Saturday, 17 September 2016

கருவளையம்



தனிமையில் தூக்கம் துலைத்த நான், நிலவை பார்த்து ஆறுதல் அடைந்தேன் ..
என்னை போலவே நிலவுக்கும் கருவளையம் இருந்ததே அதன் மேனியில் ..

Loneliness

Felt the feeling of moon being alone at night, when asterism engage the sky,
You are alone there, like me on earth.

Monday, 12 September 2016

முகத்திரை

நான்  முகத்திரை  அணிவது ,  என் நிறம்  காக்க அல்ல
என் விழிகளில் வழியும் நீரானது  , பிறர் முகம் பாராமல் இருக்கவே !!


தனிமை தவறில்லை

  வேண்டாம் என்று விலகி செல்வோரிடத்தில் ,
  உன் விழிநீரை வீணடிக்காதே ,
  வேண்டுமென்று உன் நினைவுகளை நசுக்குவோரிடத்தில்
  கருணை காட்டாதே , அவர்கள் தரநினைக்கும்
  தனிமை எனும் தவிப்பை  ஏற்றுநிற்காதே ..
  நீ தனித்து நின்றால் தவறில்லை ..
  பிறர் எண்ணம் உன் மேல் திணிக்க வாழாதே ..




தனிமை தவறில்லை

தனிமை

தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை , தனிமையை பரிசளிக்க..
தடுக்கி விழுந்தால் , தாங்கிட துணை இல்லாமல் வாழ்க்கை துன்புறுத்த , ..
இதையெல்லாம் கண்டு துவண்டு  விடாதே என்று துயர்பட்ட நெஞ்சம் தூக்கியமர்த்த ..
அகவை அடைந்து இரண்டு தசகாப்தம்  முடியும் தருவாயில் முடிவென்பது நெருங்காதா  என ,
நொறுங்கி போன இதயம் கூக்குரலிட்டது ..


நோட்:

அகவை- 60 Years
தசகாப்தம்- 10 Years

தனிமை

Friday, 9 September 2016

தமிழாய் பிறப்பெடுக்க ஆசை

கவிதை கண்களால் எனை சாய்த்த செந்தமிழ் நாயகியே
உன் கைகளால் வரையும் ஓவியத்தை ரசிக்க ஆவல் கொண்டேன் 
மொழி அறியா நான் , மொழிமாற்றம் கண்டேன் 
உன் தமிழின் நடையில் , நெகிழ்ந்து போனேன் .
உன் விரல் கொண்டு வரைவாயினின் ..
உன் விழி கண்டு வாழ்வேன்னெனின் ..
உன் செவ்விதழ்களால் பாராயணம் செய்வாயினின் ..
இனி வரும் ஐந்தாறு பிறவிதனிலும் ..
தமிழாய் பிறப்பெடுக்க ஆசை .






Friday, 2 September 2016

பெண்மை

மலராய்  மலரும் போது,  நங்கை அவள் அழகு
தென்றலாய் தழுவும் போது ,
    பேதை(1 வயது முதல் 8 வயது ) அவள் இனிமை.
சூறாவளியாய் சுழலும் போது,
     மடந்தை(15 முதல் 18 வயது)  அவள் அருமை
அழகிய அறவாழ்விற்கு ஆதாரம்,
    அரிவையின்(19 முதல் 24 வயது) அறிவே
அகம் அழகுபெற ஆணிவேர் ,
    தெரிவையின்( 25  முதல் 29 வயது) தெளிவே
அற்புத செயலாற்றி, அனுதினமும் அனுபவம் தருபவள்
    பேரிளம் பெண்ணே (30 வயதுக்கு மேல்)

மெழுகின் மேன்மை,  நங்கை இவளிடத்தில் நிறைத்தே இருக்கும் .

பெண்மை

நோட்:
------------
பெண்களின் ஏழு பருவங்கள்

* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்





பெண்ணெனும் பட்டாம்பூச்சி

பருவம் துளிர்க்கும் காலத்தில் பார்ப்பதெல்லாம் பட்டாம்பூச்சியே
வானில் சிறகடிக்கும்  வண்ணத்துப்பூச்சியை வதைக்கவேண்டாம்..
சிறகின் வண்ணம் நோக்குகிறேன் என்று நோகடிக்கவேண்டாம் ..
கையில் பற்றி கசக்கவேண்டாம் ..காயங்கள் வேண்டாம் ..
வண்ணத்துப்பூச்சியின் காயங்கள் வடுவாவதில்லை ..ஆனால் 
பெண்ணின் சிரத்தில் அவை சிறைவைக்கப்படுகின்றன.