருதாணி வச்ச பொண்ணு😊
மயக்கிடுமே அவ கண்ணு😍. 
உதட்டின் சுளிப்பால்
உள்ளத்தை உலுக்கிடுவாள்☺️.
உடலின் உயிராய் நிறைந்திடுவாள்🤗. 
உயிரியலில் வேதியல் கலந்திடுவாள்❤️❤️.

இயற்கை சுழற்சி🌧️🌴🏞️

வானின் ஈரம் மண் சேருதே.. மழையாய்🌧️, 
மண்ணின் ஈரம், மரம் சேருதே..உயிராய்🌳🌴
மரத்தின் ஈரம்🌴.. மனிதனிடம் சேருதே 
பிராண வாயுவாய்🫁.. 
மனிதனின் மனதின் ஈரம்🫀.. மண் சேருதே 
செடியின் வடிவிலே🪴.. 
எல்லாம் இயற்கையின் சுழற்சி தானே🌧️🪴 🏝️🏞️⛈️

செந்தாமரை மலரே🪷

வெகுளியால் வெறுகாதே, 
விலகி தான் செல்லாதே, 
கோபத்தால் கொல்லாதே, 
புருவத்தை வில்லாய் வளைகாதே, 
செந்தூர விழிகளால் கொய்யாதே, 
வாக்குறுதி அளிக்கிறேன்
இது போல் என்றும் நடந்திட மாட்டேனே.. 
என் செந்தாமரை மலரே🪷

Friday, 19 July 2024

எங்கேயும் காதல்❤️

Tune Inspired from song எங்கேயும் காதல்❤️ from எங்கேயும் காதல் ❤️

நினைவெல்லாம்.. நீதான். 
நீங்காமல் நிறைந்த பசுமையான
பூவே, 
மனதில் விழும் சாரல்.. மெல்லிய 
தென்றல் காற்று வருடிய தீண்டல். 

கண்ணாலே..., 
கதை பேசும் பெண்ணே..
நெஞ்செல்லாம் உன் நினைவாலே நிரப்பி..
நெடுந்தூரம் சென்றாயே.. 
திரும்பி பாராயோ... 

Thursday, 18 July 2024

காது மடல்.. காதல்❤️

காதல், பொதுவாக கண்களை பார்த்து தான் ஆரம்பம் ஆகும் என்று தான் சொல்வார்கள்..
ஆனால் எனக்கோ, அவள் காது.. 
ஆம் , அவள் வலப்புறம் நான் அமர்ந்திருப்பேன்... 
என் இதயத்தை திருடி, இடப்புறம் அவள் ❤️ நிறைந்திருப்பாள்.
கண்களைக் காண அவகாசம் கிடைப்பது அரிது. 
ஆனால் என் கண்களை கசக்குவது போல் ஓரக்கண்ணால், 
கூந்தலினால் பாதி மறைத்தும் மறைக்காமலும் வெளிப்படும் அவளின் காது மடல்களையும், 
முத்துக்கள் கூடி சிரிப்பது போல்
தென்றல் காற்றில் தள்ளாடும் 
அவளின் ஜிமிக்கியையும் ரசிப்பேன்..🫶
காது மடல் ரசித்து காதல்(கவிதை) மடல் வரைந்தேன்❤️📜
ரசிகன் காலப்போக்கில் அவள் காதல் ராசாவானேன்☺️


தேவதை🧚

நான் பக்கத்தில் இருந்தால், பட்டாம்பூச்சியாய் படபடத்திடுவாள்🦋.
சிறகை வீசி சிரித்திடுவாள்🐝.
நான் கொஞ்சம் தள்ளி சென்றால்
மிகவும் வருந்திடுவாள்🙄. 
நான் கொஞ்சம் கொஞ்சிட சென்றால், ரொம்பும் கெஞ்சிட செய்வாள் வஞ்சியிடை 
வசியகாரி☺️🧚🧚

மருதாணி🫶 மங்கை🥰

மருதாணி.. மங்கை...
 
பச்சை சேலையில் பளிச்சிடுவாள். 
நான் பக்கம் வர முறைத்திடுவாள்(மருதாணி முள்) 
கைகள் கோர்க்க சிவந்திடுவாள்☺️
அவள் சிவந்திட, நானும் சிலிர்ந்திடுவேன். (மருதாணியின் குளிர்ச்சி) 
என் ஆயுள் ரேகையின் நீளம், 
அவள் உதட்டின் புன்னகை தூரம். 
காலப்போக்கில் சற்று மறைந்தாலும், எங்கள் காதல் என்றும் குறையாதே. 
நிறம் சற்று குறைந்தாலும், 
அவள் நினைவு என்றும் நிலைத்திடுமே. 
ஆயுள் முழுவதும் அவள் கரம் கோர்ப்பேன், 
அவள் புன்னகையை(சிவந்த நிறம்) என்றும் ரசித்திடுவேன். 
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
நிறம் மாறும், நிலை மாறும் 
மருதாணியும் மங்கையும் 
ஒன்றன்றோ, 
பச்சிளம் குழந்தையாய் தாய் வீட்டில், 
பருவ மங்கையாய், பக்குவ நிலையில் மறுவீட்டில்(அரைத்த மருதாணி) . 
அவளினுள் இருக்கும் மற்றொரு நிறம், குணம் வெளிப்படுமே, 
அவள் தாயான பின். (மருதாணி நம் கைச் சேர்ந்த பின்).

Monday, 15 July 2024

அறிவு🧘

ஆழ்ந்த உள்ளுணர்வு மற்றும் தெளிந்த உலகறிவும் வேண்டும்
பல செயற்கை நல்லுறவு பற்றி 
தெரிந்து கொள்ள🧘

செயற்கை நல்லுறவில், 
வார்த்தைகள், வர்ணம் சேர்த்த வஞ்சக வலையாக இருக்க கூடும்.
நகைபெல்லாம், நஞ்சில் தரித்த 
பட்டாடையாய் பளபளக்க கூடும். 

தேர்ந்த உண்மை பகுத்தாய்வு செய்யும் அறிவும், 
தெளிந்த தொழில்நுட்பறிவும் வேண்டும்
இந்த செயற்கை நுண்ணறிவு காலத்தில் பயணிக்க.

Sunday, 14 July 2024

பரிசுப்பொருள்🎁 - பரிசின் பொருள்

 நீங்காதே, அதன் பெயர் "நினைவுகள்".
சொல்லாதே அதன் பொருள் "காதல்".
தெரியாதே அதன் பெயர் "உண்மை"
உணராதே அதன் பொருள் "அன்பு"
திரும்பாதே அதன் பெயர் "நேரம்".

நேரம் திரும்பாது என்ற போதிலும்,
தன் அன்பு தனியே தவித்திடாமல் பார்த்து கொள்ளும் உறவு, உன்னதமே❤️

Quality Time is the COSTLIEST gift in any relationship🎁🫶💞🥰💖

பரிசுப்பொருள் 🎁

Saturday, 13 July 2024

ஓர் பாடல்🎼🎶🎵

ஏதோ ஒரு நினைவாகவே சாலையில் நடந்து சென்றிருந்தேன்.
சட்டென்று என்னை கடந்த ஆட்டோவில்,
நான் அவளுக்காக முதன்முதலில் சமர்பித்த பாடல் ஒளித்தது.
ஓர் வினாடி தான் கேட்க நேர்ந்தது.
மீண்டும் அவள் நினைவுகள் மனதில் அலைமோதியது.
அப்போது மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல், 
இப்போது கேட்டால் ரணமாகிவிடுகிறது.

குழல் அழகி❤️

கருத்த குழல் அழகி,
குழலைக் கட்டாமல் பறக்க விடுவாள் என் பைங்கிளி🦜. 
அழகிய மின்னும் குழல், 
ஆர்ப்பரிக்கும் அருவி போல. 
கூந்தல், அவள் தோளில் சரிந்து வருகையில்
என் மனம் சங்கடப்படும்.
அவள் குழலாக நான் இருந்திட கூடாத எப்போது அவளை அணைத்த வாரே என்று🥰. 
அவள் நாணத்தையும், கோபத்தையும் கூந்தலின் உள்ளேயே ஒழித்திடுவாள்,
முகத்தை கார்குழல் கொண்டு மறைத்தவாரே☺️. 
ஆளுயர கூந்தலை அள்ளி முடியும் போது, அதில் என்னையும் சேர்த்தே முடிந்திடுவாள்.❤️

Self Love🧘

என் மெலிந்த தேகத்தில் ஓர் மென்மையான காதல் மலர்ந்தது.
காதல் பூத்ததால், முகமும் பொலிவடைந்தது. 
ஓர் நாள், பொலிவான நிலவொளியில் இருவரும் கடற்கரையில் கனவுகளைப் பகிர்ந்திருந்தோம். 
அவள், என் கையில் தலை சாய்த்தாள். 
எப்போதும் இது போல் என் கைகளில் அவளைத் தாங்க விருப்பம். 
இன்னும் கொஞ்சம் பூசினால் போல் நாம் இருந்தால் நன்றாக இருக்கும்,
தலையணை இன்றி அவள், என் கைகளில் உறங்க என்று தோன்றியது. 
உடலை மெருகேற்றினேன், மனதையும் தான். 

மற்றொரு பௌர்ணமி நாளில், 
அதே கடற்கரையில், என் நிலவு என்னை நீங்கியது, பல இடர்பாடுகளினால். 
இதயம் வலித்தது. 
வலியை விரட்டி அடிக்க, 
மேலும் வலியை உருவாக்கினேன். 
உடலை மேலும் வலிமை படுத்தினேன்🏋️. 
இடதை (இதயத்தை) இரும்பாக்கினேன். 
எந்த கையில் அவள் தலை சாய்ந்தாலோ, அந்த ஒற்றை கையினால் புஷ்அப் செய்ய கற்றேன். 
காலம் கடந்து, இதயம் இதமானது🧘. 
வலியும், வழி மறந்தது. 
புன்னகை பூவும் மலர்ந்தது❤️. 



Friday, 12 July 2024

காதல் கிறுக்கல்💄❤️

காதல் மகாராணி, ஓர் நாள் வெண்ணிற சட்டை அணியுமாறு கட்டளையிட்டாள்🥼.
அவள் கட்டளையே என் சாசனம். 
கேள்வி ஏதும் கேட்காமல், கைகளைக் கட்டி நிற்க சொன்னாள். 
குழந்தை போல எதையோ எதிர் நோக்கி நின்றிருந்தேன். 
உதட்டுச்சாயத்தோடு வந்தவள்💄, 
என் சட்டை பையில், இதய வடிவில் ஓர் "முத்திரை" பதித்தாள்❤️.
என்ன என்று கேட்டால், 
"காதல் கிறுக்கல்" என்று கண்ணடித்தாள்😘.
பாழாய் போனது....... 
சட்டை இல்லை, 
என் மனம் ❤️💞

கைப்பிடியில் வைத்தியம்☺️

மனதில் ஏதோ ஓர்
பரிதவிப்பு,❤️‍🩹.. 
என்னை புரிந்தவள், வார்த்தை ஏதும் சொல்லாமல்.. 
என் கரம் பிடித்து ஓர் கதகதப்பை உணர்த்தினாள்🤝. 
என்றும் உனக்காக  நான் இருக்கிறேன், என்று💞.
மன ஓட்டமும், வாட்டமும் சற்று குறைந்தது, அவள் அன்பின் சமிக்கையால்❤️🫶
கைப்பிடியில் வைத்தியம்☺️

Thursday, 11 July 2024

காந்தம்💞

அஞ்சனம் வைத்த என்னவள்,
கொஞ்சிட பார்த்தாள்😍. 
நெஞ்சம் பஞ்சாய் பறந்தது💓, 
அவள் விழியின் காந்தபுயலில்💕. 
ஒளி ஆண்டின் வேகத்தில் பயணித்து
அவளை விழியோடு விழி 
பார்த்தேன்🥰. 
காந்தவியல் கற்பித்தாள்💞

இளமை திரும்புதே😉

பஞ்சபூதங்களுக்கு வயதாவதில்லை.
ஆனால் பஞ்சபூத தத்துவத்தில் உருவான நம் உடலுக்கு மட்டும் வயதாகிறது.
உடலுக்கு தான் வயதே தவிர உள்ளத்திற்கு இல்லை. 
Soul never gets aged❤️
It's just 16..16*2😉

கற்பனை அழகு😉

எழுதும் எழுத்துக்களில் இருக்கும் உணர்வெல்லாம், மெய்க்கு மாறானது என்று தெரியும்.
ஆனால் அப்படி எழுதுகையில் சுவாரஸ்யமாகவும், 
சந்தோசமாகவும் உள்ளது😍
கற்பனை என்றும் அழகு தானே😉

Wednesday, 10 July 2024

கண்ணாமூச்சி💖

மறைந்திருந்து என்னை ரசித்த மாயவளின் மைவிழி பார்வையால்,
மனதில் ஓர் தடுமாற்றம்💓.
எங்கிருந்து என்னை ஆற்கொள்கிறாள் என்று பார்த்தால், 
என் இதயத்தின் நான்கு சுவர்களிலும் நுழைந்து💕💞,
நான் இங்கு தான் இருக்கிறேன்
என கண்ணாமூச்சி ஆடுகிறாள்💖. 

Tuesday, 9 July 2024

கண்மை

என் மை கலைகிறதே
உன் மெய்யில் பொய்கள் 
கலந்திடும் போது...
என் மை கரைந்திடுதே
உண்மை உணர்ந்திடும் தருணத்திலே.
என் மை, கண்களின் கரைத்தாண்டிடுதே.. 
கண்களில் உன் பிம்பம் படும் வேளையில்.

என்றும் மெருகேறிடும்💖

முகம் பிடித்திருந்ததா, இல்லை
அகம் பிடித்திருந்ததா💕.. 

குரல் பிடித்திருந்ததா, இல்லை
குணம் பிடித்திருந்ததா💞.. 

அழகு பிடித்திருந்ததா, இல்லை 
அறிவின் ஆளுமை
பிடித்திருந்ததா❤️.. 

முன்னவை எல்லாம் காலத்தால் கரைந்திடும். 
பின்னவை எல்லாம் காலத்தால் 
மெருகேறிடும்

Monday, 8 July 2024

❤️அக மகிழ்ச்சி❤️

மலர் 🌹போன்ற என் மகிழினியைப்👸நான் பார்த்தும், 
மலரிடத்தில் செல்ல வேண்டிய 
பட்டாம்பூச்சி🦋 எப்படியோ, பெருங்குடல் அரணையும் தாண்டி வந்து.. 
என் சிறு குடலில் சிக்கிக் கொண்டது. 

கொள்ளழகு குடி கொள்ளும் அவள் கருவிழிகளில்😍.
பாவை, கோடி முறை கொய்திடுவாள் பார்வையால்👸.
என்னழகு என்னை பார்க்கையில்,
நான் நாணத்தில் நனைந்து☺️,
வேர்வையில் குளித்து😊, 
மொழி அனைத்தும் மறந்து, 
சிரிக்கிறேன்🥰. 

அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன் பாடல், நினைவில் 💭
அகம் அளவில்லா மகிழ்வில்💖💕❤️


Sunday, 7 July 2024

மறதி🤔

எழுத நினைத்து, மறந்த சொற்கள்
நினைவில் தோன்றி, நொடியில் கலைந்தவை. 
சொல்ல வந்து, மறைத்த வார்த்தைகள்,
நெஞ்சில் என்றும் நிலையாய் இருப்பவை

காரணம் கள்வனே😎

என்னை கரைத்திடும், 
சில சமயம் கலங்கச் செய்திடும் காதலும்,
காதலை உணரச்செய்யும் 
காலமும், கள்வனும் தான், 
என் வார்த்தைகளுக்கு வேர்🖋️. 

Friday, 5 July 2024

அன்பு💕ஆண்ட்ராய்டு

அன்பைக் கூட அனைவரிடமும் அளவாக வெளிபடுத்தலாம்💕.
ஆனால் கோபம், உரிமை இருக்கும் இடத்தில் மட்டுமே..

அன்பொன்றும் ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் இல்லை. 
தேவைகேற்ப நிறுவி, பின் நீக்க. 
அன்பென்பது, மென்பொருள் போல, 
குறிப்பால் மட்டுமே உணரமுடியும்

அன்பிற்கும் வரையறை வேண்டும். 
தேவையற்ற பதிவிறக்கம் கைப்பேசியின்
மென்பொருளைச் சிதைத்திடும். 
கண்மூடித்தனமான பாசம் மற்றும் இரக்கம், 
அன்பை நேசிக்கும் மனதை மரத்துப் போகச் செய்யும். 

Thursday, 4 July 2024

அன்பு💖

நம் அன்பால் ஏதேனும் 'நல்ல' மாற்றம் ஏற்படுமா என்றால்...
மாறும்..
அன்பாய் இருந்தால் போதும்,
வாழ்க்கை அழகாகும் என்ற நம்
"(மூட) நம்பிக்கை" மாறும்😁.

ஆராய்ச்சியில்லாத அன்பும், 
அளவு கடந்த அன்பும், 
அழகானவை💖

ரசிகன்😍

கன்னத்தில் கை வைத்து, 
அவள் கண்களை ரசிப்பேன்.
பா(வி)வைப் பொய் சொன்னாலும், மிக அழகாகவே சொல்கிறாள் என்பதை கண்களில் ரசிப்பேன். 😍

Wednesday, 3 July 2024

தொழில்நுட்பம்🧚

நேரத்தை சேமிக்க உதவும் தொழில்நுட்பம், 
வேலையை எளிதாக்க பயன்படும் தொழில்நுட்பம்,
நோய் தீர்க்க துணைபுரியும் தொழில்நுட்பம்,
பழையன அறிவதற்கும், 
புதியவை தோன்றுவதற்கும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்,
பேறுகால பருவமான🫄 "பத்து மாதம்"
என்னும் எண்ணிக்கையில் மட்டும்
மாற்றத்தை புகுத்தவில்லை😉.
யார் கண்டார், அதுவும் உயிரியல் தொழில்நுட்பத்தால் மாறலாம். 😎
எல்லாமே வேகமெடுக்கும் காலமல்லவா இது👀

எந்நாளும் நன்னாளே💖

பூக்கள் புத்துயிர் பெற்று புது பிறவி எடுத்திட,🌹🌹
புதுமை எண்ணங்கள், மனதில் புத்துணர்ச்சி அளித்திட💖,
புதிய நன்னாளில் அனைவரது மனதிலும் புன்சிரிப்பு மலரச் செய்வோம். 😊

Tuesday, 2 July 2024

இருகப்பற்று🤝

புன்னகை ஏந்திய அவள் முகத்தை, காலப்போக்கில் மனம் மறந்தாலும், 
பஞ்சு போன்ற அவள் கை விரல்களை, 
அந்த ஸ்பரிசத்தை மறக்கவில்லை என் நெஞ்சம்.
நினைவில் நிலையான உணர்வாய் உள்ளது. 
கரம் கோர்த்து, காலம் எல்லாம் உன்னோடு இருப்பேன் என கடைசியாய் இருகப்பற்றிது
அவளிடத்தில் தான் 🤝🫶

கள்வனின்🥷காதலி❤️

அவள் முகத்தை பார்க்கவே கொஞ்சம் தயக்கம் தான், கூட்டத்தில்.
அவள் நாணத்தை எனக்கு பரிசளித்து விடுவாள், 
சிறு கண்ணசைவினால்😉. 
விரல்கள் கொண்டு, என் விழி வெட்கத்தை மறைந்திடுவேன். 
கள்ளி அவள், 
கள்வனின் காதலி அவள். 

உடன் நடப்பினும், உரசாத கைகள். 
அவள் காந்த கண்களால் , மௌனமாகும் என் மொழிகள். 
மனதை காயம் செய்யாத, அவள் மத்தாப்பு சிரிப்பு. 
என்னை தேடும் கண்கள். 
கண்டதும் கண்களில் ஓர் நிறைவு. 
சின்ன பெரிய கோபங்கள். 
சிரிப்பால் மறையும் சண்டைகள். இப்படி 
அனைத்தையும் அழகாய் பார்க்க கற்றுக் கொடுத்தவள்,
காலப்போக்கில் என் காதலி ஆனாள், நான் அவள் கணவனானேன்💕❤️


Friday, 28 June 2024

அன்புள்ள மனதிற்கு❤️

மனதிற்கு, ஒரு மனம் திறந்த மடல். 
மனதுடன் ஒரு குட்டி உரையாடல். 
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️

சிரித்து பேசுபவர்கள் எல்லாம் சிநேகிதர்கள் என்று சிந்தனை செய்யாதே மனமே...
சிநேகிதர் வேடமிட்டு சில சகுனிகளும் இருப்பர். 
புகழ்ந்து பேசுவதை எல்லாம் பாராட்டு என்று எண்ணிவிடாதே.. 
வாஞ்சையோடு பாராட்டுபவரை விட மனதில் வஞ்சனை வைத்து கொண்டு உரையாடும் உலகமிது. 
தாமரை தண்ணீர் போல் நீ, 
யாரிடமும் ஒட்டி ஒட்டாமல் இரு. 
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️

                           - அன்புள்ள மனதிற்கு, 

Tuesday, 25 June 2024

தூக்கம்😴👶🧑👸🧑‍🦳

தாயின் கருவறையில், நல்லதொரு நித்திரை - கருவாக
பின் தொட்டிலில் தூக்கியது ராஜ துயில் - மழலையாக
விளையாடிவிட்டு களைப்பாக தூக்குவது சிறப்பான உறக்கம் - குழந்தையாக
ஊர் கதை பேசிவிட்டு, உல்லாசமாக உறங்க செல்வது - இளமையாக
சோர்வாகி சொக்கி போய் துயில் கொள்வது - வயது முதிர்ந்தவராக
சோதனை ஓட்டம் முடியும் தருவாயில் இயற்கை தருவது.. 
நிரந்தர நித்திரை 

Sunday, 23 June 2024

மறைந்திருந்து பார்க்கும் 🐒🏞️

மகிழ்ச்சியாய் தவ்வி தாவி ஓடும்,
கிளை விட்டு, கிளை பாயும், 
குட்டியுடன் கொஞ்சி விளையாடும், 
பசித்தால் பறந்து பறந்து இரை தேடும், 
மறைந்திருந்தது பார்க்கும், 
மறுகணமே நம் கையை பதம் பார்க்கும். 
குறும்புக்கார குரங்குக் கூட்டம் 🐒

சமயங்களில் நதிகளும் அப்படி தானே, 
அழகாய் தவ்வி தாவி ஓடும், 
கிளைகளில் பாயும், 
காடுகளில், மலைகளில் கொஞ்சி விளையாடிடும். 
கோவம் கொண்டால், கொண்டாடி தீர்த்துவிடும், 
மனிதர்களைத் திண்டாடவிடும்,. 

மலரவள்❤️

மனதில் நினைத்தால் மறுகணமே தோன்றிடும் மந்தாரப்பூ அவள், 
சிரித்திடும் செவ்வந்தி அவள், 
சேட்டையில் கில்லி, அல்லி மலர் அவள். 
மண(ன)ம் நிறைத்திடும் மல்லிகை அவள்.
நான் பார்க்க மலர்ந்திடும், ரோஜா அவள். 

