Saturday, 30 November 2024

காதல் கனமே❤️

என் காதலின் கனவானவள்👸
கனமானவள்❤️... 
குளிர் காலத்தில்💞💕.., 
கனிவானவள்.. வெயில் 
நேரத்தில்..., 
என்றும் என் எனக்கானவள்.. 
எனை ஏற்றவள்.. 

Friday, 29 November 2024

Happy Birthday தமிழ் காதல் கவிதை - one year of youtube - lessons

1. முயற்சி செய், 
2. எல்லா நாளும் ஒன்று போல் இருக்காது
ஏற்ற, இறக்கம் இருக்கும்.
3. நிதானத்தை கடைபிடி.
4. எல்லாம் நன்மைக்கே
5. புதிய செயல்கள் மூலம் புதிய உறவுகள்

Wednesday, 27 November 2024

பெண்கள் புயலோ😜

Fengal புயலோ??
அவள் கண்கள் புயலோ??
சுட்டும் விழியால், சுற்ற வைக்கிறாள் எனை, 
வில் விழியால், எனை வளைகிறாள்,
கட்டி இழுக்கிறாள், 
மெல்ல சாய்கிறாள் .. 


Tuesday, 26 November 2024

திருமணம் ❤️❤️

ஒற்றை விரல் பற்றி,
இரண்டு மனம் ஒன்றி,
மூன்று முடிச்சு இட்டு,
நான்கு பேர் வாழ்த்துக்களுடன், 
பஞ்ச பூத சாட்சியாய், 
அறுசுவை உணவிட்டு, 
ஏழு ஸ்வரங்கள் கீர்த்தனை ஒலிக்க, 
எட்டு கோள்கள் ஆசீர்வதிக்க, 
நவரசமும் மனதில் தோன்றி 
அழகாய் நடந்தேறும் 
திருமணத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️




பெண் பிள்ளைகள் பாதுகாப்பு 👸

நெருங்கிய நபர்களுடனும்,
நெருப்பாய் இரு குழந்தாய்..
அவர்களிலும் சில நரகாசுர்கள் நல்லவர் அரிதாரம் பூசியிருப்பர். 
அகத்தில் ஆயிரம் வன்மம் சுமந்து, முகத்தில் சிரிப்பார்கள். 
பார்த்து இரு, பாதுகாப்பாய் இரு குழந்தாய்.

காதலிக்க நேரமுண்டு❤️❤️

தேகம் சுடு, சுடு சுடுவென சுடுவதேனோ.. உன்னருகில்
மனம் பட பட படவென துடிப்பதேனோ.. உன் பார்வையால். 
அடி இள மனம் உன்னிடம் கரைவது ஏனோ.. 
மின்னல் மழை என்னுள் அனுதினமும் நிகழ்வதேனோ
காதலே

ARR Kadhalika Neramillai.. Film tune

காதலிக்க நேரமில்லை

Film : Kadhalika Neramillai 
Arr: ezhu ezhu ezhukadhu

உன்னை பார்த்து, பேசி பகிர 
பல்லாண்டாசை என்னுள் புதைந்திருக்கு, 
அதை சொல்லி செல்ல என் சின்னஞ்சிறு மனம் காத்து கிடக்கு, 
உன் கரம் பற்றி உரையாட ஒரு வரம் தா எனக்கு.. 
உன்னோடு இருப்பதே வாழ் நாள் வரம் எனக்கு 
காதலிக்க நேரமில்லையோ உனக்கு... 

Thursday, 21 November 2024

அதிர்ஷ்டசாலி

சந்தோசமோ, சோகமோ
அதை பகிர நம்பிக்கையான, நம்மை மதிப்பிடாத உறவு உள்ளவர் தான் மகிழ்ச்சியானவர், அதிர்ஷ்டசாலி 

உங்களுக்காக

காலப்போக்கில், குழல் கழிவதை போல,
கரைந்திடும் சில நினைவுகளும்..
எலும்பு தேய்வது போல, தேய்ந்திடும் சில உறவுகளும். அன்பு அடிமைத்தனம் இல்லை, ஓர் சுதந்திரம். 
பிரியா 

