Friday, 28 June 2024

அன்புள்ள மனதிற்கு❤️

மனதிற்கு, ஒரு மனம் திறந்த மடல். 
மனதுடன் ஒரு குட்டி உரையாடல். 
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️

சிரித்து பேசுபவர்கள் எல்லாம் சிநேகிதர்கள் என்று சிந்தனை செய்யாதே மனமே...
சிநேகிதர் வேடமிட்டு சில சகுனிகளும் இருப்பர். 
புகழ்ந்து பேசுவதை எல்லாம் பாராட்டு என்று எண்ணிவிடாதே.. 
வாஞ்சையோடு பாராட்டுபவரை விட மனதில் வஞ்சனை வைத்து கொண்டு உரையாடும் உலகமிது. 
தாமரை தண்ணீர் போல் நீ, 
யாரிடமும் ஒட்டி ஒட்டாமல் இரு. 
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️

                           - அன்புள்ள மனதிற்கு, 

Tuesday, 25 June 2024

தூக்கம்😴👶🧑👸🧑‍🦳

தாயின் கருவறையில், நல்லதொரு நித்திரை - கருவாக
பின் தொட்டிலில் தூக்கியது ராஜ துயில் - மழலையாக
விளையாடிவிட்டு களைப்பாக தூக்குவது சிறப்பான உறக்கம் - குழந்தையாக
ஊர் கதை பேசிவிட்டு, உல்லாசமாக உறங்க செல்வது - இளமையாக
சோர்வாகி சொக்கி போய் துயில் கொள்வது - வயது முதிர்ந்தவராக
சோதனை ஓட்டம் முடியும் தருவாயில் இயற்கை தருவது.. 
நிரந்தர நித்திரை 

Sunday, 23 June 2024

மறைந்திருந்து பார்க்கும் 🐒🏞️

மகிழ்ச்சியாய் தவ்வி தாவி ஓடும்,
கிளை விட்டு, கிளை பாயும், 
குட்டியுடன் கொஞ்சி விளையாடும், 
பசித்தால் பறந்து பறந்து இரை தேடும், 
மறைந்திருந்தது பார்க்கும், 
மறுகணமே நம் கையை பதம் பார்க்கும். 
குறும்புக்கார குரங்குக் கூட்டம் 🐒

சமயங்களில் நதிகளும் அப்படி தானே, 
அழகாய் தவ்வி தாவி ஓடும், 
கிளைகளில் பாயும், 
காடுகளில், மலைகளில் கொஞ்சி விளையாடிடும். 
கோவம் கொண்டால், கொண்டாடி தீர்த்துவிடும், 
மனிதர்களைத் திண்டாடவிடும்,. 

மலரவள்❤️

மனதில் நினைத்தால் மறுகணமே தோன்றிடும் மந்தாரப்பூ அவள், 
சிரித்திடும் செவ்வந்தி அவள், 
சேட்டையில் கில்லி, அல்லி மலர் அவள். 
மண(ன)ம் நிறைத்திடும் மல்லிகை அவள்.
நான் பார்க்க மலர்ந்திடும், ரோஜா அவள். 

Friday, 21 June 2024

காதலாய் தமிழ் ❤️

உன்னோடு உரையாடி கொண்டு நெடுந்தூரம் நடந்ததே.. 
நான் படித்து தெரிந்த சிறந்த உரைநடை📙
உன்னோடு இயல்பாய் பேசி பயணித்த கணங்களே.. என் வாழ்வின் விவரிக்க முடியாத இலக்கணங்கள்.📙
உன்னோடு இலகுவாய் இணைந்து சிரித்த நாட்களே வாழ்வின் சிறந்த காதல் இலக்கியங்கள்.📙

Wednesday, 19 June 2024

ஆசை💞

விழுந்து விழுந்து எழ ஆசை உன் காதலில்..❤️
விழுது போல ஆடுகிறேன் மனம் ஊஞ்சலில்🎊
காற்றாடியாய் சுழல்கிறேன் உன் நினைவில்💖
கவிதை வரைகிறேன் கனவில் உன்னை கண்டு.. 💓