Friday, 21 June 2024

காதலாய் தமிழ் ❤️

உன்னோடு உரையாடி கொண்டு நெடுந்தூரம் நடந்ததே.. 
நான் படித்து தெரிந்த சிறந்த உரைநடை📙
உன்னோடு இயல்பாய் பேசி பயணித்த கணங்களே.. என் வாழ்வின் விவரிக்க முடியாத இலக்கணங்கள்.📙
உன்னோடு இலகுவாய் இணைந்து சிரித்த நாட்களே வாழ்வின் சிறந்த காதல் இலக்கியங்கள்.📙

Wednesday, 19 June 2024

ஆசை💞

விழுந்து விழுந்து எழ ஆசை உன் காதலில்..❤️
விழுது போல ஆடுகிறேன் மனம் ஊஞ்சலில்🎊
காற்றாடியாய் சுழல்கிறேன் உன் நினைவில்💖
கவிதை வரைகிறேன் கனவில் உன்னை கண்டு.. 💓

மினுமினுப்பு🏖️

தகதகக்கும் தங்கத்தை விட
மின்னிடும் வைரத்தை விட
ஜொலி ஜொலிப்பவள் நான்... 
பகலில் சூரிய ஒளி என்னிடத்தில் சேர்கையிலே மிளிர்கின்றேன்.. 
இரவில் நிலவொளியை நான் பார்க்கையிலே ஒளிர்கின்றேன். 
                - கடல் நீர் /குளம் நீர் 🏖️🏞️

திறவாய்

எனை தேடி வந்தாய்,
வாங்கி வந்தாய், 
அறையில் வைத்து அடைத்தாய். 
எனை திறப்பாய், படிப்பாய் என காத்திருக்கிறேன். 
என்னில் எழுத பட்டிருக்கும் வாக்கியங்கள் வலிமையானவை. 
ஆனால் என் எடை, மெல்லிடையே. 
என்னில் எழுத பட்டிருக்கும் வார்த்தைகள், மக்களைப் பேச வைக்கும். 
ஆனால் நான் மௌனித்து இருப்பேன். 
ஓர் நாள் 
திறப்பாய், ரசித்து, வாசித்து மகிழ்வாய்,
பயனடைவாய் என விரும்புகிறேன். 

                       - இப்படிக்கு
                           புத்தகம்         (பூட்டப்பட்டிருக்கும் புத்தகம்)

கருமை🤍

கூந்தல் கருக்குது🖤
தக்குசிக்கு தக்குஜின்…
வெந்நரை மறையுது🤍
தக்குசிக்கு தக்குஜின்…
மனம் தான் சிரிக்குது❤️
தக்குசிக்கு தக்குஜின்…
கண்ணாடி கண்ணடிக்குது😍
தக்குசிக்கு தக்குஜின்…

கூந்தல் கருக்குது🖤
வெந்நரை மறையுது🤍
மனம் தான் சிரிக்கிறதே.❤️. 
இளமை திரும்பி, கவலை மறந்து
இறக்கை முளைக்கிறதே🦋..…

Sunday, 16 June 2024

குரு

கட்டப்பா முதுகில் குத்தியதற்காக பாகுபலி, குறைபடவில்லை. 
ஏன்னென்றால், பாகுபலி கட்டப்பாவை குருவாகவும், உறவாகவும் நினைத்திருந்தான். 
மரணப்படுக்கையிலும் குருவாகவே
பார்த்தான் பாகுபலி. 
யாரையும் நம்பாதே குழந்தாய் என பாகுபலிக்கு வேறு யார் செயலில் பாடமெடுத்திருக்க முடியும்.

Friday, 14 June 2024

ஓலை விசிறி

ஓலை விசிறி.. 

ஒரு காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்தேன். 
வட்ட மற்றும் செவ்வக வடிவில் இருப்பேன். 
சமரசத்திற்கும் பயன்படுவேன் விசிறியாய். 
சண்டைக்கும் பயன்படுவேன் ஆயுதமாய். 
காற்றும் நானும் காதல் கொள்ளும் போது, இனிய ஓசை ஒலிக்கும். 
மின்சாரம் இல்லா வேளையில், 
மனம் தேடும் முதல் பொருள் நானே. 
பின் என்னை போன்று, நெகிழியிலும் வடிவமைத்தனர். 
இப்போது வண்ணமிகு நிறங்களுடன், சிலரின் வீட்டு சுவரில் அலங்காரப்பொருளாய். 
அங்கொன்றும், இங்கொன்றுமாய் திருவிழாக்களில். 
பலர் விசிறி எதற்கு என்று என்னை விசிறிவிட்டனர். 

Thursday, 13 June 2024

இயற்கை இனியவை🌾🌳🌴

பச்சைப்பசேல் என வளரும் நெற்கதிர்கள்...🌾
அவற்றை சுற்றிடும் வெள்ளை கொக்குகள்..🪿
வயலின் நடுவில், வயலின் இசைக்கு
நடனமாடும் மயில்கள். 🦚🦚
வரிசையாக வாழைத் மரங்கள் அவற்றை காக்க, 
சுற்றிலும் தென்னந்தோப்புகள்🌴🌴.
இளைப்பாற மத்தியில் 
வேப்ப மரம்🌳. 
அனைத்துக்கும் நீர் ஆதாரமாய்,
கம்மாய் மற்றும் வற்றாக் கிணறு. 
அதில் இருந்து சீறி வரும் நீரில் 
தாகம் தணிக்கும் ஆக்கள். 
துள்ளி விளையாடும் ஆடுகள். 
இயற்கையோடு இணைந்து இருப்பது ஓர் வரம். 

Tuesday, 11 June 2024

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்❤️

அகம் அழுவதை, அழகாய் வெளிக்காட்டிடுதே உன் அகண்ட விழிகள்.
பொய்தான் உரைக்கிறாய் என்பதை தெளிவாய் பறைசாற்றிடுதே உன் வாய்மொழிகள்.
வார்த்தைகளில் 
மெய் மறைக்கிறாய்.. 
சிந்தனையில் 
மெய் மறக்கிறாய்...
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்❤️

Monday, 10 June 2024

உயிரே(ஆன்மா)

கண்கள் காணாத அதிசயம் நீயே...
என் உயிரே.❤️.. 
எப்படி என்னுள் வந்தாய் என்பதும், 
எப்போது விடை பெருவாய் என்பதும்.. உன் முடிவே,
என் உயிரே.

Thursday, 6 June 2024

விருப்ப பாடம்

கஷ்டமான பாடமாக இருந்தால் கூட,
அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் எளிமை படுத்தி சொல்லிக்கொடுத்தால் பாடத்தைக் கற்று விடுவோம். 

அது போல தான் வாழ்க்கை பாடமும். 
கஷ்ட காலத்தில் சிலர் அதை கடக்க உடன் இருப்பர். துயரிலும் துணை இருப்பர். 

சில சமயம், 
அந்த ஆசிரியரிடம் நற்பெயர் எடுக்க ஆசை கொண்டு, அந்த பாடத்தில் தனி கவனம் செலுத்தி படிப்பவரும் உண்டு. 

நம் வாழ்க்கை, நம்மை சார்ந்தது. 
நம் மேல் நாம் தான் தனி கவனம் செலுத்த வேண்டும். 

நாயகன்🦸

இடர் தனை இடித்து,
துயர் தனை துடைத்து, 
கலகங்களைக் கடந்து,
களம் பல கண்டு, 
கரை ஏறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கையில் திரைக்கதையின் நாயகன், 
கதாநாயகன் ஆகிறான்.

Wednesday, 5 June 2024

அரசியல் பழகு✍️

நமக்கு எதுக்கு அரசியல், 
அரசியல் பத்தி தெரிஞ்சு நம்ம என்ன பண்ண போறோம் னு விலகிய காலங்கள் உண்டு.

அட, என்ன பா நம்மள வச்சி தான் முக்காவாசி அரசியலே பண்ணுறாங்க அப்படின்னு புரியும் போது..
😐

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி யுக்தியை கையாளுறாங்க இந்த யுகத்தில்.
அது எல்லாம், வெறும் யுக்தி தான்,
நிதர்சனம் இல்ல, நிஜம் இல்ல அப்படிங்கற உண்மையை உணர்ந்துட்டு வாழ்க்கைய நகர்த்தினா நல்லது.

'அரசியல்' எங்கோ மேடை போட்டு பேசுபவர் "மட்டும்" செய்யும் வேலை அல்ல.

Political Manipulation for Power never ends.🔥
Manifesting People with Reliable Election Manifesto is Real Power. 

Tuesday, 4 June 2024

விண்ணைத்தாண்டி 💞

நிறையாத சாலையில், 
நிதானமான சாரலில், 
நில்லாமல் நானும், 
நினைவுகளும்.. 

உன் கண்களில் மின்னும் ஒளியால் கவிழ்ந்து போனதே, 
என் இளமையும்,
இதயமும்.
என் காதலும் கனவும் உன்னை சேரவே, 
விண்ணைத்தாண்டி வருகிறேன்💕

Monday, 3 June 2024

நரை🙆 பிழை ✂️

அவளின் பிம்பத்தைப் பார்த்து வருந்தினாள்.. எவ்வளவு நரை என்று 

நான் : நரை அழகு தான் கண்ணே
அவள் : நரை அழகா?? 
நான்: பிறை அழகா??!!
அவள் : பிறை அழகு தான்.
பிறை அழகு மட்டும் அல்ல.. சிவனின் தலையில் இருப்பதால் தனி விசேஷம் பற்றிருக்கிறது.
சந்திர தரிசனம் புண்ணியம் என்பர்.
பிறை தெரிவதை வைத்தே பல பண்டிகையும் வரும். 
பிறைக்கு என்ன பிழை😏.. நன்றாக தான் உள்ளது😒.. ஹ்ம்ம்... 

நான் : (மனதின் குரலாய்) அழகா என்று தானே கேட்டேன். அதற்கு ஏன் அரை பக்க கட்டுரை??!!.. 
சரி பெண் தானே. அப்படி தான் பதிலளிப்பாள் என்று எண்ணிக்கொண்டேன். 

நான் : இரவில் பிறை அழகென்றால், உன் கட்டுக்கடங்கா கருநிற கூந்தலில் மலரும் நரையும் அழகு தான். 

அவள்: ஓர் பார்வை🤨
நான் : ஓர் சிரிப்பு 🙂
(மனதின் குரலாய் : எப்படியோ சமாளிச்சிடோம்.. இல்லனா பார்லர் போனும் னு பர்சை பதம் பார்த்து இருப்பா. ஏதோ பேசி இப்ப தப்பிச்சுடேன்) 

அவள் : என்ன என்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றான். 


Sunday, 2 June 2024

காதல் கலிவெண்பா❤️

மேகம் மலையோடு செய்யும் தீண்டல். 
பனி, மலர் இதழோடு கொள்ளும் ஊடல், 
நான் பிடிக்க, சிறகடிக்கும் 
அவள் கரங்கள்..
என் சிகை சீவிடும் அவள் விரல்கள்..

தீரா பேச்சுக்கள் மூலம் 
தீர்ந்திடும் கோபங்கள்..
இனிப்பின் தித்திப்பு தூக்கலாய் சுவைத்திட,  சிட்டிகை உப்பு சேர்ப்பது போல், 
காதல் வாழ்க்கை இனித்திட, சின்னஞ்சிறு கோபங்கள் கூட அன்பால் தானே. 
அவை அழகு தானே. ❤️

காதல் க(ளி)லிவெண்பா🌹

               🦋முற்றும்✍️

Saturday, 1 June 2024

கடமை❤️காதல் (SitaRamam❤️-10)

SitaRamam ❤️ - 10

கயவர்களின் கதை முடிக்க, கடமை அழைத்ததால்,
காதல் மனைவியின் கரம் நீங்கி போர் களம் புறப்பட்டேன். 
அவளைப் பிரிகையில், மலை அளவு கனம் என் மனதில்.
அவளின் கண்ணீரில் கஷ்மீர் நதியே நனைந்தது.

