Friday, 28 October 2016

தீபாவளி

பொங்கும் இன்பம் என்றும் தங்கிட
காலையில் வர்ணஜால ஆடையில்,
புன்னகையோடு பூத்திருக்கும் மலர்களைக் கொண்டு
இறைவனை வணங்கி,..
இனிப்புகள் உண்டு..
இரவில் வானில் கோலமிடும் வாண்டுகள் என இந்நாளில்
மனம் மத்தாப்பு போன்று மகிழ்ந்திடும்!!
அனைவருக்கும் தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, 27 October 2016

எதிர்பார்ப்பு

நீ அன்பாய் அழைக்கிறாய் என்றெண்ணி அருகில் வர, அழ வைக்கிறாய்.
வேண்டாமென்று விலகிச் செல்கையில்
மீண்டும் வரவழைக்கிராய்..
அன்பை எதிர்நோக்கி வரச் செய்து,
அம்பால் நோகடிக்கிறாய் அனுதினமும்

Sunday, 23 October 2016

பெண் பார்க்கும் படலம்

பல்லாண்டு காத்திருந்து பகல்நிலவைப்  பார்த்தேன்!
சோலை கொடிமுல்லை போல் நீலவண்ண சேலையில்!!
வாய் பேசிட, வாய்ப்பு கிடைத்தும் வார்த்தைகள் வளரவில்லை!!
இதயம் பந்தயத்தில் ஓடுவது போல் துடித்தது!
பேறுகாலமே என்னுள் நடந்தது ,
'பிடித்திருக்கிறதா' என்ற வார்த்தை
வெளியே வராமல்!!!
அனைத்தையும் அறிந்தவளாய்
நாணப் புன்னகையால் என்னை பிரசவித்தாள்!!

Tuesday, 18 October 2016

காத்திருப்பு

காலம் கடந்த காத்திருப்பும் கசக்கத்தான் செய்யும்
பார்த்திருக்கும் கண்கள் கலங்கத்தான் செய்யும்
எதிர் பார்த்திருக்கும் இதயம் வெம்பி
அழத்தான் செய்யும்
இவை ஏதும் இல்லாக் காதல் புவியில் உண்டோ?

நன்னாள்

பூக்கள் புத்துயிர் பெற்று புது பிறவி எடுத்திட...
புதுமை எண்ணங்கள் மனதில் புத்துணர்ச்சி அளித்திட..
புதிய நன்னாளில் அனைவரின்  மனதிலும் புன்சிரிப்பை பெருகச் செய்திடுவோம்.

Saturday, 15 October 2016

காயம்

நீர் நிறைந்த குட்டைக் கலங்குவதால் , அழகிய ஓவியம்  பிறக்கிறது - ஆனால்
நீ நிறைந்திருக்கும் மனம் கலங்கியதால், ஆழ்ந்த காயம் ஏற்பட்டது.

Wednesday, 12 October 2016

நானும் நிலவும்

உன் கண்களால் தூவிய 'பிரிய ' மழை
என் மனதை 'அம்பால் 'அலங்கரிக்க ..
நான் மண்ணில் இருந்து ஏவிய  கூழாங்கற்கள் ,
விண்ணில் நட்சதிரங்களாய்  ஜொளிஜொளிக்க ..
மண்ணில் நானும் விண்ணில்  நிலவும் - தனிமையில்..
அன்பை பகிர்ந்து கொண்டோம்





Monday, 10 October 2016

இயற்கைக்கு மாறாய்

புல்லை மிதித்து புதிய வழி உருவாக்கும் மனிதா
உன்னை மிதித்து பிறர் முன்னேறி சென்றால்,
வலிக்கும் வலி  தானே அந்த புல்லுக்கும் !!
இயற்கை   வஞ்சமில்லாமல் வாரி வழங்கிய அழகை அழித்து ,
செயற்கையில் குளிர் காயும் மானிடா !!
இயற்கைக்கு மாற்றாய் நீ எதை வலுப்பெறச்  செய்தாலும் 
அது இயற்கைக்கு மாறாய் அமையுமே அன்றி , மாற்றாய் அல்ல !!
சொர்க்கம் என்றெண்ணி சுவைப்பது எல்லாம் , ஒரு நாள்
உன்னை அமில உலகில் ஆழ்த்திடும் .


மௌனதால் வருடிய மலர்

நீண்ட நெடிய நீல வான பாதையில் ,
நிழல் தரும் மரங்கள் புடை சூழ நகர்ந்திருந்தேன் ,
காற்று மெல்ல மரங்களைத் தழுவி சென்றிட ,
பூக்களால் நான் நிறைந்தேன் .
எத்தனையோ மணம் கொண்ட மலர்கள் என்னை நெருங்கினாலும் ,
என் மனதை மௌனதால் வருடிய மலர் நீயே என் அன்பே!! 

Friday, 7 October 2016

மறவாதே

வந்த பாதை  மறவாதே , வரவழைத்தவரை மறக்காதே
உன்னை போல் இருப்பவரை வரவழைப்பதை நிறுத்தாதே
வானில் இருந்து மண் சேர்ந்த மழை , மீண்டும் வான் அடைவது போல் , செய்ந்நன்றி மறவாது இரு.

காவிரி எழுதும் கவிதை

இயற்கையின் எழிலாய் எழுந்தருளிய என்னை செயற்கையாய் சிறை செய்து சேரும் இடம் தெரியாது செய்த சீமான்களே !!
அணை போட்டு அடக்கிட யான் ஒன்றும் உம் கைப்பாவை அல்லவே
உன் உறவுகளுக்கு என்னை இல்லை என்று சொல்ல நீ யார் !
உலகமே உறவாக நான் எண்ணினால் , உன் நாள் நிமிடங்களில் முடிந்துவிடும் ..