Sunday, 3 September 2023

அஞ்சறை

வெகுளியால் கடுகு போல் பொரிந்தாள் என் கண்மணி. 

அவள் அகம் சீராக இல்லை என்பதை உணர்ந்தேன். 

மிளகு கண்களால் என்னை மிரட்டினாள். 

நேற்று வரை நாங்கள் கடுகு உளுந்து. 
இன்று என்ன கடுப்பு என்று தெரியவில்லை. 

என்னவென்று விளங்காமல் விரல்களை பிசைந்திருந்தேன். விரலில் தட்டுப்பட்ட மோதிரம் விவரத்தைச் சொன்னது. 

அவளிடம் நான் மண்டியிட்டு இல்லை... 
மாட்டிக்கொண்ட இல்லை இல்லை எங்கள் மணநாள் என்று.. 

மரியாதையாய் மன்னிப்பு கேட்டு மஞ்சள் குங்குமம் இட்டு என் மணவாட்டியின் மனம் கவர்ந்தேன்.. 

மீண்டும் கடுகு உளுந்தாய் அஞ்சறையில்... 
என் அஞ்சுகத்தின் அகத்தில்❤️

No comments:

Post a Comment