நெடுந்தூரம்  சீதையே ஓடி வந்து கணையாழியைக் கொடுத்து.. ஈரம் காயும் முன்னே வந்திடுங்கள் என்றாள்.

போரில் வெற்றி என்றாலும்.. 
காதலில்..... 

என் காதல் மனைவியை, மகாராணியாய் பார்க்க விழைந்தேன். 
ஆனால் அவள் மகாராணி தான் என்று அறிந்த அந்த நொடி💔... 

எனக்காக.. எங்கள் காதலுக்காக... அனைத்து சுகபோகங்களை விட்டு வந்தவள். 
தன் ராஜ்ஜியத்தை ராஜினாமா செய்தவள்❤️ . 

நான், அவள் விரும்பிய ராணுவ வீரன், ராம். 
அவள் என் மேல் கொண்ட அபிமானத்தை ஒருநாளும் அறுத்தெறிய மாட்டேன். 

உயிர் நாட்டுக்காக.. 
உள்ளம் அவளுக்காக.. 

எப்பிறவியிலும் சீதாவின் ராமனாக,
இந்திய ராணுவ வீரனாக. 
                                               - ராம்✍️

காதல் தலைவியுடன்💕(SitaRamam ❤️-9)

SitaRamam❤️ - 9

ஓர் நாள் பனிப்பொழிவில், பளிங்கு சிலையாய், காற்றை கீறிக்கொண்டு எனை வந்தடைந்தாள்.
உன் உலகின், முதல் உறவானாள்💞.
எனக்காக மாளிகை மறந்து வந்தவளை மகாராணியாய் பார்க்க விழைந்தேன். 

மனதோடு உற்சாகம் மங்கை அவளை காண்கையிலே. 
விழியோடு வானவில், 
அவள் என் விழியில் படுகையிலே❤️

கடல் நீர் உப்பை போல் நாம் இருந்திட வேண்டாம். 
சூரிய கதிர்கள் நம்மை பிரித்திடக்கூடும். 
இல்லை பச்சையம் போலவும் இருக்க வேண்டாம். 
காலம் நம்மை பிரித்திட கூடும். 
என் விழியாக நீ இருக்க வேண்டும் வேண்டும். 
உன்னுடன் சேர்ந்து நான் உலகம் பார்க்க வேண்டும். 


வாழ்நாள் வரம்❤️👸(SitaRamam💖 8)

SitaRamam ❤️ - 8

என் காதல் தலைவிக்கு தைரியம் சொல்ல, மீண்டும் படை எடுத்தேன் மாளிகைக்கு🏃.
ஒரு கண்ணில் ஏக்கமும், மறு கண்ணில் மிரட்சியும் கண்டேன்🥺.
என்னுடன் அழைத்து செல்ல வந்தேன், 
ஆனால் அன்பிற்கினியாள் அவகாசம் கேட்டதால், அரைமனதுடன் திரும்பினேன்😔.

ஆனால் என்ன ஆச்சரியம்☺️!! , அதிசயம்🤩!! அரைநொடி பொழுதில் என்னுடன் அவள்... தொடரியில்🚈..
மகிழ்ச்சியில் மனம்.💖. 
மனையாள் உடன் பயணிக்கையில் மனம் இரட்டிப்பாய் துடித்தது❤️.

அவளுடன் நான்.... 💕
என்னோடு அவள்... 💞
விளைநிலத்தில் விளையாடி,
டென்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்து, 
மிதிவண்டியில் மிதந்து மகிழ்ந்தோம். 
காரப்பதார்த்தம் உட்கொள்ளாதவள், 
எனக்காக அதை பழகிக்கொண்டாள். 
திருக்கோவில் சென்று தீர்கசுமங்கலி வரம் வாங்கி வந்தாள், என் வாழ்நாள் வரமானவள். 

மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி சென்றவள், வராததால்.. 
மீளாத் துயரில் தனியே தவித்தேன்❤️‍🩹. 
கஷ்மீர் குளிரில் என் கண்ணீர் கூட உரைந்தது.. 🥹


தங்கத் தாரகை💕

அடி சிரித்த செவ்விதழ் சிலையே🧚 சினம் கொள்ளும் கனி அமுதே.😉
உன் கரம் பற்றி, 
காதல் கரையேற காத்திருக்கும் கள்வன் நானடி.💕

புன்னகை உன் புன்சிரிப்பு புன்னகை தரும்,  புத்துணர்வை இந்த பூக்களும் தருமோடி!!!? 🌹💖
தாரகை தங்கத் தாரகை, 
என் மன மாளிகை உனக்கே உறைவிடமடி💞


Friday, 31 May 2024

ஸ்வீட்டி பெண்ணே💞


என் Twitter Tweet நீயேதான் என் ஸ்வீட்டி பெண்ணே.
என் பாஸ்வேர்ட் மறந்து போனேன் அடி உன்னால் கண்ணே. 
ஹே பெண்ணே..இளம் பெண்ணே.. நான் சொல்வதெல்லாம் உண்மைதானே..
நீ என்னோடு இருந்தால் நம் தோட்டத்தில் தினம் தோறும் பூ மழை தானே..
ஹே பெண்ணே மணப்பெண்ணே
வா முன்னே.. என் முன்னே
உன்னில் என்னை காண்பேனே

என் வாழ்வில் தென்றல் காற்றாய் உள் நுழைந்தாய். 
என்னை புல்லாங்குழலாய் மாற்றி, காதலெனும் கீதம் பாட வைத்தாய். 
மண்ணாய் விரிந்திருந்தேன், விதையாய் விழுந்து உயிருக்கு வாழ்வளித்தாய். 
மரமாய் நின்றிருந்தேன், மலர் கொடியாய் சுற்றி என்னை அழகாக்கினாய். 


Thursday, 30 May 2024

💭🤔 ✍️

என்னோடு சொல்லாமல் போகும் அன்பை, 
என்னவென்று தான் நான் அழைப்பதோ. 
என்னோடு நில்லாமல் நீங்கும் நிழலை, என்ன சொல்லி தான்,
நான் தடுப்பதோ.
நீங்காமல் நிற்கும் நிலையானதென்றும்,
நிகழ் காலத்தில், நினைவேதும் உண்டோ..

Little Hearts Happiness - 2💕

Having Maruthaani in hand and showcasing it to all.🖐️

After school, Running race to home along with friends.. So distance doesn't a matter at all.🏃

New dress for special occasions.. 
New dress for Only special occasions👚.. 

Wearing hand full of Bangles and creating the bang 🔊 , while using eraser on notebooks.

Playing in grounds..until body gets exhausted.⚽ 

Checking height with friends in prayer line, as if everyone is growing in rocket speed. 


Wednesday, 29 May 2024

Little Hearts Happiness💕❤️

Eating....❤️

Dipping the biscuit in Water and swallowing it before the biscuit pieces falls into water.

Drinking health drinks by drawing a temporary mustache over lips. 

Eating the cream biscuit, by liking it even everyone is around. 

Buying Aasai and Maha Lacto Chocolates. 

Punching the cheeks when someone keeping water in their mouth. 

Putting lipstick only for Annual Day Programs and careful not to smudge the makeup. 

Packing dresses for grandma home visit, after the Exams. 

Excitement on the Last day of Exam and First Day of the school. 

Getting new books and notes. Wrapping it with Brown cover and Sticking the Labels as Medals of the Book. 

Pedaling the Cycle which is taller than us. 

Learning Swimming in Well by screaming out from Stomach. 

Getting audio cassette of new films and dancing for it. 

Removing the tape from cassette and reloading it with Pen. 

Waiting for the Favourite movie to be telecasted in TV after three years of release on some special occasions. 

Using hero pen and microtic pencils. 

Loading..... 🦋🦋





Tuesday, 28 May 2024

காதல்❤️🌹🦋🦋 (SitaRamam❤️ - 7)

காதல்❤️🌹🦋🦋 (SitaRamam❤️ - 7)

அவளுடன் காதல் மழையில்❤️🌧️ நனைந்து, அவளின் நினைவுகளால் நிறைந்திருந்தேன்.
காதல் நோய் 💖தொற்றிக் கொண்டது. 
ஆம் பசி இல்லை, உறக்கம் வரவே இல்லை. 
பிணி தீர, மனமுருகி பிராத்தனை செய்தேன் மருந்தீஸ்வரிடம்🙏. 
சொல்லிவிட்டால், 
தீராத காதல் நோயும் தீருமென்றார். 
அப்படி செய்தால், என் நோய் அவளிடம் தொற்றிடுமே💕. 
பாவம் தான் அவளும். 

சொல்வதற்கு இனிய சொல்லாம் காதல், 
யாரோ சொல்லிச் சென்றது💗. 
காதல் நோய் முத்தியதால், முதன் முதலாக திருடிவிட்டேன், 
ஆம், அவள் என் மனதைக் கொள்ளை கொண்டது போல். 
மாயாஜால நிகழ்வில், அவளின் ரோஜா இதழ்கள்🌹, பட்டாம்பூச்சியாய் மாறினவே🦋🦋.. அதை தான். 

எதிரியின் கோட்டைக்குள் புகுந்து கொடி ஏற்றும் எனக்கு, 
காதல் கோட்டைக்குள்❤️ போவது, சிரமமானதாய் தோன்றியது. 

ஒரு வழியாக,
என் நாட்டியப்பேரொளியைக் 
காதல் கோட்டையில் சந்தித்தேன். 
நான் கொண்டு வந்த பட்டாம்பூச்சிகள் அனைத்தும், 
மலரிதழ்கள் மேல் அலங்கரிப்பது போல், 
என் மணவாட்டியைச் சூழ்ந்தது🌹🦋. 
அவளும் ரோஜா மலர் போலவே, 
செந்நிற சேலையில்❤️🌹. 

அவளை அருகில் அழைத்து, 
கரம் பற்றி🤝, 
கண்ணோடு கண் பார்க்க😍, காதலோடு, 
முழுமனதோடு என் திருமண விருப்பத்தை விவரித்தேன்💞. 
பாவையின் பார்வையில் ஒருவித பயம், பதற்றம்.. அவளின் சுவாச முறை கூட மாறியது. 
அவளின் அருகில் இருந்ததால் உணர்ந்தேன். 

எதற்காகவோ பயந்தவள், 
விடை சொல்லாமல், விடை பெற்றாள். 
புரியாமல் பித்தனானேன். 

 

Monday, 27 May 2024

மாயக்காரி😍 (SitaRamam ❤️-6)

மாயக்காரி😍 (SitaRamam ❤️-6)

நாங்கள் நிலை கொள்ளாப் புன்னகை ஏந்தி பயணித்தோம்.
ஒரு மழை பொழுதில்⛈️🌧️, 
என் வினாவிற்கான விடையை விடுவித்தாள். 
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம்". 

அன்று அவளின் உயிரையும், உடமையையும் காத்திருக்கிறேன்  ஒரு சராசரி ராணுவ வீரனாய். 
அக்னியின் சாட்சியாய் முதலில் அவள் கரத்தை பற்றியவன் நான் தான், என்ற உண்மையை அவள் சொல்லி அறிந்திட்டேன். 

சும்மாவா சொல்கிறேன் அவளை மாயக்காரி என்று, 
உண்மை எனக்கு விளங்கியதும், வெட்கப்பட்டு மாய மான் போல் 
ஓடி மறைந்தாள். 

