எல்லாம் வந்து, தந்து சென்றிடும் வாழ்வில்
நிலைப்பது எதுவோ!!
அன்பும், அறமும் அயர்ந்துறங்கும் அகிலத்தில்
நிலை என்று நினைப்பது எதையோ!!
போகும் பாதை எளிதா இல்லை அடர்ந்த புதரா, என்ற புதிர் தான் புரியவில்லை.
எனினும் எண்ணியது ஈடேற எட்டெடுத்து வைக்கிறேன், எல்லாம் அவன் செயல் என்று.
No comments:
Post a Comment