Friday, 10 November 2023

அழகின் அழகு

அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய்....
இது வாக்கியம்.. 

இருபதுகளில்,.... 
ஹய்யா ஜாலி 
நான் அப்படியே இருக்கிறேன்..
நான் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள்... 😁😁😁

முப்பதுகளில்... 
நான் அப்படியே இருக்கிறேன்.. 
அன்று பார்த்தது போலவே இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்....😔😔😔

வாக்கியம் ஒன்று தான்.. 
அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய் அழகாக.. 

ஆனால், ஒரு வயதில் மகிழ்ச்சி.. 
ஒரு வயதில் அழற்சி... 

முப்பதில் அழகாக இருப்பது மகிழ்ச்சியே... 
ஆனால் முப்பதுகளில் உண்மையான அழகு 
தாய்மையே.... 

தாய்மையினால் வரும் மாற்றமும், அழகின் அழகே.. 

நல்ல மாற்றமும் அழகே.. 
நல்ல மாற்றம் வேண்டி பயணிக்கிறேன். 

பிரியா.. 
November 10 2023




No comments:

Post a Comment