Monday, 9 November 2026

செல்ல மகனே

கண்ணடித்து கலக்கும் பேரழகே, 
கள்ளச் சிரிப்பில், 
மயக்கும் சித்திரமே, 
சின்ன கனியமுதே, 
நீ வாழ வேண்டுமே.. 

என் உலகமும் உவகையும், 
ஒருசேர நீயே.. 
உயிரே என் இன்புணர்வே, 
நீ வாழ வாழ்த்துது மனமே. 

என் செல்லமே மகனே, 
எங்கள் காதலின் வரமே, 
எங்கள் உயிரின் ஆதாரமே, 
நீயே சுடரே... 

மதி நிறைந்த சூரியனே, 
எங்கள் மைந்தனே, 
பாருலகம் பாராட்டும், 
பால் வண்ண நிலவே.. 

தந்தையின் முகமும்.. 
தாயுள்ளம் கொண்ட, 
சுடர்மிகு விளக்கே.. 
அழகு பெட்டகமே

 உனை வியந்து பார்க்கும் இந்த பூலோகமே... 

என் செல்லமே மகனே, 
எங்கள் காதலின் வரமே, 
நீ நீடுழி வாழ வேண்டுமே 

Sunday, 8 November 2026

செல்லமே மகனே

கள்ளச் சிரிப்பில் , 
மயக்கும் சித்திரமே, 
கண்ணடித்து கலக்கும் பேரழகே, 
நீ நீடூழி வாழ வேண்டுமே, 

என் உலகமும் நீயே, 
என் உவகையும் நீயே, 
இன்முகத்தால், இன்புற செய்யும் சேயே
நீ நீடூழி வாழ வேண்டுமே, 

என் செல்லமே மகனே, 
எங்கள் காதலின் வரமே, 
எங்கள் உயிரின் ஆதாரமே, 
நீ நிறைய பெற்று வாழ வேண்டுமே. 

மதி நிறைந்த சூரியனே, 
எங்கள் மைந்தனே, 
பாருலகம் பாராட்டும் பால் வண்ண நிலவே, 
நீ நீடூழி வாழ வேண்டுமே, 

தந்தையின் முகமும், 
தாயுள்ளம் கொண்ட அழகு பெட்டகமே, உனை வியந்து பார்க்கும் இந்த பூலோகமே, 
செல்லமே மகனே, 
நீ நீடுழி வாழ வேண்டுமே... 

Sunday, 20 September 2026

உன் நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த காதலும்,
நினைவுகளும் உன்னோடு தான். 
சில கால நினைவுகள், 
பல காலங்கள் ஆனாலும் அகலாமல், 
ஆழமாய் அகவையின் அகத்திலே

Monday, 6 July 2026

முதன்முதலாக 😍

முதன்முதலாக பெற்றோர் முகம் பார்த்த நினைவுகள் இல்லை, வருத்தம் தான். 

பல்லாண்டு ஆகினும், முதன்முதலாக உன் விழி பார்த்த, நினைவு மட்டும் என்னோடு,.. இன்றும் மறவாமல்.. 
வருத்தம் தான், ஏன்னென்றால் அது ஒரு வலி தான் 

Friday, 19 June 2026

அழகான தருணம்

பல்லாண்டு பிறகு பிரியத்திற்குரிய பாவை, 
என் பார்வையில் பிடிபட்டாள்.
புன்னகையோடு பேசுவாள் என்று எண்ணி நெருங்குகையில்..
எள்ளும் கொள்ளும் அவள் பார்வையில். 
பதறி பின்வாங்கினேன்.. 
சட்டென விழிநிலையில் மாற்றம்.
அருவியான அவளின் கண்கள்.
மீண்டும் பதறி போனேன். 
ஓரிரு நிமிடங்களில் அவளே வானிலை போல் மாறி, அமைதி கொண்டு, பின் புன்னகைத்தாள். மகிழ்ந்து போனேன். 
அப்பாடா... 
ஓரிரு வினாடிகளில் அவ்வளவு அழகான தருணங்கள்.. சில தடுமாற்றங்கள்