Friday, 19 June 2026

அழகான தருணம்

பல்லாண்டு பிறகு பிரியத்திற்குரிய பாவை, 
என் பார்வையில் பிடிபட்டாள்.
புன்னகையோடு பேசுவாள் என்று எண்ணி நெருங்குகையில்..
எள்ளும் கொள்ளும் அவள் பார்வையில். 
பதறி பின்வாங்கினேன்.. 
சட்டென விழிநிலையில் மாற்றம்.
அருவியான அவளின் கண்கள்.
மீண்டும் பதறி போனேன். 
ஓரிரு நிமிடங்களில் அவளே வானிலை போல் மாறி, அமைதி கொண்டு, பின் புன்னகைத்தாள். மகிழ்ந்து போனேன். 
அப்பாடா... 
ஓரிரு வினாடிகளில் அவ்வளவு அழகான தருணங்கள்.. சில தடுமாற்றங்கள்

Thursday, 18 June 2026

ஆழ்கடல் அமுதே

அடியே, அழகே என்னை தாக்கி செல்லும் மெழுகே.. 
மேகமே.. மோக மழை பொழியாதே.. 
இதயம் தாங்காதே தங்கச் சிலையே.. 
அடியே, அமுதே கண் பாஷையில் பேசி கொல்லும் மின்மினியே.. 
ஆழ்கடல் அமுதோ காதல், 
பருகியதும் நெஞ்சில் பாரமே.. 

Tuesday, 2 June 2026

குழந்தை மனது 👶

குழந்தை மனது மீண்டும் வராதோ குழந்தை மனது மீண்டு வராதோ.. 
குழந்தை தன்மையை மீண்டும் தராதோ இந்த வாழ்க்கை..