Tuesday, 19 November 2024

காதலும் கடந்து போகும்❤️

நான் அறியாமல்,
என்னில் தோன்றிய புன்னகை.. நீ அன்பே.. 
நான் உணர்ந்த , 
காதல் எல்லாம் உன்னால் அன்பே... 
வெளியுலகம் பற்றி அறிந்தது 
உன்னால் அன்பே.. 
உன்னை விட உன் மனம் நான் அறிவேன் அன்பே




இமை தாண்டாதே

கண் இமைகளைத் திறக்க மனமில்லை. 
ஆழ்ந்த நித்திரையினால என்றால்... 
இல்லை, 
உன் நினைவுகளால் கண்களில் பெருகிய கண்ணீர்
இமை தாண்டி கன்னங்களில் கால் பதிப்பதை பிறர் காணாதிருக்கவே

Monday, 18 November 2024

பாசம் எனும் வேசம்

அழையா துணையாக வந்த அன்பு உறவே, 
பாசம் வேண்டும் என்று வேசமிட்ட கலைஞனே, 
வஞ்சத்தில் உன்னை விஞ்சிட யாரும் இல்லை. 
தேவைகேற்ப நிறுவி பின் நீக்கிட, அன்பும் பாசமும் 
ஒன்றும் தொழில்நுட்பம் இல்லை. 



Sunday, 17 November 2024

காதல் யாதெனில்

ஒருத்தர் கூட இருக்கும் போது நம்ம சந்தோஷமா இருக்கிறோம் என்பதை விட, கூட இல்லானாலும் அவங்க சந்தோஷத்தை பார்த்து நம்ம ஹாப்பியா இருக்குறது தான் காதல்னு நினைக்கிறேன்

போகாதே🎼🎵🫶..

போகாதே❤️...போ..காதலே❤️‍🔥..
போ... கதையேதும் கதைக்காதே🎼.. 
என்னையும் 
வதைக்காதே🎵..
சிரித்து மகிழ்ந்தது, சில காலம் தானே😊.. 
நினைவுகள் நெடுந்தூரம் என்னோடு மட்டும் வர,
என்ன மாயம் செய்தாயோ❣️

Saturday, 16 November 2024

அன்பு

அன்பு அழகானது,
அளவான அன்பு, ஆபத்தில்லாதது.
உணர்வு பூர்வமான அன்பு,
உயிரோட்டமிக்கது

மதிப்பாய்வு

நம் வாழ்க்கையை, 
நம் எண்ணங்களை, 
நம் செயல்களை, 
நாமே அவ்வப்போது மதிப்பாய்வு செய்தல் நன்று,
இல்லையேல் பிறர் செய்ய நேரிடும். 

நன்றி 🙏 🙏

என் உயிரை சுமக்கும் உடலுக்கு நன்றி,
உள்ளத்தை சுமக்கும் உயிருக்கு நன்றி, 
உணவு, உறைவிடம், உடை, உடல் நலம், சிறந்த உயிர் குடுத்தோர், உற்றார் உறவினர் கொடுத்து, அளப்பரிய வாழ்க்கை அளித்து, எப்போதும் என்னை காக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி நன்றி 🙏 🙏 

Friday, 15 November 2024

சுதந்திரம் ❤️

சுதந்திரம்
இன்றும் தனிமனிதனின் தேவையாக உள்ளது. 

அன்பில் சுதந்திரம், 
அலுவலில் சுதந்திரம், 
பேச்சில் சுதந்திரம், 
எண்ணங்களில் சுதந்திரம், 
எழுத்து சுதந்திரம்.. 
அடுப்படி சுதந்திரம்.. 
இப்படி பல

Wednesday, 13 November 2024

பாடல்

கடவுளே,
கண்ணீர் சிந்தாமல்... 
சில பாடல்களைக் கேட்கும் தைரியம் எனக்கு குடு..🙏

Tuesday, 12 November 2024

அன்பான கோபம்

என்னிடம் என்ன இருந்ததோ அதை நான் தந்தேன் உன்னிடம் என்ன இருந்ததோ அதை நீ கொடுத்தாய் கொடுத்ததற்கு நன்றி. உன்னிடம் இருந்தது கோபம் என்னிடம் இருந்தது அன்பு

Sunday, 10 November 2024

பப்பி ஹேப்பி

மகிழ்ச்சியான வழியில் எண்ணங்களை மடை மாற்றம் செய் மனமே,
உன் வாழ்க்கை மேம்பட 🙏❤️

33 ஆண்டுகள் இனிய பிறந்தநாள் பிரியா ❤️

மூவிரண்டு வருடங்கள் முன்பிருந்த அகமே..

