Saturday, 9 November 2019

Reality

The reality is, our expectations are beyond reality..
Love,
Respect, 
Sacrifice 
Smile... etc

Sunday, 14 July 2019

தனிமை

நானும் என் தனிமையும் கைக்கோர்த்து நடந்திடும் நேரம்..
காற்றில் மலர் வாசம் மலர்ந்திடும்..
எண்ணங்களை, வண்ணங்களால் வரைந்திடும் மனது..
மனதின் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்திடும் உறவு, தனிமை..
இரவோ, பகலோ பிரிவு இல்லா உறவு..
உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனது..
பலருக்கு தனிமையின் தரிசனம் கனாக்காட்சி..
சிலருக்கு என்றும் துணையாய் வரும் மனசாட்சி, தனிமை.
தனிமையிலும் இனிமை காண முடியும்.. மனம்  தனிமையைத் துணையாய் எண்ணி பகிர்ந்து கொண்டால்.

Friday, 12 July 2019

பொய்

உலகம் பொய்
உற்றார் பொய்
உறவு பொய்
உள்ளத்தில் பொய்
உதட்டில் பொய்
உண்மை என்பதே பொய்

Thursday, 27 June 2019

காகித - மை காதல்

மனம் மய்யல் கொள்வது உன்னோடு
   மை மண்டி இடுவது உன்னோடு

மனதின் ஆசை உன்னோடு
   மையின் பாசை உன்னோடு

கரையாமல் கரைகிறேன் உன்னோடு
   எழுத்துக்களால் குழைகிறேன் உன்னோடு

கனாக்கள் காண்கிறேன் நெஞ்சோடு
    எண்ணங்களால் நிறைகிறேன் உன்னோடு

காலம் கடந்தாலும், என் காதல் உன்னோடு,
   காகித மைக் காதல் போல.. அழகிய சுவடாய் என்றும்.

Thursday, 20 June 2019

அறம் இல்லா அன்பு

அறம் இல்லா அன்பு, அணுவிபத்து போல.. மீண்டும் என்றும் மலராது முன்பு போல்

Thursday, 13 June 2019

ஏனோ ஏமாற்றம்

மாறியது நீரோ- ஆதலால்
கண்ணில் கண்ணீரோ. நீர்
மறந்தது நம்மை - அதுவே
நிதர்சன உண்மை. நீர்
வாழ்வில் உயரப் பறந்திடச்
செய்ய நினைத்த என்னை.. நீர்
தாழ வைத்தது ஏனோ..
மரித்துப் போனது என் காதல்..
மறக்க நினைக்கிறேன் உன்னை.

Wednesday, 12 June 2019

தவிப்பு - தவிர்த்து

தீராக் காதல் கண்டேன் உன் கண்களிலே..
அது என்னைத் தீண்டும் முன்னரே , தவிர்த்து ஒதுங்கினேன்..
நீ பின்னர் தவிக்கக் கூடாது என்பதால்.
என் எண்ணங்களை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஏன் என்றால், வேண்டும் என்றே உனக்கு என் மேல் வெறுப்பு வர நடக்கலானேன்.

காதல் கதை


காதல் ரசனை சொட்ட சொட்ட
கதை ஒன்றை கருவாக்கினேன்.
காகிதத்தில் என் கண்ணம்மா..
கண்ணடித்து சிரிக்கின்றாள்.
கண்கொட்டாமல் என் கண்மணியை ரசிக்கிறேன்.
கண்கள் அயர்ந்தாலும்
கனவிலும் கண்ணுக்கினியாளே.
இது காதலி மேல் உள்ள மோகம் அல்ல..
கதையின் மேல் நான் கொண்டத் தீராக் காதல்.

மாற்றம் எங்கே

யார் சொன்னது பெண்கள் இயற்கையிலேயே சிக்கவாதிகள் என்று..
அவர்கள் தாம் மிகப் பெரிய செலவாளிகள்...
ஆனால் அவர்தம் சூழ்நிலை அவர்களை அவ்வாறு உருமாறிக் கொள்ள நிர்பந்திக்கிறது..
அவர்கள் ஆசையை வெளிக்காட்டாமல்.. அடக்கி மற்றும் அடங்கி இருக்கிறார்கள்..
மாற்றம் வந்துவிட்டது என்று அரைகூவல்கள் கேட்டாலும்..
இல்லை அது ஒரு மாய பிம்பம் என்பதே நிதர்சனம்.

