Friday, 28 February 2025

முகத்தை மறப்பேனா முழுநிலவே ❤️

முகத்தை மறைத்தாலும் முழுநிலவே, 
என் அகம் உனை மறக்குமா.. 
நீ ஒரு முறை, முறைத்தாலும் என் முகம்
அணுவாய் சுருங்கிடுமே
நீ இதழ் ஓரம் சிரித்தாலும், என் அகம் சிலிர்த்திடுமே..
உன் கண் சிவந்தால், என் சிந்தனை ஸ்தம்பிக்குமே
உன் கன்னம் சிவந்தால், நாணத்தில் 
நடனம் புரிவேனே


வாழ்க்கை வாத்தியாரே - ❤️

நன்றி வாழ்கை வாத்தியாரே, 
வாழ்க்கை பாடம் கற்று தந்தமைக்கு. 
எவரையும் நம்பாதே, 
எவர் சொல்லையும் உற்று நோக்கு, எவரிடமும் எதையும் பகிராதே, 
அன்பை பிறரிடம் தேடாதே, 
உனக்கானவர் நீ மட்டுமே..
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே, 
பிறரிடம் வாழ்வின் உண்மையை உளறி கொட்டாதே. 

விழியால் கொல்லாதே

ஒருவருடன் பேசாமலே,
நம்மிடம் புன்னகை தோன்றுமா🤔🤔
தோன்றும்.. 
விழிகள் மட்டுமே 
பேசி, மனதை "கொல்லும்" பொழுது..
இருவரிடம் இருக்கும் பட்டாம்பூச்சிகள் 
காதல் மொழி பேசி கொள்ளும் பொழுது

Thursday, 27 February 2025

காதலா ஈர்ப்பா❤️🤔

நீ என்னை பார்த்து செல்கையில்..
காற்றாடி போல, மனம் பறக்குதே..
விழிகள் பார்த்து கொள்கையில், 
இதழின் ஓரத்தில், புன்னகை வந்து செல்லுதே..
ஆயிரம் பேரிலும், உன் முகம் பார்க்கவே கண் தேடுதே..
ஆனால்.. இது எல்லாம் காதலின் முதல் படியா அல்லது 
ஈர்ப்பின் மூன்றாம் விதியா

நடிக்காத புள்ள

முறைச்சு தொலைச்சு தான் நடிக்காத..
நீ மறைச்சு நடத்திய நாடகம் போதும்.. 
காலம் கடத்தி நீ சொல்லாத.. 
நீ சொல்லாத காதல் எல்லாம் 
உன் கண்ணுல பார்த்திட்டேன்...
போ புள்ள.. 
நீ போய்ட புள்ள.. 
என் நெஞ்சுகுள்ள..

நம்பாதே பேதை மனமே

விதி என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள்,
சற்று உற்று நோக்கினால், 
அது பக்கா சதியால் நிகழ்ந்தவை என்று தெரியவரும். 
மதியால் வெல்ல முடியாதவற்றை, 
உடனிருந்து உதவுவது போல், 
பின் நின்று குத்துவோர் நிறைந்த உலகிது.
நம்பாதே பேதை மனமே 

காதல் series

காதல் வந்தால்,  ❤️அவ்வப்போது 
கன்னம் சிவக்கும்..
காதல் வந்து போனால்💔, 
சிகையில் நரை வந்து நகைக்கும், 
நினைவுகள் நம்மை சிறைப்பிடிக்கும். 
காதல் வராமலே போனால், 
மனம் நம் இஷ்டப்படி சிறகடிக்கும் 🥰

Tuesday, 25 February 2025

இப்படியும் இருப்பாங்களா

பணம் கேட்கும் போதும்,
அதை வாங்கும்போதும் மனதிற்கு தோன்றாத தீட்டு
எல்லாம், 
திருமண பத்திரிக்கை வைக்கும் போது மனதில் தோன்றி விடும் சிலருக்கு..
போலி பாச வேசமிடும் நபர்களுக்கு.. 

