பருவம் துளிர்க்கும் காலத்தில் பார்ப்பதெல்லாம் பட்டாம்பூச்சியே
வானில் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை வதைக்கவேண்டாம்..
சிறகின் வண்ணம் நோக்குகிறேன் என்று நோகடிக்கவேண்டாம் ..
கையில் பற்றி கசக்கவேண்டாம் ..காயங்கள் வேண்டாம் ..
வண்ணத்துப்பூச்சியின் காயங்கள் வடுவாவதில்லை ..ஆனால்
பெண்ணின் சிரத்தில் அவை சிறைவைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment