Thursday, 27 June 2019

காகித - மை காதல்

மனம் மய்யல் கொள்வது உன்னோடு
   மை மண்டி இடுவது உன்னோடு

மனதின் ஆசை உன்னோடு
   மையின் பாசை உன்னோடு

கரையாமல் கரைகிறேன் உன்னோடு
   எழுத்துக்களால் குழைகிறேன் உன்னோடு

கனாக்கள் காண்கிறேன் நெஞ்சோடு
    எண்ணங்களால் நிறைகிறேன் உன்னோடு

காலம் கடந்தாலும், என் காதல் உன்னோடு,
   காகித மைக் காதல் போல.. அழகிய சுவடாய் என்றும்.

Thursday, 20 June 2019

அறம் இல்லா அன்பு

அறம் இல்லா அன்பு, அணுவிபத்து போல.. மீண்டும் என்றும் மலராது முன்பு போல்

Thursday, 13 June 2019

ஏனோ ஏமாற்றம்

மாறியது நீரோ- ஆதலால்
கண்ணில் கண்ணீரோ. நீர்
மறந்தது நம்மை - அதுவே
நிதர்சன உண்மை. நீர்
வாழ்வில் உயரப் பறந்திடச்
செய்ய நினைத்த என்னை.. நீர்
தாழ வைத்தது ஏனோ..
மரித்துப் போனது என் காதல்..
மறக்க நினைக்கிறேன் உன்னை.

Wednesday, 12 June 2019

தவிப்பு - தவிர்த்து

தீராக் காதல் கண்டேன் உன் கண்களிலே..
அது என்னைத் தீண்டும் முன்னரே , தவிர்த்து ஒதுங்கினேன்..
நீ பின்னர் தவிக்கக் கூடாது என்பதால்.
என் எண்ணங்களை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஏன் என்றால், வேண்டும் என்றே உனக்கு என் மேல் வெறுப்பு வர நடக்கலானேன்.

காதல் கதை


காதல் ரசனை சொட்ட சொட்ட
கதை ஒன்றை கருவாக்கினேன்.
காகிதத்தில் என் கண்ணம்மா..
கண்ணடித்து சிரிக்கின்றாள்.
கண்கொட்டாமல் என் கண்மணியை ரசிக்கிறேன்.
கண்கள் அயர்ந்தாலும்
கனவிலும் கண்ணுக்கினியாளே.
இது காதலி மேல் உள்ள மோகம் அல்ல..
கதையின் மேல் நான் கொண்டத் தீராக் காதல்.

மாற்றம் எங்கே

யார் சொன்னது பெண்கள் இயற்கையிலேயே சிக்கவாதிகள் என்று..
அவர்கள் தாம் மிகப் பெரிய செலவாளிகள்...
ஆனால் அவர்தம் சூழ்நிலை அவர்களை அவ்வாறு உருமாறிக் கொள்ள நிர்பந்திக்கிறது..
அவர்கள் ஆசையை வெளிக்காட்டாமல்.. அடக்கி மற்றும் அடங்கி இருக்கிறார்கள்..
மாற்றம் வந்துவிட்டது என்று அரைகூவல்கள் கேட்டாலும்..
இல்லை அது ஒரு மாய பிம்பம் என்பதே நிதர்சனம்.

Monday, 3 June 2019

ஜூன் 3

ஒரு நாளும் வேண்டாம் இந்நாளைப் போல்.
என்னாளும் நன்னாள் என்றிருந்த என் எண்ணங்களில்,
இது கருநாளாய் போனதே..

Sunday, 2 June 2019

கடவுள் சித்தம்

அழக்கூட அலுப்பாகத்தான் உள்ளது..
கண்ணீர் சுரப்பிக் கலைப்பாகி போனதால்.
வீடெங்கும் அமைதி.. மனதில் இல்லை..
ஆசை என்று ஒன்றும் இல்லை..
வாழ வேண்டும் என்ற ஒன்றை தவிர..
அட ஆண்டவனுக்கு, அது கூட, நான் பேராசைக் கொள்வதாய் தோன்றுகிறதோ என்னவோ... ஹ்ம்ம்ம்.. என்னவென்று சொல்ல..