மினுமினுப்பு🏖️

தகதகக்கும் தங்கத்தை விட
மின்னிடும் வைரத்தை விட
ஜொலி ஜொலிப்பவள் நான்... 
பகலில் சூரிய ஒளி என்னிடத்தில் சேர்கையிலே மிளிர்கின்றேன்.. 
இரவில் நிலவொளியை நான் பார்க்கையிலே ஒளிர்கின்றேன். 
                - கடல் நீர் /குளம் நீர் 🏖️🏞️

திறவாய்

எனை தேடி வந்தாய்,
வாங்கி வந்தாய், 
அறையில் வைத்து அடைத்தாய். 
எனை திறப்பாய், படிப்பாய் என காத்திருக்கிறேன். 
என்னில் எழுத பட்டிருக்கும் வாக்கியங்கள் வலிமையானவை. 
ஆனால் என் எடை, மெல்லிடையே. 
என்னில் எழுத பட்டிருக்கும் வார்த்தைகள், மக்களைப் பேச வைக்கும். 
ஆனால் நான் மௌனித்து இருப்பேன். 
ஓர் நாள் 
திறப்பாய், ரசித்து, வாசித்து மகிழ்வாய்,
பயனடைவாய் என விரும்புகிறேன். 

                       - இப்படிக்கு
                           புத்தகம்         (பூட்டப்பட்டிருக்கும் புத்தகம்)

கருமை🤍

கூந்தல் கருக்குது🖤
தக்குசிக்கு தக்குஜின்…
வெந்நரை மறையுது🤍
தக்குசிக்கு தக்குஜின்…
மனம் தான் சிரிக்குது❤️
தக்குசிக்கு தக்குஜின்…
கண்ணாடி கண்ணடிக்குது😍
தக்குசிக்கு தக்குஜின்…

கூந்தல் கருக்குது🖤
வெந்நரை மறையுது🤍
மனம் தான் சிரிக்கிறதே.❤️. 
இளமை திரும்பி, கவலை மறந்து
இறக்கை முளைக்கிறதே🦋..…

Sunday, 16 June 2024

குரு

கட்டப்பா முதுகில் குத்தியதற்காக பாகுபலி, குறைபடவில்லை. 
ஏன்னென்றால், பாகுபலி கட்டப்பாவை குருவாகவும், உறவாகவும் நினைத்திருந்தான். 
மரணப்படுக்கையிலும் குருவாகவே
பார்த்தான் பாகுபலி. 
யாரையும் நம்பாதே குழந்தாய் என பாகுபலிக்கு வேறு யார் செயலில் பாடமெடுத்திருக்க முடியும்.

Friday, 14 June 2024

ஓலை விசிறி

ஓலை விசிறி.. 

ஒரு காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்தேன். 
வட்ட மற்றும் செவ்வக வடிவில் இருப்பேன். 
சமரசத்திற்கும் பயன்படுவேன் விசிறியாய். 
சண்டைக்கும் பயன்படுவேன் ஆயுதமாய். 
காற்றும் நானும் காதல் கொள்ளும் போது, இனிய ஓசை ஒலிக்கும். 
மின்சாரம் இல்லா வேளையில், 
மனம் தேடும் முதல் பொருள் நானே. 
பின் என்னை போன்று, நெகிழியிலும் வடிவமைத்தனர். 
இப்போது வண்ணமிகு நிறங்களுடன், சிலரின் வீட்டு சுவரில் அலங்காரப்பொருளாய். 
அங்கொன்றும், இங்கொன்றுமாய் திருவிழாக்களில். 
பலர் விசிறி எதற்கு என்று என்னை விசிறிவிட்டனர். 

