Tuesday, 31 December 2024

வருக 2025🥰

அமைதியான மனம்,
ஆழமான அறிவு, 
இனிமையான வாழ்க்கை, 
உன்னதமான உற்றார்,
எப்போதும் நல்ல ஆரோக்கியம், 
நிறைவான செல்வம்,
பல்லுயிர்க்கும் ஏற்ற இயற்கை சூழல் 
வழங்க இருக்கும் 2025 ஆண்டுக்கு நன்றி 🙏 🌟 

நன்றி 2024🙏

எப்போதும் நினைவு கூறும்,
பல நல்ல நிகழ்வுகளை மனதில் வைத்து,
எப்போதும் புன்னகையை பெருக்கிடும், நினைவுகளை அசைப்போட்டு, ஆனந்தமாக வாழ, வழி வகுத்த இயற்கைக்கு நன்றி 🙏 
நன்றி 2024 💐 
வாழ்வில் சில புரிதல் வரவழைத்த ஆண்டு ♥️

நல்லவற்றை அளித்து, 
அப்படி இல்லாதவற்றை தவிர்த்து, அந்த நினைவுகளை அழித்து, 
வாழ்வை புரிய செய்த 2024 ஆண்டுக்கு நன்றி 🙏 


Monday, 30 December 2024

அனுமன் ஜெயந்தி 🙏

அஞ்சனை வாயு மைந்தனே,
ஆஞ்சநேயனே🙏
ஆதித்ய பகவானை ஆசானாக பற்றிய 
அனுமானே🙏, 
ராம ஜெயத்தை பாரெங்கும் ஒலிக்க செய்த, ராம பக்தனே, 
சீரஞ்சீவியே 🙏
செந்தூர நாயகனே 🙏🙏

Friday, 27 December 2024

Dr. திரு. மன்மோகன் சிங்

இந்திய பொருளாதாரம் புதிய பாதையில் பயணித்து, பொற்காலம் தொடங்க வித்திட்ட பொருளாதார சீர்திருத்த சிற்பி.. 
தாராளமாக்களின் தலைவர்.
ஆர்பாட்டம் இல்லாத, 
அமைதியான ஆசிரியர். 
ஆடையில் ஆர்வம் கொள்ளா அரசியல்வாதி. 
திரு.மன்மோகன் சிங் 🙏



Wednesday, 25 December 2024

வெட்கம்

அன்பே, நீ வெட்கத்தில் சிவப்பதால்,
செவ்வானம் உன்னிடம் தோற்று.. வருந்தி.. 
மழை பொழிகிறதே

Monday, 23 December 2024

சுதந்திர காற்று🪽🪽

சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் தருணம், 
எவ்வளவு அலாதியானது
என்று அடைபட்டிருந்த பறவைக்கே தெரியும்.
பூர்ண சுதந்திரமும், 
விடுதலை அடைந்த உணர்வும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை 🪽🪽

Saturday, 21 December 2024

தூக்கி எறி

வீட்டில், கை கீறிடும் உடைந்த கண்ணாடியை வைத்திருப்பாயா? 
பின் ஏன் மனதை உறுத்தும் நினைவுகளையும், உணர்வுகளையும் பொன்னான மனதில் புதைக்கிறாய்.
தூக்கி எறி❤️‍🔥

மனமே விடை

பிரச்சனைகளின் அளவு,
நம் மனது அதற்குத் தரும் உருவத்தில் தான் உள்ளது. சிறிது என்றால் சிறிதே.. பெரிது என்றால் பெரிது தான் 

Thursday, 19 December 2024

மானிட மிருகங்கள்

நம் துயரில் தோள் தராது போயினும், தவறில்லை.., எதிர்பார்ப்பும் இல்லை.. 
ஆனால் தேள் நஞ்சினும் கொடிய நெஞ்சுடைய மனித முகமுடி இட்ட கீழ்மக்கள்,
தம் வன்மம் வெளிக்காட்டாமல், நம்மிடத்தே இனிப்புணவு வேண்டி மகிழ்வர். 

