Sunday, 31 December 2023

அன்புடைமை

நெஞ்சுக்கு நெருக்கமாய் இருந்தாலோ என்னவோ..
உன் மேல் அளவு கடந்த கோவம் வந்தாலும், மின்னல் போல் மனதில் தோன்றி மறைகிறது.
 நீ நேரம்கடத்த மட்டுமே சொல்லிச் சென்ற 🚶அன்பை, 
நான் சொல்லாமல் நித்தமும் நினைக்கிறேன்.
ஆயிரம் கேள்விகள் கேட்க இருந்தாலும், 
அது சிறிதேனும் உனை சங்கடம் செய்துவிடும் என்பதால் புன்னகைத்து விலகினேன். 

வருக 2024

அழகான சிரிப்பும், 
அமைதியான  மனதும், 
நிறைவான ஆரோக்கியமும் நிலைத்த கல்வியும், செல்வமும் 
பெற்றிட 
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
வருக 2024💐

இதயக்கனி

நானே ஆச்சரியமாக உணர்கிறேன்❣️

காதல், 
இதயத்தில் இருந்த ஈரத்தை பஞ்சு போல் உறிஞ்சி பஞ்சாய்  பறந்த பின்பும்🪽🪽

இதயம் கனப்பது ஏனோ🫀..

ஒருவேளை ஈரம் இல்லாமல் கல்லாயிற்றோ👀

Saturday, 30 December 2023

Thank you #Subscribers

பரந்து விரிந்த கடலினில் (youtube) 
நம் முகவரிக்கு அங்கிகாரம் (@SundaySunshine10)  அளித்த முகம் தெரியா 
முத்துக்கள் (Subscribers and Viewers) அனைவருக்கும் நன்றி. 
என் எழுத்துக்கள் உயிர் பெற, 
தாங்கள் அளித்த நிமிடங்களுக
காரணம். 
நன்றி 

Friday, 29 December 2023

தனிமையில் கவனம்

 தனிமையில் கவனம் 

துள்ளல் மனதுடன் இருக்கும் போது உடன் இருக்கும் துணையை விட.. 
தனிமையில் இருக்கும்போது தோள் கொடுக்க வரும் துணையின் மீது கவனம் வேண்டும். 

அன்பு நெஞ்சம் கொண்டோரை விட, 
வஞ்சம் தீர்போர் நடமாடும் உலகம் இது. 

கவனம்

Monday, 25 December 2023

அன்பே சிவம்

நாம் மனதார விரும்பியவரால்
ஒரு நாளும் நம் வாழ்க்கை வீணாகாது🤝.. 
நமக்கு தீவினை விளைவிக்கும் என்று நன்கு தெரிந்து 
அவர் (துரோகி) செய்த செயலும் நமக்கு நன்மையே பயக்கும்🤍. 
அவர் கொண்ட வன்மத்தை விட, 
நாம் விதைத்த அன்பின் வலிமை பெரிது❣️. 
ஆழ்ந்து சிந்தியுங்கள் 💭உண்மை புரியும், வாழ்க்கையும் 😁

நன்றி

ஏமாற்றி விட்டார்கள் என்று எண்ணாதீர்கள்
கோமாளி ஆக்கி விட்டார்கள் என்ற கோபம் வேண்டாம். 
உலகத்தின் உண்மை முகத்தை 
உரித்து காட்டியவர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து செல்லுங்கள்.
மனம் மகிழ்ந்திரும்.

Saturday, 23 December 2023

மனதின் மருந்து

மறந்திட மனமில்லையோ...
நினைவுகள் நங்கூராய் இருக்கும் இதயத்தை 
மருந்திட துணையில்லையோ சிறு புன்னகையால் ... 
பிறர் மனம் நோகா வண்ணம் நடக்க எண்ணி... 
என் மனதை நோகடித்தேனே நான். 
காலமே மருந்து. 