Thursday, 13 June 2024

இயற்கை இனியவை🌾🌳🌴

பச்சைப்பசேல் என வளரும் நெற்கதிர்கள்...🌾
அவற்றை சுற்றிடும் வெள்ளை கொக்குகள்..🪿
வயலின் நடுவில், வயலின் இசைக்கு
நடனமாடும் மயில்கள். 🦚🦚
வரிசையாக வாழைத் மரங்கள் அவற்றை காக்க, 
சுற்றிலும் தென்னந்தோப்புகள்🌴🌴.
இளைப்பாற மத்தியில் 
வேப்ப மரம்🌳. 
அனைத்துக்கும் நீர் ஆதாரமாய்,
கம்மாய் மற்றும் வற்றாக் கிணறு. 
அதில் இருந்து சீறி வரும் நீரில் 
தாகம் தணிக்கும் ஆக்கள். 
துள்ளி விளையாடும் ஆடுகள். 
இயற்கையோடு இணைந்து இருப்பது ஓர் வரம். 

Tuesday, 11 June 2024

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்❤️

அகம் அழுவதை, அழகாய் வெளிக்காட்டிடுதே உன் அகண்ட விழிகள்.
பொய்தான் உரைக்கிறாய் என்பதை தெளிவாய் பறைசாற்றிடுதே உன் வாய்மொழிகள்.
வார்த்தைகளில் 
மெய் மறைக்கிறாய்.. 
சிந்தனையில் 
மெய் மறக்கிறாய்...
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்❤️

Monday, 10 June 2024

உயிரே(ஆன்மா)

கண்கள் காணாத அதிசயம் நீயே...
என் உயிரே.❤️.. 
எப்படி என்னுள் வந்தாய் என்பதும், 
எப்போது விடை பெருவாய் என்பதும்.. உன் முடிவே,
என் உயிரே.

Thursday, 6 June 2024

விருப்ப பாடம்

கஷ்டமான பாடமாக இருந்தால் கூட,
அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் எளிமை படுத்தி சொல்லிக்கொடுத்தால் பாடத்தைக் கற்று விடுவோம். 

அது போல தான் வாழ்க்கை பாடமும். 
கஷ்ட காலத்தில் சிலர் அதை கடக்க உடன் இருப்பர். துயரிலும் துணை இருப்பர். 

சில சமயம், 
அந்த ஆசிரியரிடம் நற்பெயர் எடுக்க ஆசை கொண்டு, அந்த பாடத்தில் தனி கவனம் செலுத்தி படிப்பவரும் உண்டு. 

நம் வாழ்க்கை, நம்மை சார்ந்தது. 
நம் மேல் நாம் தான் தனி கவனம் செலுத்த வேண்டும். 

நாயகன்🦸

இடர் தனை இடித்து,
துயர் தனை துடைத்து, 
கலகங்களைக் கடந்து,
களம் பல கண்டு, 
கரை ஏறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கையில் திரைக்கதையின் நாயகன், 
கதாநாயகன் ஆகிறான்.

Wednesday, 5 June 2024

அரசியல் பழகு✍️

நமக்கு எதுக்கு அரசியல், 
அரசியல் பத்தி தெரிஞ்சு நம்ம என்ன பண்ண போறோம் னு விலகிய காலங்கள் உண்டு.

அட, என்ன பா நம்மள வச்சி தான் முக்காவாசி அரசியலே பண்ணுறாங்க அப்படின்னு புரியும் போது..
😐

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி யுக்தியை கையாளுறாங்க இந்த யுகத்தில்.
அது எல்லாம், வெறும் யுக்தி தான்,
நிதர்சனம் இல்ல, நிஜம் இல்ல அப்படிங்கற உண்மையை உணர்ந்துட்டு வாழ்க்கைய நகர்த்தினா நல்லது.

'அரசியல்' எங்கோ மேடை போட்டு பேசுபவர் "மட்டும்" செய்யும் வேலை அல்ல.

Political Manipulation for Power never ends.🔥
Manifesting People with Reliable Election Manifesto is Real Power. 

Tuesday, 4 June 2024

விண்ணைத்தாண்டி 💞

நிறையாத சாலையில், 
நிதானமான சாரலில், 
நில்லாமல் நானும், 
நினைவுகளும்.. 

