Wednesday, 27 August 2025

விநாயக சதுர்த்தி 🙏

சிவ சக்தியின் மைந்தனே, 
சரவணனின் தனையனே, 
முதற் முதல் கடவுளே, 
யானை முகத்தோனே, 
நல்வினை ஈடேற துணை புரிபவனே விநாயகனே🙏 
வணங்குகிறோம் 🙏🙏

Saturday, 2 August 2025

மன்மத மாயோனே2

மன்மத மாயோனே மைவிழி சேராயோ
இதமாக இணைவாயோ 
இதயத்தில் துயில் கொள்வாயோ 
இதழ் கொண்டு இதயத்தில் சேர்வாயோ

Friday, 1 August 2025

மன்மத மாயோனே ❤️

இவள் இதழ் நணைத்திட வாராயோ💘
இவள் உடல் அணைத்திட சேராயோ❤️
இரவோடு பகலை இணைத்திட வாராயோ💕
இதயம் இரண்டற கலந்திட சேராயோ💗
உடல் உஷ்ணம் தீர்த்திட முத்தங்கள் தாராயோ...💋
தடயங்கள் இல்லாமல் தவறுகள் செய்வாயோ..💞
தவறாமல் தவமதனை கலைப்பாயோ!!💖 
மன்மத மாயோனே 😍

Wednesday, 23 July 2025

கோவம்

உங்கள் மூக்கிற்கு👃 மேல் கோவம் வருகையில்...
என் கண்ணிற்கு கீழ் நீர் கசிகிறது😢. 

Friday, 11 July 2025

காதல் மொழி

கோவிலில்.. காதில் விழுந்த காதல் மொழி,.. 
ஒருவர் : ராமன பாக்க போலையா.. 
அவள்: இல்ல, ராமனைப் பாத்துட்டு வர கண்ணுல , அவரை தரிசனம் பண்ணிகுறேன்.,
வீட்டுல போயிருகாங்க 

Monday, 7 July 2025

காயங்கள்

சில சமயம் காயங்களை ஆற்றாமல்,
வெறும் "திரையிட்டு" மறைக்கின்றோம்,
மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்து. 
சில சமயம், "பெரும் சுவர்" எழுப்பி 
பிறரின் பார்வையில் படாதவாரு,
காயங்களுடன் வாழ்கின்றோம், 
தனிமை எனும் சிறைச்சாலையினுள்

Sunday, 6 July 2025

புன்னகையின் நீளம்😊

நம் மனதின், பேசப்படாத 
மெல்லிய குரலையும்/ஆர்பரிப்பையும் , 
ஒருவர் மனதார கேட்டு, 
உணர்ந்து, 
புரிந்து கொண்டால்.., 
நம் புன்னகையின் நீளம் இன்னும் 
கூடுமே என்றும்... 

Saturday, 5 July 2025

மனதார பேசு

ஒருவரின் மனவலியை புரிந்து கொள்ள,
நாமும் அதே சூழ்நிலையை கடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. 
அவர் சொல்ல வருவதை மனதார கேட்டு, அதே சூழ்நிலையை மீண்டும் அவருக்கு
தராது இருக்க வேண்டும் என்ற 
எண்ணம், 
மனதில் எழுந்தாலே போதும். 

Inner Child 👶❤️

If you have a person who can listen and understand the voice/noise of your inner child,
Then life will be easier, even in chaotic situations. 

இன்பமே❤️

கடலின் சீற்றத்தை காணாத கப்பல் உண்டோ
காதலின் கதகதப்பில் கரையாத மனமும் உண்டோ

இன்பமே, அறத்தின் வழியில் அன்பு வசப்படும்
கண்ணில் காதல் குடியேரிவிட்டால், காயங்கள் யாவும் கன நேரத்தில் கண்ணயர்ந்து போகும்.

ஜோடி கிளிகளைத் தாங்கும் தோள்களில், உன் ஜோடி புறாவைச் சேர்ப்பாயோ

காதலைப் போன்று கடவுளும்,
ஓர் உணர்வு தான், 
கண்டவர் யாரும் இல்லை, உணர்ந்தவரும் வெகு சிலரே.

தலை திரும்பினால் தான் குழந்தை உலகை பார்க்கும்.
நீயும் பார்.. அழகிய உலகம் உன் அருகே

Wednesday, 2 July 2025

காதல் கோட்டை

முகத்தை பார்க்கவில்லை, 
மனதை பார்த்து விட்டேன்.. 
அடடா என்ன சொல்வது... 
சொல்ல நினைப்பதை
மனம்தான் மறுக்கிறதே..
அடடா என்ன செய்வது.. 
ஒரு கோடி வார்த்தைகள்.. 
மனமெனும் கோட்டையினுள்.. 
அதை கோர்வையாக பேசிடும் துணையாக நீ இருப்பாயா, 
காலம் காலமாய்

Peace and Happiness

Peace and happiness is within us. Most ppl are searching outside. In family, in friends, in work etc. They will never find it since they dont realise that they have it within them all along. 

Marriage Fact❤️

It's better to be alone than with the wrong person and it is better to be alone than with the right person for wrong reasons.


Saturday, 28 June 2025

குழந்தை = கடவுள்

கோவில் கருவறையினுள் சென்று கடவுளைப் தொழ முடியவில்லை என்று 
ஆதங்கம் கொள்ளும் அன்பு மனமே.. 
அதே கருவறையில் இருந்து வெளியே வந்த குழந்தைகளைக்,
கறை படிந்த கரங்களிடம் இருந்து  காப்பது யாரு... 
என் அன்பு, சமூகமே. 