சந்திப்புகள்💕☃️ (SitaRamam❤️ - 5)

சந்திப்புகள்💕☃️ (SitaRamam - 5)

எதையும் பற்றி அதிகம் சிந்திக்காமல்🤔,
நித்தமும் அவளுடன் நடந்த சந்திப்புகள்💞,
பேச்சுக்கள்😊, 
எனை பூமியில் இறக்கை கட்டி பறக்க விட்டன💗. 
இது தான் என்று விளக்கிட முடியாத மகிழ்ச்சி கடலில் மனம்💕.
நான் கரம் பற்ற விழைகையில்,
விலகி சென்றவள், 
ஒரு நொடி பொழுது,
என் கரம் பற்றி🤝, என் பிரபஞ்சத்தை நிறுத்தினாள்☃️.
ஆம் நிறுத்தியே விட்டாள்🌏. 
காஷ்மீர் பனியில் கூட உறைந்திடாத தேகம்🏔️, 
அவள் கரம் பற்றியதும், குளிர்ந்தது☃️. 
நான் நிதானத்திற்கு வர, நேரமானது💖. 

Sunday, 26 May 2024

Geometry Box📏✏️

Geometry Box.
 
Where I am the Pencil, She is the Lead✏️. 
While I am the Sharpener, She is the Cutter. 
When I am the Ruler📏, 
She is the Markings on me.
In Compass💞, I am the Pencil fixed to it,
I can move around flexibly, but always in her hands. 
Though She is the rigid point, her rigid nature makes me to fulfill what I meant for. 
Well, In Protractor and Divider, 
She is my Better Half💕,
Yeah She is my Base Point.
Finally, We are the Eraser, To Correct the mistakes in the Pages of Our Life to make it Better. 

கடிதங்கள்📝

கடிதங்கள்✉️..

எங்கோ, எதிலோ நீங்கள் படித்து கேட்ட வார்த்தை.
நாங்கள், காலச் சக்கரத்தில் மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக 
ம(டி)றைந்தவர்கள். 
ஆனால் நாங்கள் தாங்கி வந்த 
உணர்வுகள், என்றுமே உயிர்ப்புடன் இருக்கும்,.. 
அந்த உணர்வுகளை, நினைவுகளை பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பர், 
இப்போது நினைவுகளை எல்லாம் தரவாக, தரவு மையங்களில் வைப்பது போல்📧. 

கடிதங்கள் என்றாலே, 
காதல் என்ற சொல் தான் நினைவுக்கு வரும்💌. 
நாங்கள் காதலை மட்டுமே 
கரைச் சேர்ப்பவர் இல்லை,
பலரின் கனவுகளையும், 
கருத்துக்களையும், கரைச் சேர்த்திருக்கிறோம்📜. 
சிலரின் கண்ணீரைத் துடைத்திருக்கிறோம். 

கடிதங்களை எழுதும் போதும்📝, 
படிக்கும் போதும், 
சிலர் புன்னகைப்பர்😊, 
சிலர் கண் கலங்குவர்😪, 
சிலர் ஆர்பரிப்பர்😁, 
சிலர் வருந்துவர்😔. 

உறவுகளின் பாலமாய் இருந்தோம்🤝. 
சிலரின் கோபம் கூட, நாங்கள் தாங்கி வந்த எழுத்துக்களைப் படிக்கும் போது பறந்து போகும்💌. 
எழுதி விட்டு, அனுப்பாமல் அடைகாத்த கடிதங்களும் உண்டு💌. 

நாங்கள் வெறும் காகிதம் தான்,
எங்கள் மேல் "மை" விழாத வரை. 
நாங்கள் பறக்க தயாராகி விடுவோம், 
சிறு சோற்று பசையுடன், அஞ்சல் முகவரி எழுதிவிட்டால். 

நாங்கள் இன்றும் இயங்குகிறோம், 
அலுவலக கடிதங்களாய். 📨

Saturday, 25 May 2024

காதல் பொழுதில்🌞☀️🌝🌙🌟

விடிந்தும் விடியாத விடியற்காலையில்,
உன் விழியில் விழ, 
சூரியன் உதித்து வருவார்🌞.

நண்பகல் நடுவில்,
உன் முகம் பிரகாசிப்பதைக் கண்டு நாணி, 
நான்கு திசைகளிலும் தன் கதிர்களை மறைப்பார்🌞☀️.

அந்தி மாலையில், நம் தோட்டத்தில்
நீ நடப்பதால், 
உன் நறுமண ரகசியம் அறிய, 
மலர் இதழ்கள் ஓன்று கூடி பேசிடும். ஆகையால் மொட்டாய் மாறிடும்🌹. 

இரவில் சில சமயம் உன் முகம் காணாததால், திங்கள் தேய்ந்து போகும். 🌙🌜🌛

ஜாமத்தில் அந்த யாமத்தில், 
நீ துயில் கொள்ளும் அழகை காண வானில் தவமிருக்கும் கோடி நட்சத்திரங்கள். 🌟⭐🌌🌠💫💫💫💫💫


Friday, 24 May 2024

அமிழ்தே நீ

Tune Inspired : அமிழ்தே நீ song
from hi Nanna. 
(mid portion) 

சொல்லாமல் சொன்னாயா, 
இம்முறை செல்லாமல் இருப்பாயா. 
எல்லாமே சொல்லிவிட்டு தான், விட்டு சென்றாயா.
மெய்தனை மறத்தாயா. 
இல்லை பொய்தனை உறைத்தாயா.
என் உலகை திருடி, உன் இதயத்தில் மறைத்தாயா. 



மெய்யழகன்❤️🕴️🕺🕵️👳👮

ஈரமான இதயகாரன்❤️, 
இதமான பாசக்காரன்💗, 
சிரிக்க மணக்க பேசிடுவான்😁,
சிலசமயம் சினம் கொண்டு சீறிடுவான்👮. 
வேசம் கட்டி ஆடிடுவான்🕺. 
பொய் வேசம் போட்டால், 
சங்காரம் செய்திடுவான்🥷. 
உழவை உயிராய் நினைப்பவன்👳. 
உளவாளி போல் சிந்திப்பவன்🕵️. 
அழகு கண்களால் காதல் கதை பேசிடுவான்😍. 
அரும்பு சிரிப்பால் ஆளை மயக்கிடுவான்💖.
ஆயிரத்தில் ஒருவன் 🫅
அவன், மெய்யழகன்🕴️. 

Thursday, 23 May 2024

மாயாஜால மாலை வேளை (SitaRamam - 4)❤️

பக்கத்தில் வந்த பட்டாம்பூச்சி🦋 பறந்த பின், பல பகல்கள் தேடியும் பார்க்க முடியவில்லை.
அவள் மாயாஜாலகாரி ஆயிற்றே🧚
மறைந்திருந்தாள், 
என்னை அவள் நினைவில் மயக்கியவாறே🪄. 

மாயக்காரி🧚 போவதாய் சொன்ன
நிகழ்ச்சி பற்றி நாளிதழில் பார்த்தும், பறந்தேன். 
மலர் மங்கையை👸 மேடையில் பார்த்தேன். 
அவளது ரோஜா மலரின் இதழ்கள்🌹 ஒவ்வொன்றும், 
பட்டாம்பூச்சியாய்🦋🦋 உருவெடுத்திருந்தன அந்த மாய கண்ணாடி குவளைக்குள்🔮. 

மாயக்காரியின் பெயர் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு, 
இந்த மாலை நேர சந்திப்பின்
மூலம் .. 
அழகின் முகவரியும், 
என் நங்கை, நாட்டிய பேரொளி என்பதையும் அறியலானேன். 

அவள் புன்னகை வீசிட, பல சுவாரஸ்யமான பேச்சுக்கள் பகிர்ந்தோம். 
உரிமையுடன், "ஹே சீதா" என்று அழைப்பதற்கான உறவாய் இருக்க 
ஆசை கொண்டேன்.❤️ 



Wednesday, 22 May 2024

குழல்🖤

கரு நிற சேலையில்,
மிக அழகாய் மின்னிடும், வெள்ளி ஜரிகை. 
சூரிய கதிர்களின் நிறத்தில், ஆங்காங்கே தங்க ஜரிகை. 

கருநிற சேலையில், மல்லி மலர் வைத்த, அல்லி ராணி
தான் எப்போதும் என் இதயத்தின் இளவரசி👸. 

கருநிற சேலை - அவளின் 
கருநிற கூந்தல். 
வெள்ளி ஜரிகை - வெண்நரை
தங்க ஜரிகை - 
செந்நிற குழல்/கூந்தல் 


Tuesday, 21 May 2024

கண்ணாலே😍

கண்ணாலே பேசி பேசி கொல்கிறாள். 
கண்ணாலே காதல் சொல்லி செல்கிறாள். 
கண்ணாலே என்னை தீண்டி, 
உடலின் உஷ்ணத்தை
உயர செய்கிறாள். 
என் உள்ளம்.. சின்னப்பிள்ளை தாங்காது உன் பேரன்பை,
என் அன்பே..என் அன்பே❤️

Monday, 20 May 2024

கண்டேன் சீதையை❤️(SitaRamam - 3)

Sita ❤️ Ram (SitaRamam - 3)

நான் தொடரியில் தொலைத்த சிலை, 
என் முகவரிக்கு வந்து சேர்ந்தது. சறுக்கி விழ நேர்ந்தாலும்,
விரும்பி விரைந்தேன், 
சிலையவள் எனக்காக வீடு வந்ததும். 

அவள் அனுமதி இன்றி,
நிழலாய் தொடர்ந்து,
நிழல் படம் 📸 பிடித்தேன். 
சிலையவள் சேலையை வீசி சிறகடித்தாள். 

விருப்பத்தை வெவ்வேறு விதத்தில் விவரித்தேன். 
விடை ஏதும் சொல்லாமல் விரைந்தாள். 

மழையையும், என் மனதினையும் தனியே தவிக்க விட்டு, பறந்தாள்
பட்டாம்பூச்சியாய்🦋🦋🦋🦋


Sunday, 19 May 2024

ராமன் தேடிய சீதா.( SitaRamam - 2)

Ram in Search of SitaMahalakshmi. 
(SitaRamam❤️ - 2) 

அவளைப் பார்க்க விரைந்தேன். 
தொடரியில் தேட தொடங்கினேன்.
இவர அவர என்று மனதில் அலைப்பாய்ச்சல்.
என் தேடலின் முடிவில் நான். 
கும்மிருட்டு சொரங்கப்பாதையில், 
என் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன, 
யார் என்ற கேள்வியுடன். 

எங்கள் கடவுச்சொலால் பதிலைப் பதித்தேன். 
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம்". 

"ராம்". 

உயிர் வந்தது, 
ஒளியும் வந்தது. 
நான் தேடி வந்த உறவு, 
என் கண் முன்னே சிலையாய் நின்றது. 
என் காதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில் நான் ❤️


Saturday, 18 May 2024

Bloody Memories😆

கண்ணுறங்கும் போதிலும் நெஞ்சு உறங்க மறுக்குதே. 
என் நிழல் எனை நீங்கிய நேரத்திலும், 
உன் நினைவு தொடருதே.
ஏதோ ஒரு நிழல் படம், 
ஏதோ ஒரு நினைவை எழுப்புதே. 




பாரதி🖋️

பாரதியின் எழுத்துக்கள்✒️
கவி படைக்கும்,
கதை சொல்லும், 
கடவுளைக் கண் முன்னே காட்டும். 
கன்னியர் முன்னேற்றத்தைப் பேசும்.
அனைவரும் சுவாசிக்க விரும்பும் சுதந்திர காற்றை வீசும்🖋️

Friday, 17 May 2024

வெட்கம்😊

நான் அவளை பார்த்திருக்க😍
அனைவரும் என்னை பார்க்க😜
அறிமுகம் இல்லா வெட்கம்😊, 
முகவரி தேடி, 
என் முகத்தில் வந்தது😀. 

