மனது ஒன்றை மறக்கத் துடிக்க
நினைவு, அதை நினைவில் கொள்ளாமல்.. என்னை கொல்ல..
உணர்வுகள்.. உன் உறவே வேண்டாம் என உரக்க உரைத்து.. உறைந்திட..,
என் உலகமே, இனி நீ தான் என்று நினைந்து வாழ்ந்த எனை, குருதி கலந்த கண்ணீரில் நனைக்க, உனக்கு மனம் வந்ததேனோ!!
Tuesday, 29 January 2019
கல் மனது
Sunday, 20 January 2019
மனதின் உளறல்
ஏதும் இல்லா வெற்று உடலில், வாழும் காற்று மட்டுமே அதன் கானம், அதுவே நிரந்தரம்.
எல்லாம் இருந்தும், இல்லா உலகினில், அன்பென்று ஒன்று இல்லை.. அதுவே நிதர்சனம்.
விழிகளை மூடினால், முன் வந்து வழிந்திடுதே வலியின் நீர்.
செவிகளில் சப்தம் நின்றே போனாலும்,
மனதின் சப்தம் கேட்டிடுதே.
கால் போன போகில் போக காலம் வரவில்லை இன்னும்.
மனம் அதன் கீறல்கள்களை பதிவு செய்கிறது.. கைகளின் கிறுக்கள் வாயிலாக .
Saturday, 19 January 2019
மனைவி
என் மனம் சேர்ந்து, மணை வந்த மங்கை.. என் மனைவி.
மாய குரலால் மயக்கிய மனிதி.
சுளீர் சூரியனையும் சிலிர்க்க வைக்கும், என் மிருதுவான மழை சாரல் அவள்.
வெயிலிலும், வசந்த காற்றைச் சுவாசிக்க வைக்கும் வானதேவதை அவள்.
சேயாய் சிரித்திடுவாள், நான் சேயானால்.. மாய மான் போல் மறைந்திடுவாள்.
சேட்டைச் செய்வதில் சிம்டாகாரி, என் இமைகளைச் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அழகு சிங்காரி...
இறைவியை நேரில் பார்த்ததில்லை..
ஆனால் எனை பண்பட்டவனாக்கவும் , பேணிக்காப்பதிலும் அவளுக்கு நிகர் யாருமில்லை.
என் கோபத்தால் கலங்கிடுவாள்.
அவள் கோபத்தால் என்னை நொறிக்கிடுவாள்.
தவறொன்று செய்தால் அறிந்திடுவாள்.
அன்பால் என்னை ஆட்கொள்வாள்.
மலர் போல மணந்திடுவாள்,
மகரந்தச்சேர்க்கையில் எனை வீழ்த்திடுவாள்.
Friday, 18 January 2019
நான்
ஆழ் கடலில் இருக்கும் சிப்பி போலவே நானும் என்று எண்ணுகிறேன் ..
யாரின் பார்வையும் படாத தூரத்தில் இருக்கவே விருப்பம்.
வெளி தோற்றத்தில் கரடு முரடாக இருப்பினும்.. முத்தை சுமக்கும் சிப்பி போல்..
முகத்தில் சிரிப்பைப் பகிர்ந்திருந்தாலும், உள்ளிருக்கும் வலி.. என்னை உலகத்தில் நிலை நாட்ட வைக்கும், அந்த முத்தைப் போல் முத்தாய்ப்பாக
பசு
ம்மா என்று என் உயிர் என்னை அழைக்கையிலே
நான்.. ஆ என்பதில் பெருமை கொள்கிறேன்..
ஆ என்பது.. குறிலாகி.. என் குழந்தையின் குரலில் அம்மா என்றானதும் ..
ஆறறிவு ஜீவராசிகளும், என் குழந்தையின் கூற்றை ஏற்க, நானும், என் கன்றும் குதுகலம் ஆனோம்
பன்
என்னவள், மெதுவாய் மைதாவை அள்ளி வீச.. அது பரவலாய் பறந்து வானில் படர்ந்தது மேகமாய் விரிந்தனவோ.. என்னவோ...
நீர் ஊற்றி பிணைகயிலே.. என் நெஞ்சத்தை நணைத்துவிட்டாள்..
அச்சை தேடும் சாக்கில், ஓரே ஒரு பார்வையில்.. என் மனதை எடுத்து பதித்து விட்டாள்
அடுப்பில் அவை இருக்கையிலே.. இருப்பு கொள்ளாமல் தவித்து விட்டேன்..
இறுதியில் என்தன் மனதை அழகாய் செய்து, என் உள்ளங்கையில் கொடுத்து விட்டாள்..
அவளின் மனம் போல்... மணமாய்.
மர்ம புன்னகையுடன் வானை நோக்கினோம்..
எங்கள் மனது ஒளிர்ந்தது... நிலவாய்..
Tuesday, 8 January 2019
வீழ்ந்தாலும் வாழ்வேன்
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சாய்ந்தாட துணையும் இல்லை
இன்னார்க்கு என்று எந்த இன்னலும் இழைத்ததில்லை
எனினும் ஏன், காதல் என்ற கல்லால், காலம் என்னை கொன்றது என்று தெரியவில்லை.
இருந்தாலும் பரவாயில்லை,
வாழ்க்கை நான் வாழ்வதற்கு தான்.
Sunday, 6 January 2019
மணம்
கடந்து போகும் மேகம், மேளம் கொட்ட..
குனிந்து கலங்கும் கண்மணியாளின் விழி நீர் போல,
வானின் நீர் துளி,..
மண்ணை மணந்தது