Thursday, 26 June 2025

இமை

இதயம் கனத்திட..
இமைகள் பெருத்திட... 
நெஞ்சில், நிறைவான நினைவென்று 
இல்லாமல் இருக்கையிலேயே.., 
கண்களில் இருந்து நில்லாமல் வரும் நீரை நிறுத்துவது யாரு

Sunday, 22 June 2025

நல்லா இருக்குயா

ஓய் எப்படி இருக்க நல்லா இருக்கியா
என்று கேட்க தோன்றும்.. 
ஆனால் கேட்பதற்கு நாம் யார் அவர்கள் வாழ்வில், 
என்ற எண்ணம் வந்த அடுத்த நொடியே அமைதியாகிவிடும் மனம்.. 

நம்பிக்கை

முகத்திரை விலகிய பின்பும் நட்பானவர் போலவே பேசுகிறாய்.. 
முன்பு நீ நட்புடன் தான் பேசினாய் என்று எண்ணியபோது 
என் நம்பிக்கையை, எத்தனை முறை கிழித்தாயோ தெரியவில்லை. 


புரிதல்

 நீ படிக்க அல்ல... 
நான் நம் காதலை உணர்ந்து கொள்ளவே எழுதுகிறேன்.. 
நாம் காதல் நாட்களை.. 
கவிதைகளாய்.. 

நினைவு

வைகை கரையில்,🌊
வைகறை பொழுதில், 🌅
சுடர்விடும் சூரியனை🌞
பிரியத்துடன் சுகித்தாள் பாவை😊 ... 
உன் நினைவு வர, 
கண்ணீரையும்..
கலைந்த "மை" யையும்  கரையில் கரைத்து..
திரும்பினாள் உன் நினைவோடு. 

Saturday, 21 June 2025

கவியமுது

நினைவில் நீ நிற்கும் போதெல்லாம், நில்லாமல் எழுதுகிறேன் நாம் வாழ்ந்த  காலங்களை, 
கவிதைகளாய்.... கொஞ்சம் கற்பனையின் வாசம் தொட்டு 

உன் முகம்

கடுமையான காலங்களிலும் கண் முன்னே உன் முகம் நிழலாடுவதால் கடந்து செல்கிறேன் அந்த கஷ்டமான
நேரங்களை, சிறு புன்னகை கொண்டு 

அன்பே

பல வலிகள் வழி மாறி விலகிடும் அன்பே.. 
நீ என் விழி சேர்ந்தால்.. ❤️❤️

பிழையான பிராத்தனை

உன்னோடு இருக்க விருப்பம் கொண்டு, பிரார்த்தனை செய்தேன்.
பிராத்தனையில் பிழையோ!!!!
அறியேன்?? 
உன் நினைவுகளோடு இருக்கிறேன்..
நீ எப்படியோ அறியேன்!!? 

Wednesday, 18 June 2025

கவிதை

தூக்க கலக்கத்தில் வரும் கவிதைகள் எல்லாம் துயில் கலைக்கவே வருகின்றன துண்டு சீட்டில் எழுதும் பொழுது
வருவதில்லையே ஏன் 

Friday, 13 June 2025

May Day

For some girls, After marriage,
Every day is "May Day". 
But still few girls remains Silent. 
They are Silent, 
because of the Saddist Society.
They don't want to get the Mark
Separated. 

Thursday, 12 June 2025

நரை

கருமை நிறம் கரைந்து, 
விரைந்து வெண்மை வந்து நிரம்பி வழிகிறதே...
கூந்தல் என்னும் காட்டருவியில்...
#90skids 

Tuesday, 10 June 2025

காலை கனவில் காதல் கொண்டேன்

காகிதத்தில் அழகாய் வளரும் காதல் ஏனோ, 
நிகழ் காலத்தில் கலைந்து, கரைந்து  விடுகிறது. 
காலமெல்லாம் காதல், காகிதத்திலும்
கனவினிலும் தானோ🤔

Monday, 9 June 2025

That's the limit

Too much tolerance towards toxic people and toxic relationship leads to trouble to your happiness. 

Friday, 6 June 2025

முட்டாள் முடவன்கள்

சவால்களைச் சந்திக்க துணிவில்லாத கோழையின் புகலிடமே போதை. இயற்கையின் அழகை, அறிவினால் அறியவும், 
ரசிக்கவும் முயலாத முடவன் தான், 
போதை எனும் பாதாளத்தில் விழுந்து கிடப்பான். 


கல்லான கள்வனே

கல்லான கள்வனே மனம் திறந்து கேளாயோ... 
அன்பெல்லாம் என் அன்பெல்லாம் அனலில் இட்ட சருகாகியதே..
உயிராய், உயிரின் மெய்யாய் நான் இருக்கையில், 
பொய்யை (மாய உலகம்) தேடி சென்று புலம்புவது ஏனோ

Tuesday, 3 June 2025

மரத்துப் போச்சு ❤️‍🔥

முட்கள் தைத்த மனதில் கூட மலர்கள் மலரலாம்.. 
ஆனால் மரத்துப்போன இதயத்தில்.. 