மனித களைகள் 😈

கதிருடன் வளரும் களையை கூட கண்டுவிடலாம்..
நட்பு /தம்பி/தங்கை என்று போலி முகமூடி இட்ட மனித களையை கண்டு களை எடுப்பது சற்று சிரமம்..
அவைகள் பாலில் இட்ட ஒரு துளி விஷம் போல.. 

Saturday, 22 February 2025

காதல் Crush ❤️

Oh my காதல் crush நீதானே🥰,
உனை கண்மூடித்தனமாக காதலிக்கின்றேனே😍.. 
கண்பார்த்தால் 
கன்னங்கள் Blush ஆகுதே☺️,
Flesh எல்லாம் Freeze ஆகுதே🥶... 
கரம் பட்டால், 
current பாய்ந்தது போல்
Feel ஆகுதே🤗..
X இல் நம் பெயர் தான் #trend ஆகுதே 

Friday, 21 February 2025

முறைக்காதே நிலவே

முழு நிலவே முறைத்து தொலைக்காதே நம்மிடையே முரண் இருந்தால்,
முகத்தை சுளிக்காதே..
மனம் திறந்து பேசிட வா
முரண்டு பிடிக்காதே.. 
மனஸ்தாபம் இல்லா, அகம் உண்டோ கூறு, 
மகிழ்வான வாழ்க்கை, அதற்கு பின்னாலும் உண்டு, 
வாழ்ந்திட வா❤️❤️

வெட்கம்

பல ஆண்டுகள் விடுப்பில் இருந்த வெட்கம்,
நீ எனை பார்த்ததும், 
விடுமுறை முடிந்து 
பள்ளிக்கு முந்தும் பிள்ளை போல, 
முந்தி வந்து என் கன்னங்களில் இடம் பிடித்து அமர்ந்தது.. 

மடை திறந்து

நீ பக்கம் வராத வரை பேசாமல் இருக்கும் மனம், 
நீ எட்டி பார்க்கும் போதே பற்றி எரிகிறதே காட்டுத் தீயாய்
தீயை அணைத்திட, காதல் மடையை திறப்பாயோ

காதலின் பரிமாணங்கள்

என்னளவு உன்னை நேசித்தவர் எவரும் இல்லை.. 
உன்னளவு எனை சோதித்தவரும் இல்லை.. 
என்னைப்போல் உனக்காக சிந்தித்தவரும் இல்லை.. 
உன்னைப்போல் என்னை சிந்திக்க வைத்தவரும் இல்லை.. 
என்னைப்போல் உனக்காக அழுதவரும் இல்லை.. 
உன்னைப்போல் எவரும் என்னை அழ வைக்கவில்லை.. 

கற்பனை காதல்

முன் அறிவிப்பின்றி உன் மேல் வந்த காதலால், 
உன் அனுமதி இன்றி உன்னோடு வாழ்கிறேன் கற்பனையில்..
இந்தக் கற்பனையினால் கவிதை வந்ததா.. இல்லை காதலால் கவிதை வந்ததா.. 
தெரியவில்லை

Happy Baby

Dislikes இல்லாமல் வீடியோ போட்டவங்களும் இல்ல.. 
Hurt ஆகாம, ஆக்காம Life வாழ்ந்தவங்களும் இல்ல..
Life should be simple with present happiness 

Thursday, 20 February 2025

புரியாத புதிர்

மலையளவு கோபம்,
வானளவு வெறுப்பு, 
எல்லாம் உன் மேல இருக்கு, 
ஆனா பழைய பாசமும் (அ) கொஞ்சம் நேசமும் இருக்கு.. உன் மேல..
ஒரே ஆள் மேல, இரண்டு உணர்வும் 
எப்படி இருக்கும்.. 
தெரியல 

உன்னாலே உன்னாலே ❤️

என் கற்பனையும் சரி,
என் கவிதைகளும் சரி, 
என் காதலும் சரி, 
என் ஒவ்வொரு கன நேர சிந்தனையும் சரி, 
நினைவும் சரி, 
உன்னாலே, உனக்காகவே..
உனைச்சுற்றியே, உனைப்பற்றியே❤️