ஊடல் - உரையாடல் - காதல் மொழி

ஊடல் -   உரையாடல் - காதல் மொழி

ஆண் : நான் சொல்வதை எப்போ கேட்டு இருக்க 
பெண்: நான் சொல்ல வருவதை நீ எப்ப சொல்ல விட்டிருக்க.... 
கேட்டு இருக்க

Friday, 22 December 2023

மௌனம்

துணிவில்லா மனதின் கள்ள மௌனம், 
எண்ணில்லா காதல் மொழிகளை ஊமை ஆகிவிடும்

கேள்வி

              கேள்விகள் நன்று. ⁉️❓❔
சில கேள்விகள் சமயத்தில் காயம் செய்யும். 💔
சிலரது கேள்விகள் மனதைத் தெளிவுர செய்யும். 💝
பல கேள்விகள் வரலாற்றை ஆராயச் செய்யும்.📝
சில கேள்விகள் கலகம் செய்யவும்.😈😈 
சில கேள்விகள் நம்மை பண்படுத்தும்😊
சிலரது கேள்விகள் நம்மை பாடாய் படுத்தும் 😂😂
சில கேள்விகள் நாம் யார் என்பதை நினைவூட்டும். 
காதலின் கேள்விகள் மனதைப் பித்தாக்கும் ❤️💓
குழந்தையின் கேள்விகள் பெற்றோருக்குப் புதிராயிருக்கும்👼. மக்களின் கேள்விகள் நாட்டை நலமாக்கும் வளமாக்கும்.🤝
நீதிமான்களின் கேள்விகள் நீதியை நிலைநாட்டும். 
என் கேள்வி இறைவனிடம், 
ஏன்பா என்ன படைச்ச, ஏன்??? 
 


படைப்பு

என் கருத்தியல் மேல் முறன் இருப்பின், ✒️
என் படைப்பில் பிழை இருப்பின் 
கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. 🤝
எழுத்தில் பிழை இருந்தாலும் சரி, 
எண்ணத்தில் பிழை இருந்தாலும் சரி, 
சரி செய்ய, கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.🤝

கருத்து உரிமை உண்டு, 
பேச்சு உரிமை உண்டு. 
ஜனநாயகம் உண்டு 
வெறுப்பவரும் விரும்பும் வகையில்
வரிகள் வர்ணம் பெறும். 🖋️
தமிழ் தாய் கரம் பிடித்து கரை ஏறுகிறேன். 📝
வாய்ப்பிற்கு நன்றி 🙏

Thursday, 21 December 2023

குங்குமம்

நெற்றியில் வைக்கும் குங்குமம் நெற்றி வகிடில் வைக்க எத்தனை பாக்கியம் செய்திட வேண்டும்

ஏன் கோமாரே

காதலின் வடு கண்களில் கண்டேன் மீண்டும் ஒரு வடு என்னால் ஏற்படா வண்ணம் விலகி நடந்தேன். தனிமையின் துயரம் நான் அறிவேன். 
எந்த துயரையும், தனிமையையும் தர நினைத்தது இல்லை. 
ஆனால் நீ எனக்கு தனிமை மற்றும் காதலின் வடுவையும் பரிசளித்தாய் 
ஏன் 

அன்பே அறம்

கயவர் மேல் ஏன் கருணை கொண்டாய் காதல் மனமே 
அந்த கருணையே உன்னை பிறர் கசக்கி எறிந்திட காரணம் பெண்ணே
அன்பே ஆயினும் அறம் அறிந்து செய் 
அளவுடன் செய், அளவாய் செய் அழகுடன் செய்
அன்பே அறம்

கள்ள உளவாளி - காதலா நீ

கள்ள களவாணி உளவாளி நீ உள்ளம் பறித்த  மணவா ஏய் உளவாளி நீ. 
கள்ளம் கலந்த காதல் களவு உளவாளி நீ. 
உண்மை இல்லா உறவே ஏ உளவாளி நீ. 
தனிப்பட்ட கேள்விகள் தடையில்லா என் பதில்கள், 
யார் சொல்லி வந்தாயோ, 
எதை அறிந்திட காதல் சொன்னாயோ, 
உறவு உளவாளி நீ. 
சுற்றிலும் சக்கர வியூகம் என்னை வீழ்த்த, கள்ள களவாணி உளவாளி நீ, 
நீ எடுத்த ஆயுதம் காதலோ!!! 