Monday, 2 June 2025

காதல் கல் நெஞ்சம்

காதலை மறந்தால் கூட பரவாயில்லை, காதலை உணராவிட்டால் கூட பரவாயில்லை, 
காதல் கொண்ட நெஞ்சை மரத்து போக செய்யாதீர்கள்..
மனதை மறித்து போக செய்யாதீர்கள்
பொய்யான நம்பிக்கை வார்த்தைகளால்

Thursday, 29 May 2025

படிப்பறிவு


படிப்பறிவின் வெளிப்பாடு ஆங்கில அறிவோ, புத்தி கூர்மையோ இல்லை. 
சிறந்த பண்பு, பிறரை தன் சுயநலத்திற்காக ஏமாற்றாமல் இருப்பதுவே ஆகும் 

பண்பு

சொல்லிய சொல்லில் உண்மை மறுக்கப்படுமாயின், சொல்லாதீர்,
பிறரைக் கொல்லாதீர் 

கொல்லாதீர்

ஒரு பூவின் புன்னகையை கொன்று,
சூடி மகிழ்வதை போலவே,
ஒரு பெண்ணின் புன்னகையை கொன்று, அவளை சூட எண்ணாதீர்.. 

Tuesday, 6 May 2025

ஆணின் நாணம் ❤️

ஆண்கள் எளிதில் வெட்கம் கொள்ள மாட்டார்கள் .. 
கொண்டவள் கோரினால் கொள்ளை
கொள்ளையாக கொட்டி தீர்ப்பார்கள் 

இளமை புதுமை ❤️

இளமை: 
முகப்பருவும் முளைவிட்டு முகம் காட்டும், 
பருவ மங்கை பார்வை பட்டவுடன்.
முதுமை:
தோல் சுருக்கமும், தொலைந்து போகும், 
தோழி அவளின் தொலைவு 
சுருங்குகையில்.. 

Friday, 2 May 2025

மழலை மலரும் ❤️

உன்னிடம் ஒருவர் உயிராய் இருப்பதை
உள்ளம் உணர்ந்து விட்டால்,
உச்சி முதல் பாதம் வரை, குருதி 
குதித்தோடும். 
நெஞ்சம் குதித்தாடும்.. 
உன்னிடம் மறைத்திருக்கும், 
மழலை மலரும் ❤️

காதல் அழகு ❤️

காத்திருப்பதில் காணப்படும் காதல்❤️..
குறுஞ்செய்தி அனுப்பும் போது, 
அரும்பும் குட்டி புன்னகை😊.. 
சொல்ல நினைப்பதை, 
எப்படி சொல்ல என்று மனதில் 
எழும் தவிப்பு 🤔
அழகானவை.. நம்மை அழகாக்குபவை 😉

Thursday, 1 May 2025

தங்கமே தங்கமே

தங்கம் போல தகதகப்பா🪙, 
வைரம் போல மினுமினுப்பா,
கோவம் 😈என்னைக்கும் குறையாது கொஞ்சுறது போலவே😘😘,
மவுசு என்னைக்கு இறங்காது என் மத்தாப்பு மந்தாரப்பூவழகிக்குத் தங்கம் போலவே 

Sunday, 27 April 2025

கார் காதல் 🚘

சாலையில் சீறும் வெண் பனி மேகமே..
மோகமே என் விரல்கள் தீண்ட,
நீ விரைகையிலே🚗
கற்கண்டு கண்களில் ஒளி பாய்ச்சி,
ஒளி வேகத்தில் விரைவாய்..
மின்சாரம் கொண்டு மின்னல் வேகத்தில்
மிளிர்வாய் சாலையில் 🚘
 

காதல் ஜோரு❤️

அட சீனி சக்கர காதல், இதயத்தில் இனிக்குதையா ஜோரா
என் சீமராணி பொங்கி, சிரிகிறாளே
கோல்டு பீரா.. 
அவ சீனி மிட்டாய் சிரிப்ப பார்த்து நா சிலிர்ந்து போனேன் நல்லா..
அவ பார்வ காட்டுற பாதையில பறக்குறானே இந்த பில்லா 

Saturday, 26 April 2025

காதல் இசை 🎹🥁🎸

நான்  ஓரமாய் ஒளிந்து  ரசித்த, 
ஒளி நிறைந்த கண்கள், 
சற்றென்று என் அருகில் வந்து பேச... என்னுள் ஆயிரம் ஹார்மோனியங்கள் இசைப்பது போன்ற ஓர் ஒலி 🎼🎹🎸.. 
அந்த கண்களைக் கண்டதும் என் ஹார்மோன்கள் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியதே🎼🎵🎹🎸🥁

Friday, 25 April 2025

காதலும் கற்பனையும் ❤️

கோடி நுண்ணறிவு கருவிகள் வந்தாலும், அன்பே,.. 
உனை வார்த்தைகளில் வர்ணிக்க.. 
என் காதலைத் தாண்டி ஒரு கருவி ஏதும் இருக்க இயலுமோ... 