வா காதல் வாத்தியாரே 🥰😍 #vaavaathiyaar

வா காதல் வாத்தியாரே❤️.. 
காதல் கணிதம் சொல்லி தரவா🌹..
கையை பிடித்து, மன நிறைவா🤗..
என் புன்னகையைக் கூட்டி☺️➕
உன் கோபத்தைக் கழித்து😡➖, 
நம் காதலைப் பெருக்கி❤️✖️, 
நம் மகிழ்வை பகிர்ந்து🥰➗.. 
வாழ்ந்து பார்ப்போம்😍
வா வாத்தியாரே.. ❤️

காதல் 420

காதல் என்ன T20யா
அதில் நீ என்ன 420யா..
தீரா காதல் என்பாய், 
டீ அருந்தும் நேரத்திலே.. 
திரும்பி பார்க்கும் நொடி பொழுதில்.. 
காதல் இல்லை என்பாய்..
பொய்யாய் காதல் மொழி உரைபாய், 
பொய்யாமொழி புலவர் போல் நடிப்பாய்
நடிப்பில் நட்சத்திரம் தான் நீ.. 
ஆனால் நம்பிக்கையில்..
 கேலி(டி)ச்சித்திரம் . 🚩🚩

காதல் ரோஜா 🌹

இணையே பிரியாதே.. 
இணையைப் பிரியாதே..
வாழ்வில், முள்ளை மட்டும் பார்க்கின்றாய், 
ரோஜா மலரின் 🌹 மணத்தை முகர மறுக்கின்றாய். 
காதல் கொண்ட காலத்தை மறக்கின்றாய்
உயிர் கொள்ளுமா, காதல் ரோஜா 🌹🌹

Thursday, 13 February 2025

என்றும் காதலுடன் ❤️

காந்த கண்களால் என்னை கவிஞனாக்கி, 
வார்த்தைகளில் என்னை கஞ்சனாக்கி, 
செல்லம் கொஞ்சி, எனை சிலையென்றாக்கி, 
காதலால் சிறை செய்து, ஆயுள் கைதியாக்கி,
ஓர் நொடியில், என் உயிரை உனதாக்கிய
உலகநாயகியே, உயிர் தோழியே
என்றும் காதலுடன்.. உன் நாயகன் 

நெஞ்சம் மறப்பதில்லை 💘 #kadhalkavithaigal #lovememories

மற்றொரு முறை அழ மனமில்லை..
மனதால் காதலை மறக்க முடியவில்லை.. 
காதல் என்று நம்பி, நெஞ்சம் நிறைந்து நகைத்த நாட்களின் நினைவுகள் அழியவில்லை.. 
வெம்பி, அழும் கண்களின் நீரைத் துடைத்திட இங்கே விரல்கள் இல்லை.. 

ரங்கா🙏

அரங்கா திருவரங்கத்தை அலங்கரித்திருக்கும் மதுசூதனா மாதவா
மண்ணில் வைகுண்டத்தை வைத்த
வேங்கடவா 
ஆனந்தத்தை அள்ளித்தரும் 
அனந்தபத்மநாபா
பாதையின் பதியே நாராயணா,
வரதராஜா, கோவிந்தா
செயற்கரிய செயல்களை அனைவரும் செய்திட அருள் புரிவாய் ரங்கா

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

குலவை ஒலி எழுப்பி
பிரபஞ்ச ஒளி நாதனான சூரிய பகவானை வணங்கி
அனைத்து உயிர்களும் இன்புற இறைவனை வேண்டி வணங்குவோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

காதல் ❤️

நிழலாய் கூட வாழ்ந்தாலும் சரி நினைவில் நின்றாலும் சரி
நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதே காதல்

காதலே காதலே ❤️❤️

காலம் கடந்தாலும் அன்பு காதல் கரையாதே
வெறுப்பு மிகுந்தாலும்
விருப்பம் மறையாதே
வலி தான் தரும் என்பதால், 
அன்பு காதல் வழியை நினைக்காதே