Oh my dear🌹.. 
You are making me to feel cheer😁
Everyday, everywhere when you are near😊


நீ மாய நிழல்📸

Tune Inspired : Nee Maaya Nizhal Song 
From hi Nanna📸🎶🎵. 

விராஜ்
நீ பேரொளி யா, இல்லை 
பெரும் வலியா, 
நம் வாழ்வினிலே இனி யாரு நீ யாரு. 
நீ மலர் மணம் மா, இல்லை
மன கனமா, 
கண்களில் நீர் 
பெருகிடுதே, 
அதில் தெரிவது யார். 

ஒரு வானத்திலே, இரு வானவில்லா? 
மீண்டும் காதலைக் கண்களால் 
உணர செய்தது யாரு. 
கடலின் கால் தடத்தை, 
கரையினில் பதிப்பதைத்
தடுப்பது யாரு. 
மனதை கிள்ளிவிட்டு, 
மருந்திட மறுப்பது யாரு, 
நீ கூறு.. 


Thursday, 16 May 2024

Sita Nee Yaaru (Sita Ramam❤️ - 1)

Ram getting letters from SitaMahalakshmi. 

Sita Nee Yaaru..... 
(Sita Ramam❤️)

யாரவள் யாரவள், எனக்கானவள், 
யாரவள் யாரவள் எனை ஏற்றுக்கொண்டவள். 
நான் உணர்ந்திடாத அன்பை 
உணர செய்தவள். 
விலாசம் இல்லா கடிதங்கள் மூலம், என் வாழ்க்கைக்கு விடை சொன்னவள். 
அறிமுகமில்லாமல், மறைமுகமாய் என் மனதை ஆக்கிரமித்தவள். 
கண்கள் கண்டிராத, 
காவியமானவள். 
யாரவள் யாரவள். 


Wednesday, 15 May 2024

முதல் மழை (spoof lyric)

முதல் மழை - பீமா (spoof lyric)

Vikram
முதல் மழையினில் நனையாதே. 
மூடி வைத்த ஜன்னல் திறவாதே. திறந்தால் குளிர் காற்று அடிக்கும் அருகில் நிற்காதே, 
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காதே. இடியுடன் ஓ மின்னலும் தோன்றுமே. 

Trisha:
முதல் மழையினில் நனைவேனே. மூடி வைத்த ஜன்னல் திறப்பேனே. திறந்தால் குளிர் காற்றடிக்கும், அதை ரசிப்பேனே. 
ஜன்னல் வழியே எட்டிப் பார்பேனே. இடியுடன் ஓ மின்னலும் தோன்றுமே. 

Vikram:
தலை வேதனை வரும் என்று தானே நான் கூறினேன். 
ஆனால் சொல் பேச்சு கேளாமலே நனைந்தாய். 

நம் வீட்டினில் இன்று தைல வாசனை. 
நில்லாமல் உன் நாசியில் நீர் வழிவதை உணர்ந்தேன். 

Trisha:
என்னை மீறி வரும் கண்ணீரை, 
கண்களில் அடக்க தானே முயன்றேன். 
அதையும் மீறி வரும் தும்மலை, 
இரு கைகளால் தடுக்க தானே முயன்றேன். 
முடியாமலே சற்று தளிர்ந்தேன். 
உன் தோளில் சாய்ந்தேன். 

ஓர் நாள் தும்மல் வராவிட்டால், 
என் வாழ்வில் அந்த நாள் போல் இன்பநாள் இல்லை. 
ஓர் நாள் தும்மல் வந்தே விட்டால், அந்நாளில் ஒரு வேலையும் ஓடவில்லை. 

Vikram:
மருந்தினால் வரும் மயக்கம் நீங்காமலே அந்நாளில் இருக்கும். 
நீ சொல்பேச்சு கேட்காவிட்டால், மீண்டும் இதுபோல தானே நடக்கும். மீண்டும் இதுபோல தானே நடக்கும். 





Tuesday, 14 May 2024

hi NANNA 📸🎸🎶

விராஜ்:
நினைவு  தொலைத்த பூவே 
மீண்டும் என் நிஜத்தில் வந்தது ஏனோ
விரும்பி, விளம்பி அமைத்த நம் வாழ்வை
விபத்தில் விட்டது நானோ. 
வெதும்பி, விலகி தொலைவில் இருத்தேன், 
நீ விரும்பிய வாழ்க்கை வாழ. 
விதியின் விரல் பிடித்து வந்தாயோ, 
என் கண்கள் மீண்டும் உனை காண. 
 
யஷ்னா:
காட்டாற்று வெள்ளத்தை
யார் மறைத்தாலும், 
பாதை மாற்றினாலும், 
மறவாது கடல் சேருமே. 
அதுபோல, என்னை உன்னிடம் இருந்து யார் பிரித்தாலும்,  
நானே என்னை மறந்தாலும், 
நம் காதலால் இணைவோமே
நாம்💕. 
              -  hi நான்னா🎸🎶📸

Monday, 13 May 2024

திரையிசை நாயகனே🎼🎵🎶

Tune Inspired : Jeevithagaadhakale song
from Varshangalkku Shesham

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

இசையின் முதல் மொழி ஸ்ருதியும் லயமும் தானே🎼

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

எதிர்வரும் ஓர் நாளில் சூரிய ஒளி ஒளிரும் சமயம், 
உலகெங்கும் நம் கீர்த்தனம்🎶 ஒலிக்கும் காலம் வருமே

ராகத்தாளங்கள், நாத கீதங்கள்🎶🎵 சேரும் ஓர் பாடல் காலம் காலமாய் வாழும்.
ஸ்வர ஜதில் உயிர் பெறும் பாடல் ஆழமாய் நினைவில் வேரூன்றி இதயத்துடன் இசைத்திடுமே.🎵

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

பநிசா நிச பரிதா மபநிசா
பநிசா நிச பரிதா மபநிசா 
மாபநிசா மாபநிசா

வேறு எதிலும் கிடைத்திடாத மன அமைதி இசையின் வடிவில் உணர்கிறேன். 
ஏழு ஸ்வரங்கள், 
ஏழேழு ஜென்மங்கள், 
எப்பிறப்பிலும் என் நாத கீதம் இசைதானே. 🎼🎵
என் இசையின் ராகமே, ராகமாலிகா கீதங்களே.🎷🎸 

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.(2)

Sunday, 12 May 2024

அன்புள்ள அகிலமே👶

நீயே என்தன் அதிசயம்👶.
உன் புன்னகையில் நான் மலர்கிறேன். 
என் மகிழ்ச்சி, உன் சிரிப்பாலே
பல்கிப் பெருகும். 

உன்னோடு இருக்கையில், 
உலகம் மறக்கிறேன்👶. 
உன் பிஞ்சுக் கை விரல் தீண்ட, 
பிரபஞ்சத்தின் 
கருணை உணர்கிறேன். 

தோளில் தூங்கும் தங்கம் நீ👶. 
புரண்டு எழும் பவளம் நீ. 
தத்தி தவழும் மேகம் நீ. 
அமர்ந்து, விழுந்து எழும் வைரம் நீ. 
நடை பழகும் நந்தவனம் நீ. 

மீண்டும் குழந்தையாகிறேன்
உன்னோடு👶. 
நானும் வளர்கிறேன், 
என் கண்ணோடு. 




Sweet❤️

அழகாக அலங்கரித்து,🎂 
வண்ணமிகு நிறங்களுடன்🍡 வெவ்வேறு வடிவங்களில்🍨 கண்களில் வட்டமிடுகிறாய், 🍧
பஞ்சு போல் கரைகிறாய்🍰, 
தித்திப்புடன் இனிக்கிறாய் 
நாவில்🍦. 
அளவாய் சாப்பிட🧁, 
அமிர்தம் தான் நீ🧋

குஷி

நான் எங்கோ வடக்கே வங்கத்தில்🧭.
அவள் அங்கே, தென்றல் வீசிடும் தெற்கில்.❄️
கைக் குழந்தைகளாய்👶 கரம் பிடிக்க விளைந்து, விலகினோம்👣. 

பின், சுடர் காக்க கரம் சேர்த்தோம்🤝. கண்கள் சந்தித்து, சிரித்தோம்😊. 
விதி எங்களை ஓர் இடத்தில் இணைத்தது,  நட்பாய்🧚. 
ஆனால் விதி யாரை விட்டது.

கருமேகங்களின் இடையில் மிளிரும் நிலவைப் பார்ப்பது போல், 
சிற்றிடை பார்த்தேன். 
சினம் கொண்டு சண்டையிட்டாள்.
அவள் கோவத்திலும் ஒரு குழந்தை சிரித்தது. 
அவள் அக்னி பார்வையில் அன்பு மறைந்திருந்தது. 

ஆனால் கோபத்தை விழியின் விளிம்பில் விதைத்து, 
சிரிப்பை உதட்டின் ஓரத்தில் புதைத்தே நாட்களைக் கடந்தோம்.
காதலின் கனம், கண்களில் மட்டும். 
என் சுவாசத்தை கூட சந்தேகித்திடுவாள். 

பிரிவின் வலி, இதயத்தில் வேராய்🫀
இருந்ததால், 
இருவரும் மனவேலியை, விட்டெறிந்து
எங்கள் காதலை, 
கடிதத்தில் பகிர்ந்தோம். 
ஓர் மனம் திறந்த, 
மௌன உரையாடல்❤️. 
காதல் எழுத்துக்கள், எங்களை
கரம் சேர்த்தது. 
மணநாளில் 🦋 மலர் இதழ்கள் இணைந்தன🌹🦋
                           - SivaJenni🌞


நூலகம் நல்லகம்

வலிகள் இல்லாத வாழ்க்கை,  வாசகர் இல்லாத நூலகம் போன்றது. வாசகர் நூலகப் புத்தகங்கள் மூலம் தெளிவு பெறுகிறார். 
அது போலவே வலிகளும் நம் வாழ்க்கையில்.
நூலகம்.. நல் அகம்

Saturday, 11 May 2024

Titanic❤️

திரைகடல் ஓடியும் திரவியம் தேட முற்பட்டேன். 
காலம், கலத்தை நம் காதல் களமாக மாற்றியது. 
கடல் காற்றில், நம் காதலைச் சுவாசித்தோம். 
எதிர்பாராத இடைவெளி கலத்தில். 
நடுக்கடலில் நாம். 
கரையைத் தேடிடும் கண்கள். 
கலம் வேண்டி கலங்கிடும் உள்ளம். 
கரைச் சேர்ந்து, 
உன் கரம் சேர துடிக்கும் மனம்.
ஆனால், எதிர்பாராத இடைவெளி நம் காதல் கணத்தில்.
நீ வாழ்ந்து, உன் மனதில் காலமெல்லாம் நான் வாழ்வேன், என்ற மகிழ்ச்சியில் பிரிகிறேன் உயிரே❤️
                - Jack ⚓⛵❤️

கண் பேசும் பாஷை

இதழ்கள் இணைந்து இசைத்திடா வார்த்தைகளைக், 
கண்கள் இணையாமலே, 
உணர்த்திடும். 

நவரசமங்கை

நவரசமங்கை

சிரித்தால், அவள் செந்தாழினி முறைத்தால், அவள் மோகினி
வீரத்தில், அவள் வேலுநாச்சியார் 
காதலில், அவள் கவிதாயினி
பயத்தில், அவள் பருவ மங்கை 
கோபத்தில், அவள் சண்டை கோழி 
இரக்கத்தில், அவள் பாரியின் பங்காளி 
சாந்தமாக இருக்கிறாள் என்றால், அதுவே உலகின் எட்டாவது
அதிசயம்


ஊமை விழிகள்

கார் கதவோரம் தலைச் சாய்த்து, காற்றை ரசித்திருந்தேன். 
எதிர்காற்றில் எதேச்சியாக அவள் முகம். 

