திரைகடல் ஓடியும் திரவியம் தேட முற்பட்டேன்.
காலம், கலத்தை நம் காதல் களமாக மாற்றியது.
கடல் காற்றில், நம் காதலைச் சுவாசித்தோம். எதிர்பாராத இடைவெளி கலத்தில்.
நடுக்கடலில் நாம்.
கரையைத் தேடிடும் கண்கள்.
கலம் வேண்டி கலங்கிடும் உள்ளம்.
கரைச் சேர்ந்து,
உன் கரம் சேர துடிக்கும் மனம்.
ஆனால், எதிர்பாராத இடைவெளி நம் காதல் கணத்தில்.
நீ வாழ்ந்து, உன் மனதில் காலமெல்லாம் நான் வாழ்வேன், என்ற மகிழ்ச்சியில் பிரிகிறேன் உயிரே❤️
- Jack ⚓⛵❤️
No comments:
Post a Comment