ஒரு காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்தேன்.
வட்ட மற்றும் செவ்வக வடிவில் இருப்பேன்.
சமரசத்திற்கும் பயன்படுவேன் விசிறியாய்.
சண்டைக்கும் பயன்படுவேன் ஆயுதமாய்.
காற்றும் நானும் காதல் கொள்ளும் போது, இனிய ஓசை ஒலிக்கும்.
மின்சாரம் இல்லா வேளையில்,
மனம் தேடும் முதல் பொருள் நானே.
பின் என்னை போன்று, நெகிழியிலும் வடிவமைத்தனர்.
இப்போது வண்ணமிகு நிறங்களுடன், சிலரின் வீட்டு சுவரில் அலங்காரப்பொருளாய்.
அங்கொன்றும், இங்கொன்றுமாய் திருவிழாக்களில்.
பலர் விசிறி எதற்கு என்று என்னை விசிறிவிட்டனர்.
No comments:
Post a Comment