அவளா, என்று எட்டிப் பார்ப்பதற்குள் தூரம் கடந்து விட்டது. 
கண்களில் தூசி விழுந்தது போல் கண்ணீரைச் சரி செய்து, 
அவள் அருகில் சென்றேன், நினைவுகளாலும் 
நெஞ்சத்தினாலும். 

ஊடல் - 2

கயல்விழியாள் என்னை கடிந்து பேசலாமா
செவ்வாய் இதழ் என்னை சங்கடபடுத்தலாமா
சங்கு கழுத்துடையாள், என்னிடம் சண்டையிடலாமா
கொடி இடையாள் என் மேல் கோபம் கொள்ளலாமா
வாழைத்தண்டு கால்கள் என்னிடமிருந்து விலகி ஓடலாமா

Friday, 10 May 2024

செல்லக் கிளியே 🦜

அறியாமல் போன அரிய 
சிலை நீயடி,
உன்னை அறிய ஆர்வம் அதிகம் தான் ஆயினும்,
அனுமதி வேண்டி அமைதி காக்கிறேன்.
சிறிதேனும் சிதறாமல் அள்ளிக் கொள்வேன்,
என் செல்லக் கிளியே🦜
முத்து மயிலே🦚. 
உன் முக பாவனைகளால் என்னை மூழ்கடிக்கின்றாயே👸💕

என்னவள்

தாரகை👸 - என் மனதில், அவள் தவழ்ந்திடும் குழந்தை👶

மங்கை👸 - என்னை மன்றாட வைக்கும் மதிவதனி 🌕❣️

காரிகை👸 - அவள் அன்பால் என்னை கரைத்திடும் கண்மணி 😍

மாயோள்👸 - அவள் மென்மையால், என்னை மயக்கிடும் மகிழினி🦋

பாவை👸 - அவள் பார்வையால், என்னுடன் மௌனமாய் போரிடும், 
பர்வதவர்த்தினி🧚





Thursday, 9 May 2024

வரமே 👶

நான் தினம் தோறும் வாசிக்கும் கவிதை நீயே 👶
நான் நாளெல்லாம் ரசித்திடும் சித்திரம் நீயே 👶
சில சமயங்களில் விடை தெரியா விடுகதையும் நீயே 👶
என் கணங்கள் நீயே 👶
என் கனகம் நீயே 👶
எல்லோர் மனங்களின், மகிழ்ச்சி நீயே 👶
பிள்ளைத்தமிழ் நீயே 👶
நான் தூளியில் தாலாட்டிடும்
தங்கம் நீயே 👶
என் நித்திரைக்குச் சிம்ம சொப்பனம்
நீயே 👶
என் சொப்பனத்தில் தோன்றும் அழகு சொர்ணம் நீயே 👶
என் பூலோக சொர்க்கம் நீயே 👶🧚👣
என் வாழ்நாள் வரம் நீயே 👶🦋🧚

Little Wonder👶

My Little Wonder👶
My Little Wander👣
My Little Lightening Wonder🧚
My Little Chatter 😎
My Little Flatter 👶
My Little Wonder Wow😍

Wednesday, 8 May 2024

கொலுசொலி👸🧚

நிசப்தம் மிஞ்சும் ஜாமத்திலும் உன் சப்தமாய் கொஞ்சும் ஒலி❄️ 
நிலவு அயரும் நேரத்திலும், 
நான் உன் இம்மையை உணரும் வேளையிலும், 
நான் கேட்க காத்திருக்கும் ஒலி, 
உன் கொலுசு ஒலி❤️

அந்த நொடி சிலிர்ப்பு

பௌர்ணமி நிலவு🌕
தென்றல் காற்று
அல்லி மலர் தோட்டம்🌷
ஒற்றையடி பாதை👣
எதிரில் அவள்👸
விலக வழி இல்லை😎
மனமும் இல்லை💕
அந்த நொடியில், அல்லி மலர்களில் வாசம் கொண்ட பட்டாம்பூச்சி எல்லாம், என் வயிற்றில் 🧚🦋🦋🦋

காதல் ❤️ அரும்பு

பரிதவித்தேன் உன் பார்வை படுமா என்று😎 
பதறிப் போனேன் நீ அருகில் வந்ததும்😶‍🌫️ 
சில மணி நொடிகள் நான் நானாக இல்லை ❣️
நினைவு திரும்பியது, 
உன் நிழல் என்னை நீங்கியதும்💓

என் மங்கை 👸

உச்சி வெயிலிலும் 🌞 
உள்ளங்கால் மணல் தொடப்பேன், 
என் துணைவி என்னுடன் நடக்கையில்👩‍❤️‍👨 
மலரின் இதழ்🌹 மென்மை என்று வண்டுக்கு யார் சொன்னது. 
என் மங்கையின் இதழ்💋 அதனின் மென்மையானது. 
அருவி போன்ற அவள் கூந்தல் காற்றில் கூத்தாட 🧚
அதனால் என் பருவம் அவள் காலடியில் மன்றாட❤️

Monday, 6 May 2024

கற்பனை உரையாடல் 💭🧚😂

விதியுடன் ஓர் குட்டி உரையாடல்😎

Me: சுட்டி சிட்டி சித்திரகுப்தன்🫅 எழுதிய விதியே🧚!! சோதிக்கின்றாயே😂😅
சும்மா இருக்கிற என்னைச் சுற்றி வதைக்கின்றாயே, 
சுலபமானவற்றையும், சிக்கல் ஆக்குகிறாயே
Here is a Tongue Twister😜 for
My Life Twisting Fate🧚🧚

Factu Fate😎.. 
Late Fate😂.. 
Act Late😉.. 
Act Fate😅 
Repeatu👼
Heart beat rate Shoots fast🫀🫀🫀🫀

Fate🧚:பாயாசம் சாப்பிடுறீங்களா                       Friend😎
Me:       ஆஹா, எடு ஜூட் 🏃🏃🏃
Fate🧚: யார்ட்ட, மண்ட பத்திரம்..          எனக்கே Twistu Test ah



Saturday, 4 May 2024

ஈர்ப்பு விசை 🌏

புவியியலில் படித்தேன், 
பூமியில் தான் ஈர்ப்பு விசை உள்ளதென்று🌏

உன் கண்களில் அறிந்தேன் 😍
நீ அதை களவாடி விட்டாய் என்று😶‍🌫️

இப்படிக்குப் பூங்காற்று❤️

பெண் ஒருத்தி அமர👸 
பொன் ஊஞ்சல் ஆட 
ஆட்டுவிக்கும் நாயகன் நான்👼 ஆடுகின்ற பேதை அவள்🧚
             - இப்படிக்குப் பூங்காற்று 

கடலும் 🌊 பெண்ணும் 👸 - 2

நான்கு கரைக் கண்ட கடலின் அலைகள் எழுப்பும் சப்தம் கூட🌊 நான்கு அறைக்குள் ஓர் பெண் எழுப்ப உரிமை குறைவு🙄 
கடலின் அதீத நிசப்தம்... 
பெண்ணின் அதீத மௌனம் ... 
இரண்டுமே ஆபத்தானவை❌ கடலின் சீற்றம்🌊 
பெண்ணின் கோபம்❤️‍🔥

கடலும் 🌊 பெண்ணும் 👸

நான்கு கரை கொண்ட கடலின் அழகி - அங்கே கரைச் சேர வரும் அலைகள்🌊. 

நான்கு சுவர் கொண்ட வீட்டின் அழகி அங்கே கரை ஏறி வரும் அலை மகள்❤️

Friday, 3 May 2024

Easy... AC

AC💞❤️‍🩹
நீ இல்லாம இருக்கவும் முடியல
உன்ன வச்சு, தீனி போடவும் முடியல 
Sun Rise 🌞ஆகுறது பாக்க Happy தான். 
ஆன Sun Rays🌞, Raise ஆனா 😥 
EB Bill Raise ஆகி, 
Pocket காலியாகுது. 
ஜாதகத்தில Sun Sign ☀️நல்ல இருக்கனும். 
இயற்கையில SunShine☀️ கொஞ்சம் 
Dull ஆனா, மக்கள், மாக்கள் எல்லாம் 
Jill ஆகி, Jolly ஆவாங்க. 🌧️🌧️


Sunday, 28 April 2024

உன்னதமான அன்பு 💕

ஆஹா.. அவளின் மென்மையான  அன்பு ❤️மென்பொருள் என்பேன்🧑‍💻 பார்க்க இயலாது. 
உணர மட்டுமே இயலும்
உணர்கிறேன்.. உருகுகிறேன்..
உன்னதமான அவள் அன்பினில்🦋

விழிகளிலே😍

அழகாய் நெய்தாள் - பட்டை🧶🪡  அன்பால், ஆழமாய் கொய்தாள்
என்னை, அவள் விழிகளால் ❤️

அழகு - 2

நீலக்கடலுக்கு வெண் நுரை அழகு🌊 
நீல வானிற்கு வெண்மேகம் அழகு🌧️
நிலவிற்கு கறை அழகு🌙
கவிதைக்கு அழகு அதில் இருக்கும் எழுத்துப் பிழை😉
பெண்ணிற்கு, அவள் வெட்கம் அழகு 🌹☺️

மரம் பேசுகிறது

மரம் 

அவசரமாய் நகரும் நகர வாழ்வில்,
அசராமல் நின்றிருந்த என்னை அவசியம் இல்லை என்று எண்ணி,
அலட்சியமாய் வெட்டி தூக்கி எறிந்த மானுடா..
மனம் இருந்தால் என்னைப் போன்ற ஒரு செடியை நடு

                  - மரம் 

உயிராய் நீயே🦋

கரு மேகங்களில் நீர் 🌧️⛈️
துளிகள் நிறைந்திருப்பது போல மலர்களில் அமிர்தம் மகரந்தத்தில் திளைத்திருப்பது போல 🌹🌺
தென்றல் காற்றில், நீரானது மறைந்திருப்பது போல 🌿
என்னுள் நீ 💞
உன்னுள் நான்💕

Friday, 26 April 2024

சுடாதே🗡️

பாவையை வையாதே🤫
சுடும் வார்த்தையால் மனதினை கொய்யாதே🤐
திட்டித்தான் தீர்க்காதே மனதினில்❤️‍🔥 அதன் அதிர்வென்பது🥁, 
சூரிய ஒளி போல் சுடுகிறதே☀️ தொலைவினிலும்

கண்மணிக்காக❤️

எங்கெங்கும் எதிலும் அவள் மலர்முகம் தானே பார்க்க கேட்கிறேன்🦋
எப்போதும் மனதில் 💓❤️

எப்போதும் மனதில் அவள் குரல் தானே கேட்கிறேன் 💞
இதயத்துடிப்பாய்

கண்கள் மட்டுமே கடத்தும் காதலைக் காண காலம் எல்லாம் காத்திருப்பேன்
கண்மணிக்காக, என் கண்மணிக்காக💓

