ஓரமாக செல்கிறேன் மோதாமலே
காயாத கண்ணீர் துளிகள் கன்னத்தில்..
அந்த நீர் முழுவதும் பருகியே,
என் தாகம் தீருதே.....
ஒரு அழைப்பு.. ஓர் சிரிப்பு.. ஓர் நிமிட மகிழ்ச்சி...
பழைய காயங்கள் மனதோடு.. காலங்கள் சென்றாலும் மறையாத மனவடு...
மன வலி, வழி மாறி
தொண்டை குழியில்...
திறவாத வாய்..
மனதை திறக்கிறேன் எழுத்துக்களில்...
ஆழ் மனது அறியும், இது தொழில் முறை அழைப்பு என்று 💔
No comments:
Post a Comment