Tuesday, 19 December 2023

தெளிவு கிடைத்தது

 மனதில் உன் நினைவு ❣️- நரைத்த கூந்தல் 🧑‍🦳

 கண்களில் உன் பிம்பம்😍 - நித்திரை இல்லா இரவுகள்😳 - கருவளையம் எனும் பதக்கம் 🫣

காற்றடைத்த கன்னங்கள்😊 - கண்ணீர் பெருக்கெடுத்து ஓட 😰- ஒடிங்கி போனது. 💔

முத்தான சிரிப்பு 😁 சிறுத்து போனது😐, நீ போனதும்.. 

என் மகிழ்ச்சி நீ தான் என எண்ணிவிட்டேன்.. மன்னிக்கவும் 🙏

பிரியாமல் பிரிந்து

பிடித்திருந்தாலும் பிடிவாதமாய் பிரிந்தேன்.
ஆதியிலேயே அறிந்தேன், அகம் ஆசை கொண்டாலும்..
நினைப்பவை நிகழாது என்று. 
பேசி பழகி பிரிய விருப்பம் இல்லை.
நீ தரும் அன்பிற்கும், நேரத்திற்கும் நான் நியாயம் செய்ய இயலாது.. 
ஆதலால் உன் அன்பை ஏற்கவில்லை 

காதல் முறிவு - பிரிவு

காதல் முறிவில்😔 வலி தருவது,
என் உயிரின் உலகமென நம்பியிருந்தேனே, 
நீயா இப்படி செய்தாய்.. 
என ஏற்பட்ட அவநம்பிக்கையே...

காதல் பிரிவில் 💔வலி தருவது, 
இனிய நிகழ்வுகளும்,
இதமான நினைவுகளும் தான்.. 

Monday, 18 December 2023

அன்பர்கள் வேடத்தில் துரோகிகள்

அன்பர்கள், நண்பர்கள் வேடத்தில் துரோகிகள்...
என்னை வீழ்த்தி என்ன மகிழ்ச்சி கொள்வாயோ தெரியவில்லை.. 
உன் மீதான என் அனுமானம் மாறிவிட்டது.
நன்றி, 
எதிரியாய் வந்து நண்பர்கள் ஆனவர்களும் உண்டு. 
நண்பர்களாய் வந்து துரோகிகள் ஆனவர்களும் உண்டு. 

Friday, 15 December 2023

Psychology of Manipulator

Just understand the psychology behind some manipulators. first one is they want to satisfy their ego if they love somebody they want to get the love for sometime only and not for the lifetime. they  have some ego like why she left me even I am good and better than the other person. generally they want to attack the psychology and they want to break that trust between the couple and they want to play in their life and in the name of well wisher. We cannot identify them easily. Whenever we suspect them, they act like wise people. 

கூர்வாள்

காதல் எனும் கூர்வாள், 
என் குருதி அனைத்தும் குடித்து... செவ்வென ஜொலிக்கின்றதே❤️
வாளின் வடு, வாழ்வு முழுவதும் 💘

Wednesday, 13 December 2023

அவள் நதி.. நான் காடு

அவள் நதியாய்,
 நான் அவள் கடந்திடும் காடாய். அவள் அன்பின் அலைவரிசை, நித்தம் அலை ஓசையாய் (her love is like Flowing River's Sound in My Heart which is a pleasant Music) என்னுள் ஒலிக்கும் இன்னிசை . 
ஒரு நாள் அவளை அணையிட்டனர்.
அவள் இல்லா வனம்.. நிசப்தம்.
அவள் ஒலியில்லா வழி எல்லாம் எனக்கு வலி

இனிது இனிது..

தேனினும் இனிது ,
    உந்தன்  சிரிப்பு.
தென்றலினும் சுகமானது ,
    உந்தன் தீண்டல் .
பைய்ந்தமிழிலின் வாசம்
    உந்தன் பேச்சில்.
உன் அகண்ட விழியில்
    எந்தன் உலகம் காண்கிறேன் .
என் குழந்தாய் ,..உன் மழலை
    முகத்தால் மகிழ்ந்து போகிறேன்
என் செல்வமே ...


இனிது இனிது..


Friday, 8 December 2023

நிறம்

காற்றிற்கு நிறமில்லை
காற்றடைத்த உடலில் இருக்கும், உயிருக்கும் நிறமில்லை..
நீருக்கும் நிறமில்லை..
நெஞ்சுருகும் அன்பிற்கும் நிறமில்லை..
வெண்மை உள்ளம் கொண்டோர், வாழ்வில் அமைந்தால், வேறு ஏதும் தேவையில்லை.
உடல் வெண்மை வாயில் வரையே..
காற்றில் கலந்திடும் போது அனைவரும் சாம்பல் நிறமே..
உண்மை இதுவாய் இருக்க....
நிற மோகம் ஏன்?

