Monday, 25 September 2023

ஓநாய்

வஞ்சம் கொண்ட நெஞ்சமுடைய ஓநாய் நண்பா.. 
வஞ்சகம் செய்து பிறர் வாழ்வை வீழ்த்த, சிறிது சிறிதாய் நெஞ்சில் நஞ்சை விதைத்த ஓநாய் நண்பா.. 

நீ மனமுடைய காரணமாக இல்லாமல் தள்ளி தள்ளி சென்ற தத்தையின் மேல் அப்படி என்ன வஞ்சம்.. 

 புரிவதில் இருக்கிறது உறவு புரியவில்லை என்றால் பிரிவதில் ஏது தவறு..

நன்றி 
மனிதர்கள் வேடத்தில் ஓநாய்கள் இருப்பதை உணர்த்தியதற்கு.. 

வார்த்தைகள்

வார்த்தைகள் எல்லாம் வெற்று வார்த்தைகளே, 
அவற்றிற்கு உண்மை என உருவம் தர வேண்டாம். 

அவற்றுக்கு நம்பிக்கை என்று நியாயம் சொல்ல வேண்டாம். 

வார்த்தைகளுக்கு உணர்ச்சி சாயம் இட்டு அவற்றை உருவகம் செய்ய வேண்டாம். 

வார்த்தைகள் உருவம் பெறுகின்ற அவை உண்மையாகும் பொழுது. 

வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன அவை நடைமுறைக்கு வரும் பொழுது.

வார்த்தைகள் எல்லாம் வெற்றி வார்த்தைகளை அவை நம்மை உத்வேகப்படுத்தும் போது. 

Friday, 22 September 2023

LOVE❤️💞💖💕💗♥️💓

LOVE can be find again if it's LOST
LOVE is Immortal 
LOVE is Eternal 
LOVE is the ENERGY TO THE SOUL.
As per LAW OF LOVE 
LOVE neither be created nor destroyed.
LOVE is a Good Feel triggered by the hormones for the lively soul. 
LOVE cannot be compared. 
LOVE is a WoW feeling. 
DON'T give to Wrong Person. 

Nowadays Love is in the form of Calculated Love
Corrupted Love. 
Love is not for Consumerism. 

                 LOVE IS GOD

 


Face the world - ALONE

You are ready to face the world alone, when.... 
you are able to enjoy the food alone in the crowded restaurant without using mobile or gadgets.
When you are engaged with the movie alone in theatres.
Going for a walk or jog or hike All Alone.


Thursday, 21 September 2023

Caution on Memories

Knife may slash you in a minute
But Memories with you loved one may crush you every second if they aren't with you. 
Please create attachment only.. Only when both are committed to the promise of words, 
Else one may go busy in their life and the other might hang in the thoughts alone. 
Be cautious about Memories.. 

Wednesday, 20 September 2023

இடைவெளி இதயவலி

ஓர் பொழுதில் தோழி காதலி ஆகிறாள்.,
ஓர் நொடியில் காதலி தோழியாகி, யாரோ போல் ஆகிறாள். 
இந்த நொடி பொழுதில் மாறிய யாவும், உன் எண்ணங்களே.. 
ஆனால் இடைவெளி இதயவலியை தந்தது எனக்கு மட்டுமே, 
நீ எதிர்நோக்கியது போல்.
நன்றி 

Sunday, 17 September 2023

தவறியும் தவறிழைக்காதே

மனம் விரும்பும் உறவுடன் இருக்கப்படுவது - வரம்
மன இறக்கத்துடன், இரக்கமில்லா உறவுடன் இருக்கப்படுவது - விதி

சொத்திற்காக மட்டுமே வேடமிட்டு
திருமண சொந்தத்தில் சிலர்..
விரும்புகிறேன் என்று வெற்று வார்த்தையைக் கூறி விலகி விடும் சிலர்.. 
பெண்ணின் மனதும் அவளின் உணர்வும் கரை(லை) க்க இயலுவாக இருக்கலாம்.
ஆனால் அவளின் கண்ணீர், காலம் கடந்தாலும் கர்ம வினையாய் பின் வரும் என்பதை மறவாதே!!! 

நெஞ்சம் மறப்பதில்லை

காகிதம் எல்லாம் அன்பை பேசும் காதல் வரிகள் ...
காலம் எல்லாம் நான் சுவைத்த அன்பைத்தான் பரிமாறுகிறேன் என்று இல்லை... 
என் மனம் எதிர்நோக்கும் காதலையும் அன்பையும் தான். நெஞ்சம் சந்தித்த வலிகளை தமிழ் வரிகளால் மருந்திடுகின்றேன்

Friday, 15 September 2023

understand the society

Don't be afraid of loosing anybody in life, you are born single. 

Prioritize your mental health, nobody will come and fix it. 

If you don't want to hurt anyone and being hurted, just be away. 

Find the real intention of the person who tries to get close to you. It may be for your time (timepass) or 
to divert you or 
to destruct you or 
to get something from you

Be Strong and Resilient, When your kindness, empathy, love is taken advantage by someone.


