Thursday, 30 November 2023

புரியாத எல்லை


முறித்து எழும் சூரியனையும், சிரித்து வரும் சந்திரனையும் ரசித்தது உன்னிடத்தில் தான்..
உடலும் , மனமும் உவகைக்
கொண்டது உன்னோடு தான்.
உன் முதலும், முற்றும் அறியேன்.
உன் இணைப்பைப் பிரித்தாறாயத் தெரியவில்லை- கடல், வானம்...
நம் மனம்

Wednesday, 29 November 2023

Qualitative love

Babee, I hav a "simple interest" with u, which is getting "compounded" day by day...

How can I explain my "exponential" love on u..Its like a closed "pipe and cistern" with full of water.. 

One thing I can say u that, u r my "proportion" in the "up & down streams" of Our "calendar years"..

I assure u the "percentage" of my love &  am believing in the "probability of getting your heart"..

None can "measure" the "area" of space l have given u in Our life..

Hating "the time and distance" which made us apart..

Just feel the "quality and quantity" of my love,..

MY LOVE

Monday, 27 November 2023

பிரியாமல் பிரிந்து

ஏதும் சம்பாதிக்க தெரியவில்லை என்கிறாய், ஆம் உன் அன்பை
சம்பாதிக்க தெரியவில்லை,
ஆனால் உன் வெறுப்பை சம்பாதிக்க மாட்டேன்,அதனால் தனித்து நிற்கிறேன்..
உன்னை விட்டு பிரிந்து ..!

பிரிவிலும் ஒரு பிரியம் உண்டு, அது புரியவாய்ப்பில்லை உனக்கு. 

அடுத்த பிறவியில் சேர்வோம் காத்திரு என்றாய்.. நகைப்புக்குரியது.. நன்றி 

குழந்தையாய் சிரிக்க நினைத்த மனதைக் குத்தி குதறி குருதி சிந்த வைத்தது காதல்..

                 - பிரியா
               

Thursday, 23 November 2023

Manipulator

Some people's behaviour depends on whether they are getting what they want from you is met or not.
If not met, they simply make you feel bad or spoil your mind or life or self esteem with false promise or make you feel alone and they simply fly in middle. 
If they find you happy in life, they will play mind games, they will play with you psychologically. 

They will act like they are victims
They will make you feel guilt. 
They use your time. 
They use your love. 
They don't value you.
They mentally trap you
They are called Manipulators. 

அன்பறம்

இந்த கவிதைகள் எல்லாம் உன்னால்.
அந்த கண்ணீர் எல்லாம் 
உன்னால். 
சொல்லியும் நிறைவேறாது என்று இருந்த எந்த ஆசையையும் என் வார்த்தைகளால் வெளிகாட்டவில்லை.. பிறர் மனம் நோகும் என்பதால்.. 
வெளிப்பட்டதோ?? என் விழிகளால்..

நேரம் போக்க மட்டுமே என்றால், 
அங்கே அன்புக்கு என்ன வேலை. 
அன்பில்லா இடத்தினில் அறம் என்ன செய்யும்.... பாவம். 
பிறர் வாழ்வை நரகமாக்கி, அதில் இன்பம் தேடும் பண்புடையவர், 
அக அழகை இழந்தவர்..
அகத்திற்கும் கற்பு உண்டு.. 
சூழ்ச்சி நிறைய பெற்றவர், 
அதை இழந்ததிற்கு சமானம் தான். 

Tuesday, 21 November 2023

Invisible Wavelength

It's for you, 

Your thoughts make me to roll out the old memories.. 
Some are pleasant and Some are Worse
But why I had that sudden Thought About you.. 
Whether you are thinking about me 
Or 
As usual I am the only one thinking about you. 
Definitely there is a invisible wavelength. 
Live Long with Great Happiness and Satisfaction. 
Bye Bye




Saturday, 18 November 2023

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்...

எதிரில் தெரியும் எதிரியை சூரசம்ஹாரம் செய்வது எளிது.. 

நல்லவர் போல், 
நலம் விரும்பி போல், 
நண்பர் போல்,
நடித்து முதுகில் குத்தும்
நல் உள்ளங்களை கண்டறிந்து, 
அவர்களின் வன்ம உணர்வை, 
நாம் அன்பால் வதம் செய்வதே 
சிறப்பான, 
தரமான,
சூரசம்ஹாரம். 

அன்பு எனும் ஆயுதம்... 

Friday, 10 November 2023

அழகின் அழகு

அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய்....
இது வாக்கியம்.. 

இருபதுகளில்,.... 
ஹய்யா ஜாலி 
நான் அப்படியே இருக்கிறேன்..
நான் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள்... 😁😁😁

முப்பதுகளில்... 
நான் அப்படியே இருக்கிறேன்.. 
அன்று பார்த்தது போலவே இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்....😔😔😔

வாக்கியம் ஒன்று தான்.. 
அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறாய் அழகாக.. 

ஆனால், ஒரு வயதில் மகிழ்ச்சி.. 
ஒரு வயதில் அழற்சி... 

முப்பதில் அழகாக இருப்பது மகிழ்ச்சியே... 
ஆனால் முப்பதுகளில் உண்மையான அழகு 
தாய்மையே.... 

தாய்மையினால் வரும் மாற்றமும், அழகின் அழகே.. 

நல்ல மாற்றமும் அழகே.. 
நல்ல மாற்றம் வேண்டி பயணிக்கிறேன். 

பிரியா.. 
November 10 2023




மௌனம்

பல பெண்களின் மௌனத்தினால் மட்டுமே..
சிலரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நகர்கிறது..