அன்பெனும் காதல்

உன் ஒற்றை பார்வை உயிரை கொல்லுதே.. 
உன் ஒற்றை வார்த்தை உயிரை மெல்லுதே
என் நாடி துடிப்பு, நடனமாடி உன் பின் செல்லுதே.. 
என் நினைவெல்லாம் கிறங்கி கிறுக்குவது உன் பெயர் தானே 

Wednesday, 23 April 2025

கவிதை ஊற்று ❤️

காதலால், கரை புரண்டு ஓடிய கவிதை ஊற்று,
இன்று காய்ந்த பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது.
நிஜத்திலும் ,நினைவிலும் நீ நில்லாது நீங்கியதால் 

காதல் சுடர் 🔥

மை, காகிதத்தில் மலர மறுக்கிறது📝 
நீ என் நினைவுகளில் இல்லாமல் கரைந்து போனதால்🔥..
எழுத்துக்கள் ஏக்கத்தோடு ஏறெடுத்துப் பார்க்கின்றன🖋️,...
என்ன இவள்.. காதல் கொண்டு நம்மை அழைக்க மறுக்கிறாள் என்று🖊️..
நான் என் செய்வேன்!!! 
என் உள்ளத்தில் காதல் சுடர் அணைந்ததற்கு❤️‍🔥❤️‍🔥

Monday, 21 April 2025

உன்னால் அன்பே ❤️

நித்தம் ஒரு வானம்🧳, 
நெஞ்சில் ஒரு வேகம்😎, 
எல்லாம் எல்லாம் உன்னால் அன்பே❤️,
எல்லை தாண்டி போகிறேன்👟 
எக்கச்சக்க நினைவுகளைச் 
சூடுகிறேன்🥇, 
எல்லாம் எல்லாம் உன்னால் அன்பே❤️,

Sunday, 20 April 2025

காதல் பாரம் 🥰

கடந்து போகையில், என்னை களவாடாதே கள்ளி😉, 
விழி மொழியால் எனை விழுங்காதே, வள்ளி😍
மலர் சிரிப்பை மறைக்காதே, அல்லி🫰
நெஞ்சில் காதல் பாரம் தாங்காமல் தடுமாறுகிறேன் செல்வி 🥰




Wednesday, 16 April 2025

நினைவே துணை

ஒற்றை ஆளாக, 
நெடுந்தூரம் பயணிக்கின்றேன்..
தனிமை உணரவில்லை..☺️
நினைவில் நீ நீங்காது நிலைக் கொண்டதால்.. 

காதல் கண்கள்❤️❤️

உன் ஒற்றை பார்வையே 😍என்னுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளையும்🦋🦋, வாய்க்கொள்ளா சிரிப்பையும்😁😀,
மனமலர்ச்சியையும் பூக்கச் செய்கிறதே. 
கவர்ந்திழுக்கும் காந்த(காதல்) கண்களின் ஆற்றலின் பிடியில் சிக்கி சிறகடிக்கின்றேன்🕊️🕊️

நீ காற்று ❤️❤️

வெப்பம் வேதனை வழங்கும் வேளையில்😰, 
குளிர் காற்று தீண்டி கொஞ்சுவது போல😊, 
கண் அயர இடைவேளை இல்லா வேளையில்😰,
நான் இளைப்பாற😇, உனது புன்னகையும்☺️ பார்வையும் 😍

Thursday, 27 March 2025

கன்னம் காணவில்லை

நீ தீண்டிய கன்னங்கள் கரைந்தோடி விட்டது, 
அதில் கண்ணீர் மட்டுமே பயணப்பட்டதால். 
எறும்பு ஊர கல்லும் தேயுமல்லவா! 
என் கன்னங்கள் என்ன விதிவிலக்கா!! 

Sunday, 23 March 2025

இணையே என் வழி துணையே

இணையேவா இணைந்திட வா, இம்மையில் இருவரும் என் முகத்துடன் வாழ்வோம் வா ,
வருங்காலம் வெளிச்சமாகும் வா, 
வசந்த காலம் காண்போம் வா

இறையே 🙏

இறையே வா இரைந்திடுகிறேன் உன்னிடம் வா, 
இம்மையில் நன்மை செய்திட வா, 
இன்முகத்துடன் வா, 
இன்பம் இதுதான் என்று காட்டிடவா இறையே.. 

Saturday, 22 March 2025

அன்பலை

கடல் மணலில் கால் தடம் போல என் கோபத்தை பதிய வைத்தாலும் உன் அன்பு அழகாய் வந்து அதை அழகாய் அழித்து விடுகிறது

Friday, 21 March 2025

புன்னகை

என் புன்னகை தான் உனக்கு பிடிக்கும் என்றால் அதை மாற்றி எழுத நீ நினைத்தது ஏனோ

உன் கண்களுக்கு என் புன்னகையை தான் பார்க்க ஆசை என்றால், 
என் கண்கள் கலங்க காரணமாய் நீ இருந்தது ஏனோ

Wednesday, 19 March 2025

நீ இல்லாமலே

நீங்காத நினைவுகள் நிழல் போல தொடருதே..
தொடரும் என்று நினைத்த உறவுகள், 
தொடங்கியதும் முடிந்ததே.. 
முடிய வேண்டிய முரண்கள், 
முடிவில்லாமல் நீண்டதே..
நீண்ட வாழ்வை, 
நீ இல்லாமலே தொடர்கிறேன்... 

Tuesday, 18 March 2025

மனம் மறுக்குமே

சிறுவயதில், அன்னியரிடம் பேச தயங்கிய மனம், 
வயதில் வளர்ந்தபின், 
அறிந்தவர்களிடம் பேச மறுக்கிறது.
முதுகில் குத்திய பின்பும், 
மணக்க, சிரிக்க சிலர் பேசும் போது, 
மனம் மறுக்கத்தானே செய்யும். 

Saturday, 15 March 2025

காதலால் ❤️

உன் சுவாசம் எனை முத்தமிட, 
உன் கண்கள் என்னை சிறை பிடிக்க 
உன் கூந்தல் வலையில் நான் அகப்பட, 
ஆதலால் அகம் படப்படக்க.. 
உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகளில், நான் உருக.. 
உன் சுவாச காற்றின் வெப்பத்தில்
நான் நீராவியாய் காற்றோடு கலக்கிறேன், 
காதலால்... 