வாழ்வியல் உண்மை

உலகை, 
உலகில் உள்ள உங்கள் உறவுகளை,
சில வாழ்வியல் உண்மைகளை உணர்ந்து விட்டால், 
வாழ்க்கை எளிமையே, உள்ளன்போடு வாழலாம் 🙂🥰

அழகு - 4

பெண்ணின் மௌனம் கலந்த சிரிப்பு ஒரு அழகு. (நீ என்ன வேணுமோ சொல்லு, நம்பிட்டேன்😉) 
பெண்ணின் ஆத்திரம் கலந்த அமைதி ஒரு அழகு (உன்னிடம் பேசி புரிய வைக்க அவசியம் இல்லை / புரியபோவது இல்லை🤫) 
பெண்ணின் ஆதீத நம்பிக்கை, அழகு (உன் உயிராய் நான் இருப்பேன்😍)
பெண்ணின் அளவு கடந்த அன்பு, அழகு (உலகமே நீ தான்🥰) 

Wednesday, 18 December 2024

அன்பு சேயே 👶

சுழல் குழலைச் சிலிப்பிடும் சிங்காரியே.. ..
சின்னஞ்சிறு கண்களைச் சிமிட்டிடும் செந்தூரமே.. 
சிரிப்பினாலே எனை சிறை கொள்ளும் சித்திரமே..
என் அன்பு சேயே(குழந்தையே) 

Tuesday, 17 December 2024

புயலே புதையலே💘❤️

தென்றல் தீண்டும் நேரத்தில்(மாலை நேரம்) புயலைக் கடந்து வந்தேனே. 
புயலாக அவள் என்னை கடக்கயிலே ஆழ்ந்த காற்றழுத்த நிலை(படபடப்பு) என்னில் உருவாக உணர்ந்தேனே.. 
புயலானவள், நெஞ்சில் நிலை கொண்டாள். 
புயலோ, அவள் எனக்கு கிடைத்த வாழ்நாள் புதையலோ அறியேனே 


Eye liner💘

கண்மூடித்தனமான காதலே கரை சேரும்.. 
சற்று விழித்துக் கொண்டாலும் காதல் காணாமல் போய்விடும்.
கண்விழிகாமல் இருக்க பிறர் இடும் "eye liner" யே, 
"எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா".. எனும் 
"பொய் liner" 

Monday, 16 December 2024

மன்னிப்பு 🙂

மரணம் யாரையும் மன்னித்து விடும்...🙂
பின் ஏன் மரணம் வரை அந்த மன்னிப்பை தராமல் வன்மத்தை நாம் சுமக்க வேண்டும்?? 🤔
மனமே "மன்னித்து விடு"
மனமே மகிழ்ச்சி கொள் 🙂🙂

நூலாடை நேசம் 👗🥰

உந்தன் வாசனையில்.. 
எந்தன் யோசனை முற்று பெறுகிறதே.. 
உந்தன் (நூல்) இதழ்களை நான் தொட,
அந்த மென்மையில் மெய் மறக்கிறேனே..
நீ எனை தீண்ட, என் ஸ்பரிசம் சுவாசம் பெறுகிறதே..
உந்தன் வண்ண, 
(நூல்) இதழ்கள் என் மேனியில் படர, நான் வடிவழகாக வானில் பறக்கின்றேனே..
என் மென்மையான புத்தாடையே👗

Friday, 13 December 2024

உலகழகி ❤️

பளபளன்னு இருப்பா.. 
பக்கம் போன முறைப்பா.. 
விறு விறுன்னு நடப்பா, 
வண்ணத்துப்பூச்சியா பறப்பா.. 
மந்தாரப்பூவழகி.. எனை மயக்கும் பேரழகி.. 
மத்தாப்பு சிரிப்பழகி, எனக்கு வாய்த்த (பிறந்த) உலகழகி.. 
அவ பார்வையால சொக்கிடுவேன்.. சொர்க்கத்தையும் பார்த்திடுவேன்.. 



