எதிர் பாரா முத்தங்கள்
அதுவே நான் விரும்பும் சப்தங்கள்.
இரவில், இடம் இருந்தும் இடைவெளி இல்லாமல் இணைந்திருப்போம்.
பகலில் பனிபோல் உன்னுள் படர்ந்திருப்பேன்.
எனை அள்ளி அணைத்து அலங்கரித்து, அன்பால் அரிதாரம் பூசுவாய்.
Sunday, 25 February 2018
அன்பின் அரிதாரம்
Saturday, 24 February 2018
காதலே
என் எழுதாக் காகிதங்களில்
ஒளிந்திருக்கும் காவியம் நீ
தெளிந்த வானில் மறைந்திருக்கும் , ஏழுவண்ண வானவில் நீ,
கரும் பலகையில் கண்ணடிக்கும் கலைநயம் நீ
உன்னை உள்ளார்ந்து நேசிக்கும் என் உள்ளத்தை
எப்போது உணர்வாய் நீ
வார இறுதி நாட்கள்
துயில் எழுப்பும் தூய வானம்
திறந்திடா கண்கள்.
தட்டி எழுப்பும் கைகள்,
திரும்பி துயில் கொள்ளச்
செய்யும் தாலாட்டு.
பசி உணர்த்தினாலும்,
பக்கத்து தலையணையைக்
கட்டிக்கொண்டு கனவில் லயிக்கும் உள்ளம்.
Thursday, 1 February 2018
நிச்சயம்
எட்டி நின்று, ஏக்கம் கொண்டு கனா கண்ட கண்கள்.. இரண்டும் அருகிலே..
இருநான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும், மனதினில் நிலைத்திருக்கும், ஆழமான நினைவுகள்..
கரம் பிடிக்கும் காலம் கண் முன்னே..
கண்ணாள.. உன் கண்கள் ஆள நான் வருகிறேன்..
என் நெஞ்சம் நிறைத்திட வாராயோ!!! 😘
Subscribe to:
Posts (Atom)