Wednesday, 12 February 2025

உயிர் உன்னுடையது ❤️

விழியால் விழுங்காதே என் வாலிபத்தை, 
கண்களால் என் மனதில் கலகம் செய்யாதே
கரம் பற்றி, சிறை செய்யாதே சின்னஞ்சிறு நெஞ்சை.. 
பாவையே நீ பார்த்ததும், பாஸ் (Pause) ஆகுதே என் பேச்சு மூச்சு எல்லாம்.. 
பரவாயில்லை, 
உனக்கு இல்லாத உரிமை (உயிர்) யாருக்கு 

கோடி காதல் கொட்டுதே❤️

உன் கை பிடிப்பதாய் எண்ணி, 
மை பிடித்து சொல்கிறேன் என் காதலை..
என் காதல், 
கவிதைகளாய் விரிகிறது இன்றும்.. என்றும், என் மனம் காதலோடு இருப்பது உன்னிடத்தில் தான்.. 
ஆயிரம் கோடி கோபத்திலும்.. 

காதல் சரி ❤️

என்னப்பா காதல் சரிப்பட்டு வரலையா இன்று வாழ்க்கை எனை கேட்டபோது.. 
வாழ்க்கைக்கு நான் சொன்ன பதில், 
எனை சரி செய்ததே இந்த காதல் தான்.. 
என்ன, 
காதல் வழிகாட்டி, கூடவே வலியையும் காட்டி விட்டது.. 
சரி தானே❤️❤️

என்ன சொல்ல ஏது சொல்ல

எவ்வலி உனை சேராதிருக்க, நான் பாடுபட்டேனோ.. 
அவ்வலி எனக்கு பரிசளிக்கவே நீ என் பக்கத்தில் இருந்தாய் என நொடிப்பொழுதும் நான் நினைத்து பார்க்கவில்லை..
நல்லதொரு நாடகம், நட்பென்ற பெயரில் 

காதலின் வீச்சு ❤️

தோட்டாக்கள் போன்ற கண்களை கண்டு,
துடிக்கின்ற இதயம் நிற்பதை உணர்ந்தேன். 
கண்களும் பேசும் என்பதை காதல் வந்ததும் உணர கண்டேன். 
காலையில் பார்க்கும் கதிரின் ஒளியை விட, உன் கண்களின் கதிர்வீச்சு என் உயிரைக் உருக்குதடி.. காதலி

Tuesday, 11 February 2025

வினா ❤️ விடை

காஜல் எல்லாம் கரைகிறதே அன்பு கண்மணி, காரணமே இல்லாமல்..
காத்திருப்பின் காயங்கள் ஆறுமோ நம் கரம் கோர்கையில்..
விரும்பி வேண்டும் என்று விழைகையில் விலகிச் சென்றாய்..
விரிசல் விழுந்த பின், விருப்பம் என்றாய்.. 
விடை, பிரிவு தான் என்று வினாவை பார்க்கும் முன்னே அறிவேன்.

Saturday, 8 February 2025

காதலைக் கரையேற்று❤️

முரண் தகர்த்து, முன்னேறி வாராயோ என் முத்தமிழ் சிலையே❤️..
இதழ் இதயம் இணைந்திட வாராயோ என் இன்னிசையே❤️ 
விரல் கோர்த்திட, விரைவில் வருவாயோ என் வின் மேகமே❤️. 
கண் பார்த்து, காதலைச் சொல்வாயோ என் கனியமுதே ❤️

Deepseek

Deepseek அறிந்திடா Deep Sea என்னவள்.
Deeper Thoughts மூலமாய் Dishyum Dishyum செய்கிறாள்.
அரண் அமைத்து, திரை இட்டு என்னை துரத்தி விடுகிறாள். 
திரை விலக்கி, அரண் தகர்த்து அருகில் சென்றிட ஆவல் அதிகம் தான் எனக்கு. 
ஆனால் என் நுண்ணறிவு, அவள் உள்ளுணர்வை capture செய்து, எனை caution செய்கிறதே..
She is in Mood Swings🚩