Friday, 2 September 2016

பெண்மை

மலராய்  மலரும் போது,  நங்கை அவள் அழகு
தென்றலாய் தழுவும் போது ,
    பேதை(1 வயது முதல் 8 வயது ) அவள் இனிமை.
சூறாவளியாய் சுழலும் போது,
     மடந்தை(15 முதல் 18 வயது)  அவள் அருமை
அழகிய அறவாழ்விற்கு ஆதாரம்,
    அரிவையின்(19 முதல் 24 வயது) அறிவே
அகம் அழகுபெற ஆணிவேர் ,
    தெரிவையின்( 25  முதல் 29 வயது) தெளிவே
அற்புத செயலாற்றி, அனுதினமும் அனுபவம் தருபவள்
    பேரிளம் பெண்ணே (30 வயதுக்கு மேல்)

மெழுகின் மேன்மை,  நங்கை இவளிடத்தில் நிறைத்தே இருக்கும் .

பெண்மை

நோட்:
------------
பெண்களின் ஏழு பருவங்கள்

* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்





7 comments:


  1. பருவம் விளைந்து படரும் உணர்வால்
    உருவம் கொடுக்கும் உயிர்த்து !

    பெண்ணின் பருவத்தின் பீடுகள் அறிந்திட்டால்
    மண்ணும் மணக்கும் மலர்ந்து !

    ReplyDelete
  2. Good work.keep it up.
    Photoswonder.blogspot. com

    ReplyDelete
  3. Good work.keep it up.
    Photoswonder.blogspot. com

    ReplyDelete