Tuesday, 11 March 2025

தமிழின் பலம்

பாலத்தின் தூண்களில் பாரதியாரின் பாரதிதாசனின் வரைபடங்கள்.
பாலத்திற்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் அவர்களின் படைப்புகளே பலம்., 
தமிழைத் தாங்கி பிடிக்கும் தூண்கள், 
தமிழை அனைவர் மனதிலும் ஊன்றிய கோன் (அரசர்) 

Monday, 10 March 2025

நீரின் நிலை

வானுயர்ந்த கட்டிடங்களின் நடுவில் உள்ள சிறு நீர் நிலையைப் பார்த்து என் மனம் சொன்னது உன் தலையில் எவ்வளவு சீக்கிரம் மண்ணை வாரி கொட்ட போகிறார்களோ என்று.. 

உறவு ❤️✅

கோபம் கொள்ளவோ, 
கடிந்து பேசவோ, 
கேள்வி கேட்கவோ
கண்டிக்கவோ, 
கஷ்டத்தை பகிரவோ
கண்ணீரை காண்பிக்கவோ
ஓர் உரிமை வேண்டும்.. 
மதிப்பீடு செய்யாத உறவு என்ற உரிமை 

உறவு

பழைய நினைவுகளை மறக்கடிக்கும், 
வலிகளை வளரச்செய்யாது,
புன்னகையைப் பூக்கச் செய்து, 
புத்துணர்ச்சி தரும் உறவு
அனைவருக்கும் வாய்த்திட 
வாழ்த்துகள் 

காதல் ❤️🥰

காதல் வெறும் சொல்லாடல் மட்டுமே அல்ல..அது ஒரு 
ஆத்மார்த்தமான அனுபவம்.
அன்பின் பரிமாற்றம். 
அனுசரணையின் வழித்தோன்றல்.
புரிதலின் பிறப்பிடம். 

Saturday, 8 March 2025

கலங்காதே கண்ணம்மா 💪

கன்னியின் கண்களில் கலக்கமோ, கவலையோ தெரிய கூடாது, 
ஏன்னென்றால் அதை கண்டுகொண்டு 
கலகம் செய்து, களிப்பு தேடும் கயவர்கள் நிறைந்த உலகம் இது.
கவனம் கண்ணம்மா 

Tuesday, 4 March 2025

ரோஜா 🌹

உன் வெளி பேச்சுக்கள் மென்மையான ரோஜா இதழ்கள் போலவே இருந்தன.. 
ஆனால் உன் ஆழ்ந்த எண்ணங்கள் அதில் இருக்கும் முட்கள் போல இருந்துள்ளன. 
முட்களைக் கவனிக்க தவறியது, என் தவறே. 

Saturday, 1 March 2025

அன்பின் அழைப்பு ❤️

அலைபேசி அடிக்கும் போது எல்லாம்,
அழைப்பது நீயாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகின்றேன்.
ஆண்டுக்கு ஒரு முறை அளவளாவினாலும், 
அலாதி ஆனந்தம் அடைகின்றேன், 
ஆயூளுக்கும் நினைவில் கொள்கிறேன்.. 
நினைவுகளை அசைப்போட்டு மகிழ்கின்றேன். 

கவிதை ❤️

உனக்காகவே பிறந்த "கவிதை" ❤️... 
ஆனால் கவிதையின் மொழி, 
கடினமாக அமைந்தமையால், 
உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை போலும்..
கவிதையின் மொழி, 
"காதல்"  ஆயிற்றே... 

Friday, 28 February 2025

முகத்தை மறப்பேனா முழுநிலவே ❤️

முகத்தை மறைத்தாலும் முழுநிலவே, 
என் அகம் உனை மறக்குமா.. 
நீ ஒரு முறை, முறைத்தாலும் என் முகம்
அணுவாய் சுருங்கிடுமே
நீ இதழ் ஓரம் சிரித்தாலும், என் அகம் சிலிர்த்திடுமே..
உன் கண் சிவந்தால், என் சிந்தனை ஸ்தம்பிக்குமே
உன் கன்னம் சிவந்தால், நாணத்தில் 
நடனம் புரிவேனே


வாழ்க்கை வாத்தியாரே - ❤️

நன்றி வாழ்கை வாத்தியாரே, 
வாழ்க்கை பாடம் கற்று தந்தமைக்கு. 
எவரையும் நம்பாதே, 
எவர் சொல்லையும் உற்று நோக்கு, எவரிடமும் எதையும் பகிராதே, 
அன்பை பிறரிடம் தேடாதே, 
உனக்கானவர் நீ மட்டுமே..
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே, 
பிறரிடம் வாழ்வின் உண்மையை உளறி கொட்டாதே. 

விழியால் கொல்லாதே

ஒருவருடன் பேசாமலே,
நம்மிடம் புன்னகை தோன்றுமா🤔🤔
தோன்றும்.. 
விழிகள் மட்டுமே 
பேசி, மனதை "கொல்லும்" பொழுது..
இருவரிடம் இருக்கும் பட்டாம்பூச்சிகள் 
காதல் மொழி பேசி கொள்ளும் பொழுது

Thursday, 27 February 2025

காதலா ஈர்ப்பா❤️🤔

நீ என்னை பார்த்து செல்கையில்..
காற்றாடி போல, மனம் பறக்குதே..
விழிகள் பார்த்து கொள்கையில், 
இதழின் ஓரத்தில், புன்னகை வந்து செல்லுதே..
ஆயிரம் பேரிலும், உன் முகம் பார்க்கவே கண் தேடுதே..
ஆனால்.. இது எல்லாம் காதலின் முதல் படியா அல்லது 
ஈர்ப்பின் மூன்றாம் விதியா

நடிக்காத புள்ள

முறைச்சு தொலைச்சு தான் நடிக்காத..
நீ மறைச்சு நடத்திய நாடகம் போதும்.. 
காலம் கடத்தி நீ சொல்லாத.. 
நீ சொல்லாத காதல் எல்லாம் 
உன் கண்ணுல பார்த்திட்டேன்...
போ புள்ள.. 
நீ போய்ட புள்ள.. 
என் நெஞ்சுகுள்ள..

நம்பாதே பேதை மனமே

விதி என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள்,
சற்று உற்று நோக்கினால், 
அது பக்கா சதியால் நிகழ்ந்தவை என்று தெரியவரும். 
மதியால் வெல்ல முடியாதவற்றை, 
உடனிருந்து உதவுவது போல், 
பின் நின்று குத்துவோர் நிறைந்த உலகிது.
நம்பாதே பேதை மனமே 

காதல் series

காதல் வந்தால்,  ❤️அவ்வப்போது 
கன்னம் சிவக்கும்..
காதல் வந்து போனால்💔, 
சிகையில் நரை வந்து நகைக்கும், 
நினைவுகள் நம்மை சிறைப்பிடிக்கும். 
காதல் வராமலே போனால், 
மனம் நம் இஷ்டப்படி சிறகடிக்கும் 🥰

Tuesday, 25 February 2025

இப்படியும் இருப்பாங்களா

பணம் கேட்கும் போதும்,
அதை வாங்கும்போதும் மனதிற்கு தோன்றாத தீட்டு
எல்லாம், 
திருமண பத்திரிக்கை வைக்கும் போது மனதில் தோன்றி விடும் சிலருக்கு..
போலி பாச வேசமிடும் நபர்களுக்கு.. 

மனித களைகள் 😈

கதிருடன் வளரும் களையை கூட கண்டுவிடலாம்..
நட்பு /தம்பி/தங்கை என்று போலி முகமூடி இட்ட மனித களையை கண்டு களை எடுப்பது சற்று சிரமம்..
அவைகள் பாலில் இட்ட ஒரு துளி விஷம் போல.. 

Saturday, 22 February 2025

காதல் Crush ❤️

Oh my காதல் crush நீதானே🥰,
உனை கண்மூடித்தனமாக காதலிக்கின்றேனே😍.. 
கண்பார்த்தால் 
கன்னங்கள் Blush ஆகுதே☺️,
Flesh எல்லாம் Freeze ஆகுதே🥶... 
கரம் பட்டால், 
current பாய்ந்தது போல்
Feel ஆகுதே🤗..
X இல் நம் பெயர் தான் #trend ஆகுதே 

Friday, 21 February 2025

முறைக்காதே நிலவே

முழு நிலவே முறைத்து தொலைக்காதே நம்மிடையே முரண் இருந்தால்,
முகத்தை சுளிக்காதே..
மனம் திறந்து பேசிட வா
முரண்டு பிடிக்காதே.. 
மனஸ்தாபம் இல்லா, அகம் உண்டோ கூறு, 
மகிழ்வான வாழ்க்கை, அதற்கு பின்னாலும் உண்டு, 
வாழ்ந்திட வா❤️❤️

வெட்கம்

பல ஆண்டுகள் விடுப்பில் இருந்த வெட்கம்,
நீ எனை பார்த்ததும், 
விடுமுறை முடிந்து 
பள்ளிக்கு முந்தும் பிள்ளை போல, 
முந்தி வந்து என் கன்னங்களில் இடம் பிடித்து அமர்ந்தது.. 

மடை திறந்து

நீ பக்கம் வராத வரை பேசாமல் இருக்கும் மனம், 
நீ எட்டி பார்க்கும் போதே பற்றி எரிகிறதே காட்டுத் தீயாய்
தீயை அணைத்திட, காதல் மடையை திறப்பாயோ

காதலின் பரிமாணங்கள்

என்னளவு உன்னை நேசித்தவர் எவரும் இல்லை.. 
உன்னளவு எனை சோதித்தவரும் இல்லை.. 
என்னைப்போல் உனக்காக சிந்தித்தவரும் இல்லை.. 
உன்னைப்போல் என்னை சிந்திக்க வைத்தவரும் இல்லை.. 
என்னைப்போல் உனக்காக அழுதவரும் இல்லை.. 
உன்னைப்போல் எவரும் என்னை அழ வைக்கவில்லை.. 

கற்பனை காதல்

முன் அறிவிப்பின்றி உன் மேல் வந்த காதலால், 
உன் அனுமதி இன்றி உன்னோடு வாழ்கிறேன் கற்பனையில்..
இந்தக் கற்பனையினால் கவிதை வந்ததா.. இல்லை காதலால் கவிதை வந்ததா.. 
தெரியவில்லை

Happy Baby

Dislikes இல்லாமல் வீடியோ போட்டவங்களும் இல்ல.. 
Hurt ஆகாம, ஆக்காம Life வாழ்ந்தவங்களும் இல்ல..
Life should be simple with present happiness 

Thursday, 20 February 2025

புரியாத புதிர்

மலையளவு கோபம்,
வானளவு வெறுப்பு, 
எல்லாம் உன் மேல இருக்கு, 
ஆனா பழைய பாசமும் (அ) கொஞ்சம் நேசமும் இருக்கு.. உன் மேல..
ஒரே ஆள் மேல, இரண்டு உணர்வும் 
எப்படி இருக்கும்.. 
தெரியல 

உன்னாலே உன்னாலே ❤️

என் கற்பனையும் சரி,
என் கவிதைகளும் சரி, 
என் காதலும் சரி, 
என் ஒவ்வொரு கன நேர சிந்தனையும் சரி, 
நினைவும் சரி, 
உன்னாலே, உனக்காகவே..
உனைச்சுற்றியே, உனைப்பற்றியே❤️

வா காதல் வாத்தியாரே 🥰😍 #vaavaathiyaar

வா காதல் வாத்தியாரே❤️.. 
காதல் கணிதம் சொல்லி தரவா🌹..
கையை பிடித்து, மன நிறைவா🤗..
என் புன்னகையைக் கூட்டி☺️➕
உன் கோபத்தைக் கழித்து😡➖, 
நம் காதலைப் பெருக்கி❤️✖️, 
நம் மகிழ்வை பகிர்ந்து🥰➗.. 
வாழ்ந்து பார்ப்போம்😍
வா வாத்தியாரே.. ❤️

காதல் 420

காதல் என்ன T20யா
அதில் நீ என்ன 420யா..
தீரா காதல் என்பாய், 
டீ அருந்தும் நேரத்திலே.. 
திரும்பி பார்க்கும் நொடி பொழுதில்.. 
காதல் இல்லை என்பாய்..
பொய்யாய் காதல் மொழி உரைபாய், 
பொய்யாமொழி புலவர் போல் நடிப்பாய்
நடிப்பில் நட்சத்திரம் தான் நீ.. 
ஆனால் நம்பிக்கையில்..
 கேலி(டி)ச்சித்திரம் . 🚩🚩

காதல் ரோஜா 🌹

இணையே பிரியாதே.. 
இணையைப் பிரியாதே..
வாழ்வில், முள்ளை மட்டும் பார்க்கின்றாய், 
ரோஜா மலரின் 🌹 மணத்தை முகர மறுக்கின்றாய். 
காதல் கொண்ட காலத்தை மறக்கின்றாய்
உயிர் கொள்ளுமா, காதல் ரோஜா 🌹🌹

Thursday, 13 February 2025

என்றும் காதலுடன் ❤️

காந்த கண்களால் என்னை கவிஞனாக்கி, 
வார்த்தைகளில் என்னை கஞ்சனாக்கி, 
செல்லம் கொஞ்சி, எனை சிலையென்றாக்கி, 
காதலால் சிறை செய்து, ஆயுள் கைதியாக்கி,
ஓர் நொடியில், என் உயிரை உனதாக்கிய
உலகநாயகியே, உயிர் தோழியே
என்றும் காதலுடன்.. உன் நாயகன் 

நெஞ்சம் மறப்பதில்லை 💘 #kadhalkavithaigal #lovememories

மற்றொரு முறை அழ மனமில்லை..
மனதால் காதலை மறக்க முடியவில்லை.. 
காதல் என்று நம்பி, நெஞ்சம் நிறைந்து நகைத்த நாட்களின் நினைவுகள் அழியவில்லை.. 
வெம்பி, அழும் கண்களின் நீரைத் துடைத்திட இங்கே விரல்கள் இல்லை.. 

ரங்கா🙏

அரங்கா திருவரங்கத்தை அலங்கரித்திருக்கும் மதுசூதனா மாதவா
மண்ணில் வைகுண்டத்தை வைத்த
வேங்கடவா 
ஆனந்தத்தை அள்ளித்தரும் 
அனந்தபத்மநாபா
பாதையின் பதியே நாராயணா,
வரதராஜா, கோவிந்தா
செயற்கரிய செயல்களை அனைவரும் செய்திட அருள் புரிவாய் ரங்கா

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

குலவை ஒலி எழுப்பி
பிரபஞ்ச ஒளி நாதனான சூரிய பகவானை வணங்கி
அனைத்து உயிர்களும் இன்புற இறைவனை வேண்டி வணங்குவோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

காதல் ❤️

நிழலாய் கூட வாழ்ந்தாலும் சரி நினைவில் நின்றாலும் சரி
நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதே காதல்

காதலே காதலே ❤️❤️

காலம் கடந்தாலும் அன்பு காதல் கரையாதே
வெறுப்பு மிகுந்தாலும்
விருப்பம் மறையாதே
வலி தான் தரும் என்பதால், 
அன்பு காதல் வழியை நினைக்காதே

Wednesday, 12 February 2025

உயிர் உன்னுடையது ❤️

விழியால் விழுங்காதே என் வாலிபத்தை, 
கண்களால் என் மனதில் கலகம் செய்யாதே
கரம் பற்றி, சிறை செய்யாதே சின்னஞ்சிறு நெஞ்சை.. 
பாவையே நீ பார்த்ததும், பாஸ் (Pause) ஆகுதே என் பேச்சு மூச்சு எல்லாம்.. 
பரவாயில்லை, 
உனக்கு இல்லாத உரிமை (உயிர்) யாருக்கு 

கோடி காதல் கொட்டுதே❤️

உன் கை பிடிப்பதாய் எண்ணி, 
மை பிடித்து சொல்கிறேன் என் காதலை..
என் காதல், 
கவிதைகளாய் விரிகிறது இன்றும்.. என்றும், என் மனம் காதலோடு இருப்பது உன்னிடத்தில் தான்.. 
ஆயிரம் கோடி கோபத்திலும்.. 