Monday, 3 June 2019

ஜூன் 3

ஒரு நாளும் வேண்டாம் இந்நாளைப் போல்.
என்னாளும் நன்னாள் என்றிருந்த என் எண்ணங்களில்,
இது கருநாளாய் போனதே..

Sunday, 2 June 2019

கடவுள் சித்தம்

அழக்கூட அலுப்பாகத்தான் உள்ளது..
கண்ணீர் சுரப்பிக் கலைப்பாகி போனதால்.
வீடெங்கும் அமைதி.. மனதில் இல்லை..
ஆசை என்று ஒன்றும் இல்லை..
வாழ வேண்டும் என்ற ஒன்றை தவிர..
அட ஆண்டவனுக்கு, அது கூட, நான் பேராசைக் கொள்வதாய் தோன்றுகிறதோ என்னவோ... ஹ்ம்ம்ம்.. என்னவென்று சொல்ல..

Sunday, 19 May 2019

கல்வி அறிவு

கல்வி கற்பது சரி எது தவறு எது என்று உணரவே..
கற்ற பின்(னாளில்) தான் தெரிகிறது..
கற்றவையில் பிழை உள்ளது என்று..
எனினும்.. பிழையை மாற்ற இயலா பட்ட படிப்பு.. பிழைக்க உதவுகிறது

தேசப்பிதா யார்....??

காலம் காலமாக நமக்கு போதித்தது ஒன்று..
நம் மனம் சொல்வது ஒன்று..

இவ்வாறு பல போர்கள்
மனதிற்கும் மூளைக்கும் இடையே

Saturday, 18 May 2019

பருக்கள்

எவ்வாறு நன்றி கூறுவேன்.. என் கன்னத்திற்கு வருகை தந்த உங்களுக்கு
நீங்கள், கணவன் தந்த காயங்கள் அல்ல,
குழந்தை தந்த முத்தங்களும் இல்லை..
இயற்கை தந்த வரங்கள்.. ஆம்
இனிதே தோன்றிய பருக்கள்.
நீங்கள் வந்ததால், இரு கன்னங்களிலும் சந்தனம் பூசப்பட்டது..
ஆனந்த கண்ணீரில் நீங்கள் கரைந்திடா வண்ணம் கண்கலங்கினேன் உணர்ச்சிபூர்வமாக..
ஆம், பெண்ணான நான் மட்டுமே உணர கூடிய உணர்வு இது..
எல்லாம் நன்மைக்கே...

Tuesday, 14 May 2019

காதல்.. வலி தரும் துணையே

இயற்கையில் இயல்பானதே, என்றாலும் வேண்டாம் என்று விலகினேன்..
இதயத்தில் வலி மிகும் தான்,
என்றாலும்.. இயலாது என்று இடதை இரும்பாக்கினேன்.
வேரூன்றி வளரும் முன்,
வேறு வழியில்லாமல், ஆதி முதலே  தவிர்த்தேன்.
நிறைவேறாது என்று அறிந்ததால் என் அன்பை, அரிந்துவிட்டேன்
பிறர் நலம் கருதி.
அது கூட ஒரு வகை காதலே

மௌனமே என் மொழி

கேட்காது தான்.. ஆனால் பிறர் மனம் சொல்ல நினைப்பதை அவர்களின் விழியின் வழி உணர்கிறேன்..
மௌனம் தான் என் மொழி, இருந்தும் என் மகிழ்ச்சியால் பிறர் மனம் குளிர்விக்கிறேன்.
மனதை நேசிக்க மொழி விதிவிலக்கல்ல..
நேசிக்க முடியாவிட்டால், ஆயிரம் மொழி தெரிந்தாலும், அதில் அர்த்தம் இல்லை

Thursday, 2 May 2019

தலைமை

பெரும் தலைவர் இடத்தில்
பெறும் தலைவர் வேண்டாம்

Monday, 29 April 2019

Pain of love

Since it is deep inside the heart, I believed.
Since I weep inside the heart, no one heard it.
Though I have forgiven a lot,
they don't have the heart to forget that,
Weeping from heart, doesn't make any sense..
Because they wil find hard to listen to my cry.
So I am crying out.

Tuesday, 2 April 2019

அவன் செயல்

எல்லாம் வந்து, தந்து சென்றிடும்  வாழ்வில்
நிலைப்பது எதுவோ!!
அன்பும், அறமும் அயர்ந்துறங்கும் அகிலத்தில்
நிலை என்று  நினைப்பது எதையோ!!
போகும் பாதை எளிதா இல்லை அடர்ந்த புதரா, என்ற புதிர் தான் புரியவில்லை.
எனினும் எண்ணியது ஈடேற எட்டெடுத்து வைக்கிறேன், எல்லாம் அவன் செயல் என்று.