சிரிப்பினாலே சிவந்த முகமே..

பொய்களையும் புன்னகையால் ஏற்கும் குணமே..

ஆழ்ந்து அதிகம் சிந்திக்காத மனமே..

அன்பர் எல்லாம் நண்பர் என்று நேசித்த நெஞ்சமே

உண்மை என்றும், உறவென்றும் நம்பிய உள்ளமே

போய் வா.. நன்றி 🙏

Happy Birthday to Me 🎂

Sunday, 3 November 2024

நன்றி வாத்தியாரே

வாஞ்சையான வார்த்தைகளோடு வருபவர்கள் எல்லாம் வானவில் உறவுகள் அல்ல... 
வன்மத்தை உமிழ்ந்து,
வஞ்சம் தீர்க்க வந்தவர்களாக கூட இருக்கலாம். 
வாழ்க்கை வாத்தியார்கள் அவர்கள். 

Saturday, 2 November 2024

மின்னலே🎇

செந்தாழினி நீ..செந்தாழினி நீ...
சிரிப்பினாலே சினத்தைக் கொல்லும் மாய மோகினி நீ..
செந்தாழினி நீ, செந்தாழினி நீ 
செம்மையான மனம் உடைய அழகிய மோகினி நீ..
யாழ்மொழி, என் சேய்மொழி.. 
என் தாய் மடி, என் உயிர் நாடி 
இனி நீ..

Friday, 1 November 2024

அழகு 🌹

மலர் இதழின் ஓரத்தில் பனி துளி
மணப்பெண் இதழ் ஓரம்
கண்பாடா பொட்டு
இரண்டுமே கண்கொள்ளா அழகு குழந்தையின் சிரிப்பு
பனி படர்ந்த மலை தொடர்கள்
பசுமை சூழ்ந்த வயல்வெளிகள்
ஆர்ப்பரிக்கும் அருவி
எப்போதும் மனதிற்கு மகிழ்வை தருபவை 

காதலி❤️

காதலைக்❤️.... காதலி❤️... 
காதலே... உன்னை காதலிக்கும்
காலம் எல்லாம்❤️❤️.
கண்ணாலே சொல்லடி, 
காதலின் கனத்தை
கைக்கோர்த்து காதலிப்போம்
வா என் காதலே


தீபாவளி வாழ்த்து

பொங்கும் இன்பம் என்றும் தங்கிட
காலையில் வர்ணஜால ஆடையில்,
புன்னகையோடு பூத்திருக்கும் மலர்களைக் கொண்டு
இறைவனை வணங்கி,..
இனிப்புகள் உண்டு..
இரவில் வானில் கோலமிடும் வாண்டுகள் என இந்நாளில்
மனம் மத்தாப்பு போன்று மகிழ்ந்திடும்!!
அனைவருக்கும் தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

உறவுகள்

உலகம் அறிந்து வாழாதவர் வாழ்க்கை
பிற உற(ள)வுகளால் கெடும் 

நடிப்பு அரக்கன்

மெய்யறிந்தும் அறியாதார் போல்
                       பொய்யுரைத்து 
பூசல் நாடகமிடுவர் சிலர்

நம் வாழ்வின் உண்மை நிலையை பிறர் வழியே அறிந்தும், 
ஒன்றும் தெரியாதவர் போல், 
மீண்டும் நம்மிடமே கேட்டறிந்து,
வருத்தம் கொள்வதாய் போலியாக வேஷமிடுவர் சிலர். 

Sweet ❤️Savoury

அவன் அவளிடம்....

உன் கருப்பட்டி நிற கார்குழல்
சோன்பப்டி நிறமானாலும்..
உன் குலாம் ஜாமூன் கன்னங்கள், 
காஜு கட்லி ஆனாலும்..
பன்னீர் ஜாமூன் இதழ்கள்,
பால்கோவா நிறமானாலும்..
நீ என்றுமே என் Sweet❤️

அவள் அவனிடம்..
உன் முள் முறுக்கு மீசை,
தட்டை ஆனாலும்..
உன் போண்டா போன்ற கன்னங்கள்... காரா பூந்தி ஆனாலும்..
காரா சேவ் கரங்கள், ரிப்பன் பகோடா ஆனாலும்..
நீயே என் Savoury❤️