Sunday, 10 September 2023

நகரும் மேகமே

ஓ நகரும் மேகமே...
நகரும் மேகமே... 
உன் நிழல் போலே இருப்பேன், 
நெருங்காது, விலகாது காத்திருப்பேன்.. 
என்றாய்... 

இன்று உன் நினைவிலும் சரி , நிஜத்திலும் சரி நான் இல்லை.. 
என் நெஞ்சம் நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறது.. 
ஆனால் கண்ணின் கருவிளி மட்டும் , ஆற்றில் அள்ளாடும் பரிசலாய்... 


யாரையும் நம்பாதே

என் பிரிவு உன்னை கலங்கச் செய்திடுமோ என்று எண்ணியே முதலில் விலகி இருந்தேன்..

வாழ் நாள் நட்பென்ற பெயரில், உறவாய் வந்தாய். நம்பினேன்..
ஒரு நாளும் உனை காயப்படுத்த 
விரும்பியதில்லை. 

ஆனால் நீ சுயநலமாய் இருந்து, 
என்னுள் சிரித்துக் கொண்டு இருந்த குழந்தையை கலங்கச் செய்தாய். 
நகர்கின்ற மேகமாய் ஆனாய். 
நான் மட்டும் இன்னும் நினைவுகளுடன் நிம்மதியில்லாது... 

நன்றி.. உன்னை போன்ற உண்மை இல்லாத மக்களும் உள்ளார்கள் என்று உணர்த்தியதற்கு. 

Sunday, 3 September 2023

சந்தர்ப்பவாத சகாக்கள்

நட்பிற்கு இலக்கணமாய் இருப்பேன் சர்வகாலமும் என்று பொய்யுறைக்கும் சில சந்தர்ப்பவாத சகாக்கள்..

சிறு வட்டத்திற்குள் இருக்கிறாய்,
வெளியே வா.. என்று கூறும் 
ஓநாய்கள்.. 

அன்பாய் இரு.. என்று அறைக்கூவலிடும்.. அன்பர்கள்..
வேடிக்கை.. 

பேச யாரும் இல்லாத போது மட்டுமே பேசும், பேருள்ளம் கொண்டவர்கள்.

நாகரிகம் அறியா.. படித்த பாவலர் போலும் 
பண்பட்டவர் போலும் பாவ்லா செய்வார்கள்..
அந்த சந்தர்ப்பவாத சகாக்கள்.. 

அஞ்சறை

வெகுளியால் கடுகு போல் பொரிந்தாள் என் கண்மணி. 

அவள் அகம் சீராக இல்லை என்பதை உணர்ந்தேன். 

மிளகு கண்களால் என்னை மிரட்டினாள். 

நேற்று வரை நாங்கள் கடுகு உளுந்து. 
இன்று என்ன கடுப்பு என்று தெரியவில்லை. 

என்னவென்று விளங்காமல் விரல்களை பிசைந்திருந்தேன். விரலில் தட்டுப்பட்ட மோதிரம் விவரத்தைச் சொன்னது. 

அவளிடம் நான் மண்டியிட்டு இல்லை... 
மாட்டிக்கொண்ட இல்லை இல்லை எங்கள் மணநாள் என்று.. 

மரியாதையாய் மன்னிப்பு கேட்டு மஞ்சள் குங்குமம் இட்டு என் மணவாட்டியின் மனம் கவர்ந்தேன்.. 

மீண்டும் கடுகு உளுந்தாய் அஞ்சறையில்... 
என் அஞ்சுகத்தின் அகத்தில்❤️

சிரிக்க மறந்த சிலையாய்

அறிமுகமானவர்கள் அருகில் கடந்து சென்றாலும் யார் என்று தெரியாத முகம் போல கடக்கச் செய்த காலத்தை என்னவென்று சொல்வது.. 

போலியான சில முகங்களைக் கண்டபின்.. 
யாரையும் நம்ப மறுக்கிறது மனம் நெருங்க தயங்குகிறது நெஞ்சம்.. 

வலிமையில்லா வெற்று வாக்குறுதிகள்.. 
வன்மம் கொண்ட முகங்கள் இவைகள் என் இதயத்தை கூறு போட்ட பின்... 

நான் சிரிக்க மறந்த சிலையாய் நிற்கிறேன்... 

புரிதல் இல்லாமல்

நீ என்னை காதலிப்பதாய் உணரச் செய்த காலத்தில், 
என்னுள் உருவான காதல் வரிகள் எல்லாம் கவிதைகளாய் புத்தகங்களில்.... 

இப்போது உணர்கிறேன், 
என் உள்ளம் என்னை ஏமாற்றி விட்டது என்று.... 
புரிதல் இல்லாமல்

Saturday, 2 September 2023

World of Love

If you are not serious in relationship or friendship, please don't express it.
May be for you it's just time pass or passing cloud, 
But for the other, 
it's an Emotion, 
It's a Memory,
It's a Love, 
It's a Trust,
It's You,..... THEIR WORLD

What my Heart says for you

There is nothing like Bleeding Heart,
It's heart with lots of load of memories.. 
Which cannot be expressed and suppressed...
It's simple to say I LOVE YOU 
IT'S REALLY HARD TO LIVE FOR IT.