ரோஜா

ரோஜா வனத்தில் பூத்த ஒற்றை ரோஜா
மென்மை மேலோங்கி இருத்தல் நன்றென நினைத்தாள்- நேசிக்க..
மாசில்லா நறுமணத்தைக் கொண்டு மலர்ந்திருந்தாள் - சுவாசிக்க..
முள் இருந்தும், முதலில் அதை மறந்திருந்தாள்..
பின்னர் மறைத்திருந்தாள், பிறர் நலனுக்காக..
தன் மென்மையே, தன்மேல் விழும் வன்மைக்குக் காரணம் என்றபோது,
வஞ்சித்தவருக்கு வடுவொன்றைப் பரிசளித்தாள்.

பானை வயிறு

இறுதி வரை உடன் வரும் உறவு பெருதெனில்..
நீ பெரிதாய் இருப்பதில் எனக்கு சிறுமை இல்லை வயிறே.
தாய்மை ஒரு தவமெனில்
ஆயுள் முழுவதும் அத்தவமிருக்க விரும்புகிறேன் உன்னுடன்.
பானை வயிறு என்றப் பொருள் பட ,பலரும் பேச.. எனக்கோ, உன்னை குறைத்திடத் தோன்றவில்லை.

Thursday, 28 March 2019

நரை


கருங்குழல் மட்டுமே கண்டிருந்த என் சீப்பிற்கு, புதிய வரவு.. என் மனதின் நிறம் ஒத்தக் குழல்....

நான்

ஒளிந்து கொள்பவள்
நான் அல்ல
ஒளிந்து கொல்பவள்
நான் அல்ல
ஒழித்து கொள்பவள்
நான் அல்ல
ஒளிர்ந்து கொல்பவள்
திங்களைப் போல்

Sunday, 24 March 2019

விரைந்து விலகு

பணிந்து பணிந்து பயந்து குனிந்து வாழா நாட்கள்.. விலகி போகட்டும்.
நான், தனித்து துணிந்து வந்து துன்பம் தகற்கும் நாட்கள் விரைந்து வந்து சேரட்டும்

Monday, 25 February 2019

மனமே நலமா

நிலையாய் இருப்பேன் .. உன் நிழலாய் இருப்பேன்.. நன்றாய் இருப்போம்.. நலம் பல காண்போம்..
பேணிக் காப்பேன்.. பெற்றோர் போலவே.. இன்னும் பல வாக்குறுதியை நம்பி வந்த தாரகையை.. தரம் தாழ்த்தி பார்க்க உனக்கு மனம் வந்ததேனோ..

இருந்தும் இல்லை என்ற நிலை தரும் உறவுகளைக் காட்டிலும்.. யாரும் இல்லை என்ற உணர்வு ஒன்றும் செய்வதில்லை..
வாழ்வில் சிலவை சாரலாய் வருவதும், சிலுவையாய் வருவதும்.. அவரவர் செய்த செயல்களே

விழிநீர் வழிந்திடும் போது, துடைத்திட இருப்பேன் என்றாய்.
இப்போது வலிப்பதே உன்னால் தான்.. விழி வழி வரும் நீர் வழிந்திடுவதைத் துடைத்திட விரல் எங்கே தேடுவேன்.

யாரேனும் நலமா என்று கேட்கையில், புன்னகையோடு பூர்ண நலம் என்று சொல்கையில்..
இதயத்தின் குருதி.. எரிமலைக்குழம்பாய் கொதித்து கொல்கிறது...

வலியோடு தானே சிரிக்கிறேன் இன்றும்..
மனம் அதனோடு பழகியதன் மாயம்

Wednesday, 20 February 2019

மாயை


கிடைத்து விட்டால், கிடைத்துவிட்டதல்லவா என்ற எண்ணம்,
கிடைக்காவிடில், விட்டு சென்றதே என்ற ஏக்கம்,
கையில் இருக்கும் பட்சத்தில்,
கண்டுகொள்வது இல்லை.
கிடைத்துவிட்டதைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இருக்குமாயின்,.. அதுவே உன் மதி. இல்லையேல் விதி என்ற மாயையே!!!!