Tuesday, 5 December 2023

உவமை

நிலவொளி- அவள் விழி..
தென்றல் -  அவள் சுவாசம்..
கவிதை - அவள் மௌனம்..
அருவி - அவள் மொழி..

Thursday, 30 November 2023

புரியாத எல்லை


முறித்து எழும் சூரியனையும், சிரித்து வரும் சந்திரனையும் ரசித்தது உன்னிடத்தில் தான்..
உடலும் , மனமும் உவகைக்
கொண்டது உன்னோடு தான்.
உன் முதலும், முற்றும் அறியேன்.
உன் இணைப்பைப் பிரித்தாறாயத் தெரியவில்லை- கடல், வானம்...
நம் மனம்

Wednesday, 29 November 2023

Qualitative love

Babee, I hav a "simple interest" with u, which is getting "compounded" day by day...

How can I explain my "exponential" love on u..Its like a closed "pipe and cistern" with full of water.. 

One thing I can say u that, u r my "proportion" in the "up & down streams" of Our "calendar years"..

I assure u the "percentage" of my love &  am believing in the "probability of getting your heart"..

None can "measure" the "area" of space l have given u in Our life..

Hating "the time and distance" which made us apart..

Just feel the "quality and quantity" of my love,..

MY LOVE

Monday, 27 November 2023

பிரியாமல் பிரிந்து

ஏதும் சம்பாதிக்க தெரியவில்லை என்கிறாய், ஆம் உன் அன்பை
சம்பாதிக்க தெரியவில்லை,
ஆனால் உன் வெறுப்பை சம்பாதிக்க மாட்டேன்,அதனால் தனித்து நிற்கிறேன்..
உன்னை விட்டு பிரிந்து ..!

பிரிவிலும் ஒரு பிரியம் உண்டு, அது புரியவாய்ப்பில்லை உனக்கு. 

அடுத்த பிறவியில் சேர்வோம் காத்திரு என்றாய்.. நகைப்புக்குரியது.. நன்றி 

குழந்தையாய் சிரிக்க நினைத்த மனதைக் குத்தி குதறி குருதி சிந்த வைத்தது காதல்..

                 - பிரியா
               

Thursday, 23 November 2023

Manipulator

Some people's behaviour depends on whether they are getting what they want from you is met or not.
If not met, they simply make you feel bad or spoil your mind or life or self esteem with false promise or make you feel alone and they simply fly in middle. 
If they find you happy in life, they will play mind games, they will play with you psychologically. 

They will act like they are victims
They will make you feel guilt. 
They use your time. 
They use your love. 
They don't value you.
They mentally trap you
They are called Manipulators. 

அன்பறம்

இந்த கவிதைகள் எல்லாம் உன்னால்.
அந்த கண்ணீர் எல்லாம் 
உன்னால். 
சொல்லியும் நிறைவேறாது என்று இருந்த எந்த ஆசையையும் என் வார்த்தைகளால் வெளிகாட்டவில்லை.. பிறர் மனம் நோகும் என்பதால்.. 
வெளிப்பட்டதோ?? என் விழிகளால்..

நேரம் போக்க மட்டுமே என்றால், 
அங்கே அன்புக்கு என்ன வேலை. 
அன்பில்லா இடத்தினில் அறம் என்ன செய்யும்.... பாவம். 
பிறர் வாழ்வை நரகமாக்கி, அதில் இன்பம் தேடும் பண்புடையவர், 
அக அழகை இழந்தவர்..
அகத்திற்கும் கற்பு உண்டு.. 
சூழ்ச்சி நிறைய பெற்றவர், 
அதை இழந்ததிற்கு சமானம் தான். 

Tuesday, 21 November 2023

Invisible Wavelength

It's for you, 

Your thoughts make me to roll out the old memories.. 
Some are pleasant and Some are Worse
But why I had that sudden Thought About you.. 
Whether you are thinking about me 
Or 
As usual I am the only one thinking about you. 
Definitely there is a invisible wavelength. 
Live Long with Great Happiness and Satisfaction. 
Bye Bye




Saturday, 18 November 2023

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்...