உன் கண்களில் மின்னும் ஒளியால் கவிழ்ந்து போனதே, 
என் இளமையும்,
இதயமும்.
என் காதலும் கனவும் உன்னை சேரவே, 
விண்ணைத்தாண்டி வருகிறேன்💕

Monday, 3 June 2024

நரை🙆 பிழை ✂️

அவளின் பிம்பத்தைப் பார்த்து வருந்தினாள்.. எவ்வளவு நரை என்று 

நான் : நரை அழகு தான் கண்ணே
அவள் : நரை அழகா?? 
நான்: பிறை அழகா??!!
அவள் : பிறை அழகு தான்.
பிறை அழகு மட்டும் அல்ல.. சிவனின் தலையில் இருப்பதால் தனி விசேஷம் பற்றிருக்கிறது.
சந்திர தரிசனம் புண்ணியம் என்பர்.
பிறை தெரிவதை வைத்தே பல பண்டிகையும் வரும். 
பிறைக்கு என்ன பிழை😏.. நன்றாக தான் உள்ளது😒.. ஹ்ம்ம்... 

நான் : (மனதின் குரலாய்) அழகா என்று தானே கேட்டேன். அதற்கு ஏன் அரை பக்க கட்டுரை??!!.. 
சரி பெண் தானே. அப்படி தான் பதிலளிப்பாள் என்று எண்ணிக்கொண்டேன். 

நான் : இரவில் பிறை அழகென்றால், உன் கட்டுக்கடங்கா கருநிற கூந்தலில் மலரும் நரையும் அழகு தான். 

அவள்: ஓர் பார்வை🤨
நான் : ஓர் சிரிப்பு 🙂
(மனதின் குரலாய் : எப்படியோ சமாளிச்சிடோம்.. இல்லனா பார்லர் போனும் னு பர்சை பதம் பார்த்து இருப்பா. ஏதோ பேசி இப்ப தப்பிச்சுடேன்) 

அவள் : என்ன என்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றான். 


Sunday, 2 June 2024

காதல் கலிவெண்பா❤️

மேகம் மலையோடு செய்யும் தீண்டல். 
பனி, மலர் இதழோடு கொள்ளும் ஊடல், 
நான் பிடிக்க, சிறகடிக்கும் 
அவள் கரங்கள்..
என் சிகை சீவிடும் அவள் விரல்கள்..

தீரா பேச்சுக்கள் மூலம் 
தீர்ந்திடும் கோபங்கள்..
இனிப்பின் தித்திப்பு தூக்கலாய் சுவைத்திட,  சிட்டிகை உப்பு சேர்ப்பது போல், 
காதல் வாழ்க்கை இனித்திட, சின்னஞ்சிறு கோபங்கள் கூட அன்பால் தானே. 
அவை அழகு தானே. ❤️

காதல் க(ளி)லிவெண்பா🌹

               🦋முற்றும்✍️

Saturday, 1 June 2024

கடமை❤️காதல் (SitaRamam❤️-10)

SitaRamam ❤️ - 10

கயவர்களின் கதை முடிக்க, கடமை அழைத்ததால்,
காதல் மனைவியின் கரம் நீங்கி போர் களம் புறப்பட்டேன். 
அவளைப் பிரிகையில், மலை அளவு கனம் என் மனதில்.
அவளின் கண்ணீரில் கஷ்மீர் நதியே நனைந்தது.

நெடுந்தூரம்  சீதையே ஓடி வந்து கணையாழியைக் கொடுத்து.. ஈரம் காயும் முன்னே வந்திடுங்கள் என்றாள்.

போரில் வெற்றி என்றாலும்.. 
காதலில்..... 

என் காதல் மனைவியை, மகாராணியாய் பார்க்க விழைந்தேன். 
ஆனால் அவள் மகாராணி தான் என்று அறிந்த அந்த நொடி💔... 

எனக்காக.. எங்கள் காதலுக்காக... அனைத்து சுகபோகங்களை விட்டு வந்தவள். 
தன் ராஜ்ஜியத்தை ராஜினாமா செய்தவள்❤️ . 