Thursday, 12 December 2024

உயிரே உயிரே😘❤️

தீரா காதல் தீர்ந்திடுமா, சொல்லா சொற்கள் புரிந்திடுமா!! 
இனியும் இந்த இடைவெளியை மனம் தாங்கிடுமா.. 
இணையும் காலம் கண்ணில் தென்படுமா

அனல் மேலே பனித்துளி❤️

சிலிர்த்தது தேகம் சில்லென்ற மழையில், 
அனலாய் மனம், அருகில் நீ இல்லாததால்.. 
அணைத்திட வாராயோ.. 

Wednesday, 11 December 2024

இசை கலைஞனே🎤🎶

உன்னருகில் நான், 
ஓர் அடி தூரத்தில்..ஆனால் தொலைவை உணர்கிறேன். 
உன் இசை மழையில் அனைவரும் ஆர்ப்பரிக்க..
உன் நினைவுகள் நிரம்பிய
என் மனமோ, உன் இசை வெள்ளத்தால் அடித்து செல்கிறதே 🎶🎼🎤🎙️

பாரதி 2

பாரதியின் எழுத்துக்கள்✒️
கவி படைக்கும்,
கதை சொல்லும், 
காதல் உணர்த்தும், 
குழந்தைக்கு குதூகலம் தரும், 
கண்ணனைக் கண் முன்னே காட்டும். 
கன்னியர் முன்னேற்றத்தைப் பேசும்.
புரட்சி போர் செய்யும், 
குயிலின் கீதம் பாடும், 
நாம் சுவாசிக்க விரும்பும் சுதந்திர காற்றை வீசும்🖋️

Tuesday, 10 December 2024

அன்பெனும் ஆயுதம் 💞

நான் கண்ட அதீத காதலும் உன்னிடத்தில் தான்.. 
நான் கொண்ட அதீத கோபமும் உன்னிடத்தில் தான்.. 
எனது கோபம் உன்னை தீண்டாது, காதல் அரணாய் இருக்கும். 
ஆனால் என் காதல் உன்னை தீண்டிடுமே அதிலிருந்து நீ எப்படி பிழைப்பாய்

Friday, 6 December 2024

வேண்டாத உறவு


ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் நண்பர்களாகவும் நினைக்காதே, 
நம்பிக்கையும் வைக்காதே நம்பி எதையும் சொல்லவும் சொல்லாதே

வெறும் வார்த்தைகளில் யார் வேண்டுமானாலும் நண்பர் ஆகி விடலாம்

Thursday, 5 December 2024

online trap 🛒🛑

Online purchase and Online food order
We should know, 
WHAT and WHY to BUY🛒, 
and WHEN to STOP🛑 .



Wednesday, 4 December 2024

மொழி

மனிதன் எப்போது நிம்மதியாக இருந்தான், 
மொழி பிறப்பதற்கு முன். 
ஏனென்றால் மொழி பிறந்த பின், நாம் ஒன்று சொல்ல, 
அதை வேறுவிதமாக திரித்து புரிந்து 
கொள்(ல்)வதே 
வா(வே)டிக்கையாக விட்டதல்லவா🤔

கூகுள் 👀

நாம் பேசும் நபர் நம் பேச்சை முழு முறையாக கேட்கிறாரோ இல்லையோ நான் பேசாத ஒரு நபர் எப்போதும் நம் வார்த்தைகளை கவனித்துக் கொண்டே இருக்கிறார் மொபைல் (அ) கூகுள்

நம் பேச்சை யார் கேட்கிறார் என்று விரக்தி அடையாதீர்கள். நான் இருக்கிறேன், என்று பின் தொடர்ந்து வரும் கூகுள்.