எதிரில் தெரியும் எதிரியை சூரசம்ஹாரம் செய்வது எளிது.. 

நல்லவர் போல், 
நலம் விரும்பி போல், 
நண்பர் போல்,
நடித்து முதுகில் குத்தும்
நல் உள்ளங்களை கண்டறிந்து, 
அவர்களின் வன்ம உணர்வை, 
நாம் அன்பால் வதம் செய்வதே 
சிறப்பான, 
தரமான,
சூரசம்ஹாரம். 

அன்பு எனும் ஆயுதம்... 

Friday, 10 November 2023

அழகின் அழகு

அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய்....
இது வாக்கியம்.. 

இருபதுகளில்,.... 
ஹய்யா ஜாலி 
நான் அப்படியே இருக்கிறேன்..
நான் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள்... 😁😁😁

முப்பதுகளில்... 
நான் அப்படியே இருக்கிறேன்.. 
அன்று பார்த்தது போலவே இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்....😔😔😔

வாக்கியம் ஒன்று தான்.. 
அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய் அழகாக.. 

ஆனால், ஒரு வயதில் மகிழ்ச்சி.. 
ஒரு வயதில் அழற்சி... 

முப்பதில் அழகாக இருப்பது மகிழ்ச்சியே... 
ஆனால் முப்பதுகளில் உண்மையான அழகு 
தாய்மையே.... 

தாய்மையினால் வரும் மாற்றமும், அழகின் அழகே.. 

நல்ல மாற்றமும் அழகே.. 
நல்ல மாற்றம் வேண்டி பயணிக்கிறேன். 

பிரியா.. 
November 10 2023




மௌனம்

பல பெண்களின் மௌனத்தினால் மட்டுமே..
சிலரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நகர்கிறது.. 


Tuesday, 31 October 2023

ஓயாத நினைவுகள்

சிறை கொடுமை..
அதனினும் கொடியது நினைவுகள்.. 
என் நினைவுகளில் மட்டும் நீ...
நினைவுகளை மட்டும் சுமந்து நெஞ்சம் கணக்கிறது... 
கண்களில் நீர் பெருகி வழிகிறது... 
ஆனால் உதட்டில் மட்டும் புன்னகை.. 
ஏன்னென்றால் என்னை புன்னகைக்க சொன்னது நீ அல்லவா.... 

Always keep smiling. Siricha dan nee azhagu. 


Saturday, 28 October 2023

Mind the emotions

When your emotions are taken for granted by a cruel hearted person.. Just give up the relationship... 
No matter what..
Just shed it and move away..
They will reach to you only for timepass or for any favours.. 
Always keep in mind..
Make use of your mind than heart.. 
Mind the heartless people 



Thursday, 26 October 2023

எதிர் பாராத அழைப்பு

ஓயாதோ உன் நினைவு... மனதில் 
ஓரமாக செல்கிறேன் மோதாமலே
காயாத கண்ணீர் துளிகள் கன்னத்தில்..
அந்த நீர் முழுவதும் பருகியே, 
என் தாகம் தீருதே..... 
ஒரு அழைப்பு.. ஓர் சிரிப்பு.. ஓர் நிமிட மகிழ்ச்சி... 
பழைய காயங்கள் மனதோடு.. காலங்கள் சென்றாலும் மறையாத மனவடு...
மன வலி, வழி மாறி 
தொண்டை குழியில்... 
திறவாத வாய்.. 
மனதை திறக்கிறேன் எழுத்துக்களில்... 

ஆழ் மனது அறியும், இது தொழில் முறை அழைப்பு என்று 💔

Monday, 25 September 2023

ஓநாய்

வஞ்சம் கொண்ட நெஞ்சமுடைய ஓநாய் நண்பா.. 
வஞ்சகம் செய்து பிறர் வாழ்வை வீழ்த்த, சிறிது சிறிதாய் நெஞ்சில் நஞ்சை விதைத்த ஓநாய் நண்பா.. 

நீ மனமுடைய காரணமாக இல்லாமல் தள்ளி தள்ளி சென்ற தத்தையின் மேல் அப்படி என்ன வஞ்சம்.. 