நான், அவள் விரும்பிய ராணுவ வீரன், ராம். 
அவள் என் மேல் கொண்ட அபிமானத்தை ஒருநாளும் அறுத்தெறிய மாட்டேன். 

உயிர் நாட்டுக்காக.. 
உள்ளம் அவளுக்காக.. 

எப்பிறவியிலும் சீதாவின் ராமனாக,
இந்திய ராணுவ வீரனாக. 
                                               - ராம்✍️

காதல் தலைவியுடன்💕(SitaRamam ❤️-9)

SitaRamam❤️ - 9

ஓர் நாள் பனிப்பொழிவில், பளிங்கு சிலையாய், காற்றை கீறிக்கொண்டு எனை வந்தடைந்தாள்.
உன் உலகின், முதல் உறவானாள்💞.
எனக்காக மாளிகை மறந்து வந்தவளை மகாராணியாய் பார்க்க விழைந்தேன். 

மனதோடு உற்சாகம் மங்கை அவளை காண்கையிலே. 
விழியோடு வானவில், 
அவள் என் விழியில் படுகையிலே❤️

கடல் நீர் உப்பை போல் நாம் இருந்திட வேண்டாம். 
சூரிய கதிர்கள் நம்மை பிரித்திடக்கூடும். 
இல்லை பச்சையம் போலவும் இருக்க வேண்டாம். 
காலம் நம்மை பிரித்திட கூடும். 
என் விழியாக நீ இருக்க வேண்டும் வேண்டும். 
உன்னுடன் சேர்ந்து நான் உலகம் பார்க்க வேண்டும். 


வாழ்நாள் வரம்❤️👸(SitaRamam💖 8)

SitaRamam ❤️ - 8

என் காதல் தலைவிக்கு தைரியம் சொல்ல, மீண்டும் படை எடுத்தேன் மாளிகைக்கு🏃.
ஒரு கண்ணில் ஏக்கமும், மறு கண்ணில் மிரட்சியும் கண்டேன்🥺.
என்னுடன் அழைத்து செல்ல வந்தேன், 
ஆனால் அன்பிற்கினியாள் அவகாசம் கேட்டதால், அரைமனதுடன் திரும்பினேன்😔.

ஆனால் என்ன ஆச்சரியம்☺️!! , அதிசயம்🤩!! அரைநொடி பொழுதில் என்னுடன் அவள்... தொடரியில்🚈..
மகிழ்ச்சியில் மனம்.💖. 
மனையாள் உடன் பயணிக்கையில் மனம் இரட்டிப்பாய் துடித்தது❤️.

அவளுடன் நான்.... 💕
என்னோடு அவள்... 💞
விளைநிலத்தில் விளையாடி,
டென்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்து, 
மிதிவண்டியில் மிதந்து மகிழ்ந்தோம். 
காரப்பதார்த்தம் உட்கொள்ளாதவள், 
எனக்காக அதை பழகிக்கொண்டாள். 
திருக்கோவில் சென்று தீர்கசுமங்கலி வரம் வாங்கி வந்தாள், என் வாழ்நாள் வரமானவள். 

மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி சென்றவள், வராததால்.. 
மீளாத் துயரில் தனியே தவித்தேன்❤️‍🩹. 
கஷ்மீர் குளிரில் என் கண்ணீர் கூட உரைந்தது.. 🥹


தங்கத் தாரகை💕

அடி சிரித்த செவ்விதழ் சிலையே🧚 சினம் கொள்ளும் கனி அமுதே.😉
உன் கரம் பற்றி, 
காதல் கரையேற காத்திருக்கும் கள்வன் நானடி.💕

புன்னகை உன் புன்சிரிப்பு புன்னகை தரும்,  புத்துணர்வை இந்த பூக்களும் தருமோடி!!!? 🌹💖
தாரகை தங்கத் தாரகை, 
என் மன மாளிகை உனக்கே உறைவிடமடி💞