Saturday, 16 February 2019

தவறு

நான் செய்தச் செயல் ஒன்று தவறாகி போகத்..
தவறேதும் செய்யா என் பெற்றோர்கள் வாடத்..
தகுதியில்லா துணையிடம் தொலைத்தேனே என்னை
தக்கப் பாடம் புகட்டிவிட்டே
மறைவேனே மண்ணில்..

மெய்நிகராக் காதல்

என் உணர்வால் உண்டான உயிரே.. மெய்நிகராக் காதல் குழந்தையே
என் மனதில் மட்டுமே உன்னை சுமக்கிறேன்,
என் கையில் பெறாமலே..

Monday, 11 February 2019

நாடக ஒத்திகை

நாடக ஒத்திகை ஒன்று நன்றே அமைந்தது.
மேடையிலும் ஆயிரம் பேர் பார்க்க, தத்ரூபமாக அரங்கேறியது.
நடிப்பின் தடயம் இன்றி வாழ்ந்து காண்பித்தார்கள்,
வாழ்க்கை என்றால் இதுவல்லவா என்று பிறர் எண்ணுவது போல்.
அவற்றை நம்பிய நான்,
இவ்வுலகில் அவர்களுள் ஒருவராக பேராசையுடன் இணைய நினைத்து,..சென்று சேர்ந்த இடமோ பல நம்பியார்கள் வசிக்கும் கூடாரம்.
அங்கே என்னுள் இருக்கும் என்னையும், என் ரசனையையும் துலைத்து..
கல்லடியால்
துளை பட்ட மரம் போல்..
சொல்லடி பட்டு துகள்கள் ஆனேன்.
ஆயினும் ஓயாத அலைகள் போன்று என் மனம் துடித்திருக்க, என் வாழ்வின் துளைகளையே . துணையாய் மாற்றி , இனிய கீதம் பாட வைத்தது, நான் பெரிதும்
நேசித்த என் கனவுகளே..
..

Saturday, 9 February 2019

Alone yet okay

அன்பென்பது அல்மோஸ்ட் பொய்யடா... 

அலோன் பீ ஹேப்பி என்றும் நானடா..  

நிகழ்ந்தவை எல்லாம் நேர்மறை ஆகும் ஒரு நாள்... 

நடந்தது எல்லாம் என் நட்பலன் நன்மையே.. 

நான் நகர்ந்திட என் காலம் ஒரு துணையே

Tuesday, 5 February 2019

காதலின் பொருள்

காதல்,
இருவர் கை அடக்கமானது.
'பெறும்' சமயம் கண்மூடித்தனமானது.
பொருள் கண்டு வருவதில்லை காதல்.
இருமனம் இணைப்பில் 'பொருள்' சேர்ப்பதே காதல்.
காதல் கடைவீதியில் கிடைப்பதில்லை,
நீ கூறும் பொய்யையும், மெய்யாய் பார்க்கும் முட்டாள்தனம் நிறைந்த மனதில் இருப்பது..

உறவு

இந்த உலகத்தில் தான் , வார்த்தைக்கு மட்டுமே உறவுகளாய் இருப்பவர்களும்..
வாழ்க்கை முழுவதும் உறவுகளாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இசைக் கருவி

மீட்டத் தெரிந்தால், பெண்ணும் இசைக் கருவியே..
காலம் முழுவதும் இனிய கானம் மயம்..
மீறி, கை வந்தது போல், கீறினால்..
காலம் முழுவதும் ரண மயம்.

Tuesday, 29 January 2019

கல் மனது

மனது ஒன்றை மறக்கத் துடிக்க
நினைவு, அதை நினைவில் கொள்ளாமல்.. என்னை கொல்ல..
உணர்வுகள்.. உன் உறவே வேண்டாம் என உரக்க உரைத்து.. உறைந்திட..,
என் உலகமே, இனி நீ தான் என்று நினைந்து வாழ்ந்த எனை, குருதி கலந்த கண்ணீரில் நனைக்க, உனக்கு மனம் வந்ததேனோ!!

Sunday, 20 January 2019

மனதின் உளறல்

ஏதும் இல்லா வெற்று உடலில், வாழும் காற்று மட்டுமே அதன் கானம், அதுவே நிரந்தரம்.
எல்லாம் இருந்தும், இல்லா உலகினில், அன்பென்று ஒன்று இல்லை.. அதுவே நிதர்சனம்.
விழிகளை மூடினால், முன் வந்து வழிந்திடுதே வலியின் நீர்.
செவிகளில் சப்தம் நின்றே போனாலும்,
மனதின் சப்தம் கேட்டிடுதே.
கால் போன போகில் போக காலம் வரவில்லை இன்னும்.
மனம் அதன் கீறல்கள்களை பதிவு செய்கிறது.. கைகளின் கிறுக்கள் வாயிலாக .