 புரிவதில் இருக்கிறது உறவு புரியவில்லை என்றால் பிரிவதில் ஏது தவறு..

நன்றி 
மனிதர்கள் வேடத்தில் ஓநாய்கள் இருப்பதை உணர்த்தியதற்கு.. 

வார்த்தைகள்

வார்த்தைகள் எல்லாம் வெற்று வார்த்தைகளே, 
அவற்றிற்கு உண்மை என உருவம் தர வேண்டாம். 

அவற்றுக்கு நம்பிக்கை என்று நியாயம் சொல்ல வேண்டாம். 

வார்த்தைகளுக்கு உணர்ச்சி சாயம் இட்டு அவற்றை உருவகம் செய்ய வேண்டாம். 

வார்த்தைகள் உருவம் பெறுகின்ற அவை உண்மையாகும் பொழுது. 

வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன அவை நடைமுறைக்கு வரும் பொழுது.

வார்த்தைகள் எல்லாம் வெற்றி வார்த்தைகளை அவை நம்மை உத்வேகப்படுத்தும் போது. 

Friday, 22 September 2023

LOVE❤️💞💖💕💗♥️💓

LOVE can be find again if it's LOST
LOVE is Immortal 
LOVE is Eternal 
LOVE is the ENERGY TO THE SOUL.
As per LAW OF LOVE 
LOVE neither be created nor destroyed.
LOVE is a Good Feel triggered by the hormones for the lively soul. 
LOVE cannot be compared. 
LOVE is a WoW feeling. 
DON'T give to Wrong Person. 

Nowadays Love is in the form of Calculated Love
Corrupted Love. 
Love is not for Consumerism. 

                 LOVE IS GOD

 


Face the world - ALONE

You are ready to face the world alone, when.... 
you are able to enjoy the food alone in the crowded restaurant without using mobile or gadgets.
When you are engaged with the movie alone in theatres.
Going for a walk or jog or hike All Alone.


Thursday, 21 September 2023

Caution on Memories

Knife may slash you in a minute
But Memories with you loved one may crush you every second if they aren't with you. 
Please create attachment only.. Only when both are committed to the promise of words, 
Else one may go busy in their life and the other might hang in the thoughts alone. 
Be cautious about Memories.. 

Wednesday, 20 September 2023

இடைவெளி இதயவலி

ஓர் பொழுதில் தோழி காதலி ஆகிறாள்.,
ஓர் நொடியில் காதலி தோழியாகி, யாரோ போல் ஆகிறாள். 
இந்த நொடி பொழுதில் மாறிய யாவும், உன் எண்ணங்களே.. 
ஆனால் இடைவெளி இதயவலியை தந்தது எனக்கு மட்டுமே, 
நீ எதிர்நோக்கியது போல்.
நன்றி 

Sunday, 17 September 2023

தவறியும் தவறிழைக்காதே

மனம் விரும்பும் உறவுடன் இருக்கப்படுவது - வரம்
மன இறக்கத்துடன், இரக்கமில்லா உறவுடன் இருக்கப்படுவது - விதி

சொத்திற்காக மட்டுமே வேடமிட்டு
திருமண சொந்தத்தில் சிலர்..
விரும்புகிறேன் என்று வெற்று வார்த்தையைக் கூறி விலகி விடும் சிலர்.. 
பெண்ணின் மனதும் அவளின் உணர்வும் கரை(லை) க்க இயலுவாக இருக்கலாம்.
ஆனால் அவளின் கண்ணீர், காலம் கடந்தாலும் கர்ம வினையாய் பின் வரும் என்பதை மறவாதே!!! 

நெஞ்சம் மறப்பதில்லை

காகிதம் எல்லாம் அன்பை பேசும் காதல் வரிகள் ...
காலம் எல்லாம் நான் சுவைத்த அன்பைத்தான் பரிமாறுகிறேன் என்று இல்லை... 
என் மனம் எதிர்நோக்கும் காதலையும் அன்பையும் தான். நெஞ்சம் சந்தித்த வலிகளை தமிழ் வரிகளால் மருந்திடுகின்றேன்

Friday, 15 September 2023

understand the society

Don't be afraid of loosing anybody in life, you are born single. 

