Friday, 19 June 2026

அழகான தருணம்

பல்லாண்டு பிறகு பிரியத்திற்குரிய பாவை, 
என் பார்வையில் பிடிபட்டாள்.
புன்னகையோடு பேசுவாள் என்று எண்ணி நெருங்குகையில்..
எள்ளும் கொள்ளும் அவள் பார்வையில். 
பதறி பின்வாங்கினேன்.. 
சட்டென விழிநிலையில் மாற்றம்.
அருவியான அவளின் கண்கள்.
மீண்டும் பதறி போனேன். 
ஓரிரு நிமிடங்களில் அவளே வானிலை போல் மாறி, அமைதி கொண்டு, பின் புன்னகைத்தாள். மகிழ்ந்து போனேன். 
அப்பாடா... 
ஓரிரு வினாடிகளில் அவ்வளவு அழகான தருணங்கள்.. சில தடுமாற்றங்கள்

No comments:

Post a Comment