Saturday, 19 January 2019

மனைவி

என் மனம் சேர்ந்து, மணை வந்த மங்கை.. என் மனைவி.
மாய குரலால் மயக்கிய மனிதி.
சுளீர் சூரியனையும் சிலிர்க்க வைக்கும், என் மிருதுவான மழை சாரல் அவள்.
வெயிலிலும், வசந்த காற்றைச் சுவாசிக்க வைக்கும் வானதேவதை அவள்.
சேயாய் சிரித்திடுவாள், நான் சேயானால்.. மாய மான் போல் மறைந்திடுவாள்.
சேட்டைச் செய்வதில் சிம்டாகாரி, என் இமைகளைச் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அழகு சிங்காரி...
இறைவியை நேரில் பார்த்ததில்லை..
ஆனால் எனை பண்பட்டவனாக்கவும் , பேணிக்காப்பதிலும் அவளுக்கு நிகர் யாருமில்லை.
என் கோபத்தால் கலங்கிடுவாள்.
அவள் கோபத்தால் என்னை நொறிக்கிடுவாள்.
தவறொன்று செய்தால் அறிந்திடுவாள்.
அன்பால் என்னை ஆட்கொள்வாள்.
மலர் போல மணந்திடுவாள்,
மகரந்தச்சேர்க்கையில் எனை வீழ்த்திடுவாள்.

Friday, 18 January 2019

நான்

ஆழ் கடலில் இருக்கும் சிப்பி போலவே நானும் என்று எண்ணுகிறேன் ..
யாரின் பார்வையும் படாத தூரத்தில் இருக்கவே விருப்பம்.
வெளி தோற்றத்தில் கரடு முரடாக இருப்பினும்.. முத்தை சுமக்கும் சிப்பி போல்..
முகத்தில் சிரிப்பைப் பகிர்ந்திருந்தாலும், உள்ளிருக்கும் வலி.. என்னை உலகத்தில் நிலை நாட்ட வைக்கும், அந்த முத்தைப் போல் முத்தாய்ப்பாக

பசு

ம்மா என்று என் உயிர் என்னை அழைக்கையிலே
நான்.. ஆ என்பதில் பெருமை கொள்கிறேன்..
ஆ என்பது.. குறிலாகி.. என் குழந்தையின் குரலில் அம்மா என்றானதும் ..
ஆறறிவு ஜீவராசிகளும், என் குழந்தையின் கூற்றை ஏற்க, நானும், என் கன்றும் குதுகலம் ஆனோம்

பன்

என்னவள், மெதுவாய் மைதாவை அள்ளி வீச.. அது பரவலாய் பறந்து வானில் படர்ந்தது மேகமாய் விரிந்தனவோ.. என்னவோ...
நீர் ஊற்றி பிணைகயிலே.. என் நெஞ்சத்தை நணைத்துவிட்டாள்..
அச்சை தேடும் சாக்கில், ஓரே ஒரு பார்வையில்.. என் மனதை எடுத்து பதித்து விட்டாள்
அடுப்பில் அவை இருக்கையிலே..  இருப்பு கொள்ளாமல் தவித்து விட்டேன்..
இறுதியில் என்தன் மனதை அழகாய் செய்து, என் உள்ளங்கையில் கொடுத்து விட்டாள்..
அவளின் மனம் போல்... மணமாய்.
மர்ம புன்னகையுடன் வானை நோக்கினோம்..
எங்கள் மனது ஒளிர்ந்தது... நிலவாய்..

Tuesday, 8 January 2019

வீழ்ந்தாலும் வாழ்வேன்

சாய்ந்து அழ தோளும் இல்லை,
சாய்ந்தாட துணையும் இல்லை
இன்னார்க்கு என்று எந்த இன்னலும் இழைத்ததில்லை
எனினும் ஏன், காதல் என்ற கல்லால், காலம் என்னை கொன்றது என்று தெரியவில்லை.
இருந்தாலும் பரவாயில்லை,
வாழ்க்கை நான் வாழ்வதற்கு தான்.

Sunday, 6 January 2019

மணம்

கடந்து போகும் மேகம், மேளம் கொட்ட..


 குனிந்து கலங்கும் கண்மணியாளின் விழி நீர்  போல, 


வானின் நீர் துளி,..


மண்ணை மணந்தது