Prioritize your mental health, nobody will come and fix it. 

If you don't want to hurt anyone and being hurted, just be away. 

Find the real intention of the person who tries to get close to you. It may be for your time (timepass) or 
to divert you or 
to destruct you or 
to get something from you

Be Strong and Resilient, When your kindness, empathy, love is taken advantage by someone.


Sunday, 10 September 2023

நகரும் மேகமே

ஓ நகரும் மேகமே...
நகரும் மேகமே... 
உன் நிழல் போலே இருப்பேன், 
நெருங்காது, விலகாது காத்திருப்பேன்.. 
என்றாய்... 

இன்று உன் நினைவிலும் சரி , நிஜத்திலும் சரி நான் இல்லை.. 
என் நெஞ்சம் நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறது.. 
ஆனால் கண்ணின் கருவிளி மட்டும் , ஆற்றில் அள்ளாடும் பரிசலாய்... 


யாரையும் நம்பாதே

என் பிரிவு உன்னை கலங்கச் செய்திடுமோ என்று எண்ணியே முதலில் விலகி இருந்தேன்..

வாழ் நாள் நட்பென்ற பெயரில், உறவாய் வந்தாய். நம்பினேன்..
ஒரு நாளும் உனை காயப்படுத்த 
விரும்பியதில்லை. 

ஆனால் நீ சுயநலமாய் இருந்து, 
என்னுள் சிரித்துக் கொண்டு இருந்த குழந்தையை கலங்கச் செய்தாய். 
நகர்கின்ற மேகமாய் ஆனாய். 
நான் மட்டும் இன்னும் நினைவுகளுடன் நிம்மதியில்லாது... 

நன்றி.. உன்னை போன்ற உண்மை இல்லாத மக்களும் உள்ளார்கள் என்று உணர்த்தியதற்கு. 

Sunday, 3 September 2023

சந்தர்ப்பவாத சகாக்கள்

நட்பிற்கு இலக்கணமாய் இருப்பேன் சர்வகாலமும் என்று பொய்யுறைக்கும் சில சந்தர்ப்பவாத சகாக்கள்..

சிறு வட்டத்திற்குள் இருக்கிறாய்,
வெளியே வா.. என்று கூறும் 
ஓநாய்கள்.. 

அன்பாய் இரு.. என்று அறைக்கூவலிடும்.. அன்பர்கள்..
வேடிக்கை.. 

பேச யாரும் இல்லாத போது மட்டுமே பேசும், பேருள்ளம் கொண்டவர்கள்.

நாகரிகம் அறியா.. படித்த பாவலர் போலும் 
பண்பட்டவர் போலும் பாவ்லா செய்வார்கள்..
அந்த சந்தர்ப்பவாத சகாக்கள்.. 

அஞ்சறை

வெகுளியால் கடுகு போல் பொரிந்தாள் என் கண்மணி. 

அவள் அகம் சீராக இல்லை என்பதை உணர்ந்தேன். 

மிளகு கண்களால் என்னை மிரட்டினாள். 

நேற்று வரை நாங்கள் கடுகு உளுந்து. 
இன்று என்ன கடுப்பு என்று தெரியவில்லை. 

என்னவென்று விளங்காமல் விரல்களை பிசைந்திருந்தேன். விரலில் தட்டுப்பட்ட மோதிரம் விவரத்தைச் சொன்னது. 

அவளிடம் நான் மண்டியிட்டு இல்லை... 
மாட்டிக்கொண்ட இல்லை இல்லை எங்கள் மணநாள் என்று.. 

மரியாதையாய் மன்னிப்பு கேட்டு மஞ்சள் குங்குமம் இட்டு என் மணவாட்டியின் மனம் கவர்ந்தேன்.. 

மீண்டும் கடுகு உளுந்தாய் அஞ்சறையில்... 
என் அஞ்சுகத்தின் அகத்தில்❤️

சிரிக்க மறந்த சிலையாய்

அறிமுகமானவர்கள் அருகில் கடந்து சென்றாலும் யார் என்று தெரியாத முகம் போல கடக்கச் செய்த காலத்தை என்னவென்று சொல்வது.. 

போலியான சில முகங்களைக் கண்டபின்.. 
யாரையும் நம்ப மறுக்கிறது மனம் நெருங்க தயங்குகிறது நெஞ்சம்.. 

