உன் மேல் அளவு கடந்த கோவம் வந்தாலும், மின்னல் போல் மனதில் தோன்றி மறைகிறது.
நீ நேரம்கடத்த மட்டுமே சொல்லிச் சென்ற 🚶அன்பை,
நான் சொல்லாமல் நித்தமும் நினைக்கிறேன்.
ஆயிரம் கேள்விகள் கேட்க இருந்தாலும்,
அது சிறிதேனும் உனை சங்கடம் செய்துவிடும் என்பதால் புன்னகைத்து விலகினேன்.