Thursday, 25 April 2024

வாழ்க்கை பாடம்

தூக்கி எறிய வேண்டியவற்றை ஒருநாளும் தூசு தட்டாதீர்கள்
பின் கண்கலங்கி கொண்டு போகாதீர்கள் 
நினைவுகளும் அப்படித்தான். 
முற்று வைத்துவிட்டு முன்னேறுங்கள். 
காகித கப்பலில் ஏறி கரை சேர்ந்தோர் இல்லை. 
பொய் என்று அறிந்தும் அதில் மெய்க்கான துடிக்கும் பொன்னான மனதை என்ன செய்வது? சென்டிமென்ட் எல்லாம் மறந்து போச்சு. 
மனசு சண்டே ஆபிஸ் மாதிரி ஃப்ரீ ஆச்சு. 
மனம் சிரிக்க மட்டும் தான் முன்பு செய்தது, 
சிந்திக்க ஏனோ மறந்தது. 
நீ சொல்ல சொல்ல தான் உண்மை நன்கு அறிகிறேன், 
உண்மை உணர்கிறேன்

தமிழே💓

நீயே என் எழுத்துக்களின் ஆதாரம் நீயே என் வார்த்தைகளுக்கு தொடக்கப் புள்ளி 
நீயே என் எண்ணங்களின் மொழி நீயே என் முகவரி 
தாய் தமிழே 
நன்றி

மனைவி❤️

அவள் என் தாரம் 
அவளே என் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் 
அவளே என் புன்னகைக்கு ஆதாரம் அவள் ஒரு தசாவதாரணி 
அவள் என் ராணி 

ஓவியமே என் காவியமே

விழியால் புன்னகைத்து, 
மனதை திருடிய மாயமோகினி🦋 புன்னகை வலையை வீசி ஆயூளுக்கும் என்னை கைதியாக்கிய சீமாட்டி💕 சித்தன்னவாசல் சித்திரமே மெச்சும் செல்வச்சீறுமீர்காள்❤️. 
ஓவியங்களே, இவள் காவியம்தானோ என்று எண்ணும், பெண் ஒருத்தியை உச்சி வெயில் வேளையில் என் நித்திரையில் கனா கண்டேன்💭💤

அழகே அமுதே தமிழே

அன்பு தமிழே🫶
ஆசை அமுதே💞
இனிதினும் இனிதே💓
இயற்கையின் செறிவே🌧️
ஈசன் மகனின் உயிரே - என் கனியே💝
உள்ளத்தின் உவகையே🦋
ஊர் போற்றும் உறவே💖
தமிழே💕

Monday, 22 April 2024

பொய்யும் கடந்து போகும்

மாறி மாறி மாற்றி பேசினால்
மாறி விடுமோ உண்மை.
மறந்திடுமோ மெய்யை, 
மனம்!! 🤔
மறக்க மனத்திற்கு சில காலமாகும்..
பொய்யும் பொய்த்து காலமாகும் 💔

தாய் /தாரம்

தாய்/தாரம்

அவளின்றி என் அகிலம் இல்லை 
 அவளின்றி எனக்கு அன்னம் இல்லை 
  அவளின்றி அணுவும் என்னில் அசைவு இல்லை
 அவளின்றி அன்பு இல்லை அவளின்றி ஆறுதல் இல்லை அவளின்றி என் ஆன்மா இல்லை 
நானும் இல்லை

காதலின் கரை தேடி

ஓர் சிறு சிரிப்பினாலே உள்ளம் கவர்ந்த கனவே❤️
இரு சிறு விழிகளில் என்னை சாய்த்த கனிவே🫶
  வெல்வோம் விண்ணையும் மண்ணையும்💕.. 
சிரித்து மகிழ்ந்து☺️, 
 அடித்து, அணைத்து❤️‍🔥, 
அனைத்து காதல் உறவையும் அறிய..
 காதலின் கரை தேடி கரையலாம்💖

Friday, 5 April 2024

புனைவு புன்னகை

நீ ஒரு புதிர்
நான் உன் எதிர் 
நம் காதல் ஓர் புனைவு புன்னகை 

Sunday, 17 March 2024

வா... செல்வோம்

வா.. இசைந்து செல்வோம்👫
வா.. கடந்து போவோம் 
கடந்த காலத்தை💕 ..
வா.. காதலில் கரைந்து, 
காலம் தாண்டி
கதைகள் பேசி நடப்போம்💞.. 
வா.. இயற்கை ரசிப்போம்🌧️☔ 
வா.. வானவில் வரைவோம்🌦️🌈.. 
வா.. மழையையும், நம்மை நணைத்திடும் மலராக்குவோம்🌧️🌹

உன்னாலே உன்னாலே

ஆனந்த சிரிப்பு உன்னாலே😂
ஆழ்ந்த சிந்தனை உன்மேலே☺️

அழகிய நேசம் உன்னாலே😊 
அன்பான காதல் உன்மேலே🫶

அழுத காலங்கள் உன்னாலே💘 ஆயினும் அதிக பாசம் உன்மேலே🦋

ஆயிரம் முறை பிரிந்தேன் உன்னாலே🏹
அலாதி கோபம் உன்மேலே 

My பாப்பா

அவ வெக்கப்பட்டு சிரிச்சா, தத்தித்தாவுது மனசு😉.. 
அவ கண்ண விட்டு மறைஞ்சா, 
பித்தாகுது என் மனது🙃.. 
கூட தானே இருப்பா🧑‍💻.. 
தள்ளி நடப்பா🦋..  
கொஞ்சம் சிரிப்பா😊, 
நல்லா முறைப்பா🤨.. 
அடிச்சு பிடிச்சு வந்திடுவா, என் கனவுல💕.. தினமும் எட்டி பாப்பா👀.. வாலு பாப்பா 🫶💖

Saturday, 9 March 2024

மனதின் ஒலி

உன் விழிகள் பேசும் மொழி அறிந்தேன்
அன்பே, விலகாது இரு என சொல்வதை உணர்ந்தேன். 

பொன்னினும் பெரிது உன் கொஞ்சல் மொழி. 
சிறிதேனும் குறைத்திடாதே, 
அதுவே என்  நெஞ்சின் ஒலி 

Tuesday, 5 March 2024

கண்களின் கனம்

கண்கள் கனத்து விட்டது,
எதேச்சையாக உன் பெயரை கொண்டு 
வேறு ஒருவரை அழைத்த போது.. 💘

வெறுத்து விட்டேன், விலகி விட்டேன், நெடுந்தூரம் சென்று விட்டேன், என்று நினைத்தேன்.. 

எல்லாம் பொய் என கண்களின் கனம் உணர்த்தியது 

Thursday, 29 February 2024

காதோரம் ஒரு காதல்

என்னவளின் காதோரம் கார்குழல் படர கண்டேன்..
அவளின் ஜிமிக்கியில் ஜம்மென உராய்ந்து, என் கவனத்தை கவர்ந்தது. 
என் அன்பிற்கினியாளின் அருகில் சென்று,
ஜிமிக்கியை மெலிதாய் தட்டி, 
குழந்தை போல் சிரித்தேன். 
அவளின் காதோரம் உறவாடும் உரிமை எனதல்லவா 😉


Thursday, 8 February 2024

நந்தநந்தனா #nandanandanaa

தொடத்தொட நகரும்
சின்ன வண்ண மேகமே 
நீயே எந்தன் நந்தநந்தனா

என்ன என்ன மாயம் 
செய்ய எந்தன் வாழ்வில் வந்தாயோ நீயே என்றும் எந்தன் நந்த நந்தனா

மெலிதாய் எளிதாய் பேசி உள்ளம் கவரும் சகியை 
நீயே எந்தன் நந்தனந்தனா

காதலை சொல்லியும் சொல்லாமல் எத்தனை முறை பறந்தாலோ இது போலே.. பட்டாம்பூச்சியாய்..
நீயே எந்தன் நந்தநந்தனா

பார்வைகள் பார்த்தும் பாவை பார்க்காதவள் போல் எத்தனை முறை பார்த்தாலோ.. 
நீயே எந்தன் நந்தநந்தனா 

 இதயத்தை இழுத்து செல்கிறாள் வயதை வதைத்துக் கொல்கிறாள் சித்திரமாய் அவளே என்னுள் நிற்கிறாள் நந்தநந்தனா.. 

Thursday, 1 February 2024

அழகு

மௌனமும் பேசும் -விழியின் அழகு இரட்டை வானவில் - வானின் அழகு சண்டையிட்டு பின் சிரித்தல் - காதலின் அழகு 
மனிதர் கேட்டிடா வண்ணம் இரும்புகள் பேசும் - மென்மையின் அழகு

Friday, 26 January 2024

செல்

நினைவில் நிற்காதே செல் நிஜத்தில் நீ இல்லை செல்
கனவில் நிழலாய் தொடராதே செல்
மனதில் மலராதே செல்
முகத்தை மறக்க வேண்டும் செல்

Wednesday, 24 January 2024

வாக்கு, வெற்று வாக்குறுதி

வாக்கு - உணர்வுக்கு மதிப்பளித்து உளமாற உதிர்த்திடும் வார்த்தைகள். 
வெற்று வாக்குறுதி - உண்மை இல்லாத உள்ளங்களால் நேரம் கடத்த மட்டுமே உறவாடும் வார்த்தைகள்

பிரிதலும் அழகே..

பிரிதலும் அழகே.. 
பிரிந்தாலும், முகம் நினைவில் நிழலாடும் நிமிடங்களில்
மனதில் ஒரு சிறு மகிழ்ச்சி மலர்ந்தால், பிரிவும் அழகே. 
புரிதலுடன் கூடிய மென்மையான பிரிவு வலி தந்தாலும், 
காலம் கழித்து கண்கள் சந்தித்தால் விழியில் நீர் சுரக்கும் ஆனந்தத்தில்

Monday, 22 January 2024

ராம்

வைதேகி விழியில் விழுந்தாராம்🦋 வில்லை வளைத்தாராம்🏹
விண்ணவர் வாழ்த்த வைதேகி கரம் பற்றினாராம்🤝
விதி வசத்தால் வனவாசம் கொண்டாராம்🏞️
வாழ்வில் நடப்பது நன்மைக்கே என்றாராம்🙏
வாழ்வில் வசந்தம் துறந்தாராம்🏜️ வானரம் உதவிட விழிமொழியாளை மீட்டாராம்✨
பார் வணங்கும் பகலவனாய் மிளுர்கிறார் ராம்🙏🌟
 

Tuesday, 2 January 2024

அமைதி மௌனம்

அமைதி மௌனம்

 அமைதி - மனதில் ஒன்றும் ஓடாது. 
 மனம் லேசாக உணரும் தருணம். 

மௌனம் - ஆயிரம் எண்ணங்கள் மனதில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தாலும், சொல்லி என்ன ஆக போகிறது என்று பாரமாக இருக்கும் தருணம். 

வேடிக்கை

சில சமயம் முதுகில் குத்தியவர்களைப் பற்றி, 
முதுகில் குத்திக் கொண்டிருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்போம். 
இப்படி செய்து விட்டார்களே என்று. வேடிக்கை👀

Monday, 1 January 2024

தமிழ் மொழி

நீயே என் எழுத்துக்களுக்கு ஆதாரம்✒️ 
நீயே என் வார்த்தைகளின் தொடக்க புள்ளி 🖋️
நீயே என் எண்ணங்களின் மொழி📝 நீயே என் முதல் முகவரி🖊️
தாய் தமிழே நன்றி🤝

கடிகாரக் காதல் ⌚🫶

கண்கள் இரண்டால்👀
காலம் காட்டும் கண்மணியே⌚ 
என் கைகளில் தவழும் 
தார"கை"யே⌚ 
மோகமுள் தைத்தாய் மனதினில் உன் மாறுபட்ட வடிவங்களால்⌚ 
சில சமயம், காலம் தவறாய் நீ காட்ட உன் காதை திருகி கொடுத்தேனே⌚ இதயத் துடிப்பாய் மெல்லிய ஓசையில் நீ ஓட ⌚
காலம் தாண்டியும் கைகள் கோர்க்கிறோம்⌚🤝🫶⌚