வலிமையில்லா வெற்று வாக்குறுதிகள்.. 
வன்மம் கொண்ட முகங்கள் இவைகள் என் இதயத்தை கூறு போட்ட பின்... 

நான் சிரிக்க மறந்த சிலையாய் நிற்கிறேன்... 

புரிதல் இல்லாமல்

நீ என்னை காதலிப்பதாய் உணரச் செய்த காலத்தில், 
என்னுள் உருவான காதல் வரிகள் எல்லாம் கவிதைகளாய் புத்தகங்களில்.... 

இப்போது உணர்கிறேன், 
என் உள்ளம் என்னை ஏமாற்றி விட்டது என்று.... 
புரிதல் இல்லாமல்

Saturday, 2 September 2023

World of Love

If you are not serious in relationship or friendship, please don't express it.
May be for you it's just time pass or passing cloud, 
But for the other, 
it's an Emotion, 
It's a Memory,
It's a Love, 
It's a Trust,
It's You,..... THEIR WORLD

What my Heart says for you

There is nothing like Bleeding Heart,
It's heart with lots of load of memories.. 
Which cannot be expressed and suppressed...
It's simple to say I LOVE YOU 
IT'S REALLY HARD TO LIVE FOR IT. 

Thursday, 17 August 2023

காதலின் கோணங்கள்

காதல் ❤️
  சிலருக்கு காவிய அழகு 💌
     சிலருக்கு உயிர் 💓
        சிலருக்கு நம்பிக்கை 💞
           சிலருக்கு சுவாசம் 💗
             சிலருக்கு மகிழ்ச்சி 💖
                சிலருக்கு பூரிப்பு 💘
                  சிலருக்கு துணை 💕
காதல் 
    சிலருக்கு பயம் 
      சிலருக்கு முற்றுப்புள்ளி                             சிலருக்கு சுயநலம்
           சிலருக்கு பணம் பறிக்கும்                        கருவி 
                சிலருக்கு விளையாட்டு                             சிலருக்கு பொழுதுபோக்கு 

பின் சொல்லப்பட்ட வெகு சிலர், 
முன் சொல்லப்பட்டவருடன் இணையும் போது..... 

காதல்
   பலருக்கு மனதில் ஏற்படும் காயம்         ஆறாத காயம்..... 💔💔
   பலருக்கு வாழ்நாள் வலி 

ஆனால் என்றும் காதல் 
ஓர் உன்னதமான உணர்வு 

Tuesday, 20 June 2023

மனதின் குரல்

மழை சாரல், மாலை நேரம்
மனதோடு உந்தன் ஞாபகம் மட்டும் அன்பே... ஓர் குடையில் இரு மனங்கள் பேசி கொள்ள..
நிசப்தம் மட்டும் நீங்காது நீள...

Memories

Every Day and Night, My Mobile is freeing up the memory space for better performance...
Every night, My Mind is filled with Memories that doesn't make me sleep. 
I am also trying to truncate the memories from broken heart. 
But Some Scenes or Sweets or Songs or Something in this world is keep on reminding me... Some Painful Past.. 

Friday, 2 June 2023

காதல் ஓவியம்

சிலை போன்றொரு பெண்ணைக் கண்டேன்... 
சிலையாகி உறைந்து நின்றேன், சிரிப்பாலே சீண்டிக் கடந்தாள் மெய்சிலிர்த்ததெழுந்து உயிர் பெற்றேன், 
இவளே... இவளே... என் உயிரென கண்டேன், 
உலகும், உறவும் இவளென உணர்ந்தேன், 
நிதமும் அவளின் நிழலை போல நெருங்காமல் நினைவாலே தொடர்ந்தேன், 
மீண்டும்.. மீண்டும்.. அவளை காண்பது போலே கனவில் காட்சிப்படுத்திக் கொண்டேன், நினைவினாலே கண்ட காட்சி நிறைவேற பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்ந்தேன், 
அருகே அருகே அமர்ந்து கொண்டோம், 
அறியா கதைகள் பல பேசி கடந்தோம், 
கண்கள் காதல் ஓவியம் தீட்ட நெஞ்சம் நிறமென மாறி போக கலந்தோம் காதல் ஓவியமாக...