Sunday, 3 September 2023

சிரிக்க மறந்த சிலையாய்

அறிமுகமானவர்கள் அருகில் கடந்து சென்றாலும் யார் என்று தெரியாத முகம் போல கடக்கச் செய்த காலத்தை என்னவென்று சொல்வது.. 

போலியான சில முகங்களைக் கண்டபின்.. 
யாரையும் நம்ப மறுக்கிறது மனம் நெருங்க தயங்குகிறது நெஞ்சம்.. 

வலிமையில்லா வெற்று வாக்குறுதிகள்.. 
வன்மம் கொண்ட முகங்கள் இவைகள் என் இதயத்தை கூறு போட்ட பின்... 

நான் சிரிக்க மறந்த சிலையாய் நிற்கிறேன்... 

No comments:

Post a Comment