காதல் சரி ❤️

என்னப்பா காதல் சரிப்பட்டு வரலையா இன்று வாழ்க்கை எனை கேட்டபோது.. 
வாழ்க்கைக்கு நான் சொன்ன பதில், 
எனை சரி செய்ததே இந்த காதல் தான்.. 
என்ன, 
காதல் வழிகாட்டி, கூடவே வலியையும் காட்டி விட்டது.. 
சரி தானே❤️❤️

என்ன சொல்ல ஏது சொல்ல

எவ்வலி உனை சேராதிருக்க, நான் பாடுபட்டேனோ.. 
அவ்வலி எனக்கு பரிசளிக்கவே நீ என் பக்கத்தில் இருந்தாய் என நொடிப்பொழுதும் நான் நினைத்து பார்க்கவில்லை..
நல்லதொரு நாடகம், நட்பென்ற பெயரில் 

காதலின் வீச்சு ❤️

தோட்டாக்கள் போன்ற கண்களை கண்டு,
துடிக்கின்ற இதயம் நிற்பதை உணர்ந்தேன். 
கண்களும் பேசும் என்பதை காதல் வந்ததும் உணர கண்டேன். 
காலையில் பார்க்கும் கதிரின் ஒளியை விட, உன் கண்களின் கதிர்வீச்சு என் உயிரைக் உருக்குதடி.. காதலி

Tuesday, 11 February 2025

வினா ❤️ விடை

காஜல் எல்லாம் கரைகிறதே அன்பு கண்மணி, காரணமே இல்லாமல்..
காத்திருப்பின் காயங்கள் ஆறுமோ நம் கரம் கோர்கையில்..
விரும்பி வேண்டும் என்று விழைகையில் விலகிச் சென்றாய்..
விரிசல் விழுந்த பின், விருப்பம் என்றாய்.. 
விடை, பிரிவு தான் என்று வினாவை பார்க்கும் முன்னே அறிவேன்.

Saturday, 8 February 2025

காதலைக் கரையேற்று❤️

முரண் தகர்த்து, முன்னேறி வாராயோ என் முத்தமிழ் சிலையே❤️..
இதழ் இதயம் இணைந்திட வாராயோ என் இன்னிசையே❤️ 
விரல் கோர்த்திட, விரைவில் வருவாயோ என் வின் மேகமே❤️. 
கண் பார்த்து, காதலைச் சொல்வாயோ என் கனியமுதே ❤️

Deepseek

Deepseek அறிந்திடா Deep Sea என்னவள்.
Deeper Thoughts மூலமாய் Dishyum Dishyum செய்கிறாள்.
அரண் அமைத்து, திரை இட்டு என்னை துரத்தி விடுகிறாள். 
திரை விலக்கி, அரண் தகர்த்து அருகில் சென்றிட ஆவல் அதிகம் தான் எனக்கு. 
ஆனால் என் நுண்ணறிவு, அவள் உள்ளுணர்வை capture செய்து, எனை caution செய்கிறதே..
She is in Mood Swings🚩

Monday, 27 January 2025

காதல் ❤️

காதலிக்கிறேன் என்று சொல்வது எளிது. 
காதலிக்கப்படுகிறோம் 
என்ற உண்மையான உணர்வை வாழ்நாள் முழுவதும் தருவது தான் காதல்

Saturday, 25 January 2025

பெண்ணும் பிரஷர் குக்கரும்

பெண்ணும் பிரஷர் குக்கரும் பிரஷர் குக்கரில் பிரஷர் அதிகமானால் கத்தி சத்துமிடலாம்.. 
ஆனால் சில பெண்களுக்கு அது கூட முடிவதில்லை..

Friday, 24 January 2025

காதல் பிறை❤️🌙

மஞ்சள் வானம் மலர்ந்திருக்க, மழை மண்ணோடு நேசம் கொள்ளும் மாலை வேளையில், 
கள்ளி என்னருகில், காதலைக் கண்களில் சுமந்து நின்று இருந்தாள். 
கண் பாஷையில் கூறிய காதல், 
அவள் நாவின் நுனியில் நின்று நாட்டியம் ஆடியது அவளை போல, 
இதழ் படபடக்க.. 
அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் சிறகடிக்க.. ஆசையை கூறாமலே அவசரமாய் மறைந்தாள்
மூன்றாம் பிறை போல..
பௌர்ணமியை எதிர்நோக்கும் என் காதல் ♥️ 

Monday, 6 January 2025

அன்பே சிவம்

மனம், ஓர் அன்பை தேடும் மனம், ஓர் அன்பை நாடும் மனம், ஓர் அன்பை சேரும் மனம், ஓர் அன்பை சாடும் மனம், ஓர் அன்பை எதிர்நோக்கும்
மனம், ஓர் அன்பை எதிர்க்கும்
மனம் ஓர் அன்பால் உவகை கொள்ளும். 
அன்பே அமைதி ♥️

Thursday, 2 January 2025

பௌர்ணமி நிலவே

காதலே, 
ஆயிரம் கோடி பௌர்ணமி நிலவின் சாயல் உன் முகத்தில். ஆனால் ஏன் அன்பே, சற்று நேரம் தோன்றி மறையும் மூன்றாம் பிறையாய் என் கண்ணில் படுகிறாய்.
பௌர்ணமி வெளிச்சத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் என் காதல் ♥️