நிலையாய் இருப்பேன் .. உன் நிழலாய் இருப்பேன்.. நன்றாய் இருப்போம்.. நலம் பல காண்போம்..
பேணிக் காப்பேன்.. பெற்றோர் போலவே.. இன்னும் பல வாக்குறுதியை நம்பி வந்த தாரகையை.. தரம் தாழ்த்தி பார்க்க உனக்கு மனம் வந்ததேனோ..
இருந்தும் இல்லை என்ற நிலை தரும் உறவுகளைக் காட்டிலும்.. யாரும் இல்லை என்ற உணர்வு ஒன்றும் செய்வதில்லை..
வாழ்வில் சிலவை சாரலாய் வருவதும், சிலுவையாய் வருவதும்.. அவரவர் செய்த செயல்களே
விழிநீர் வழிந்திடும் போது, துடைத்திட இருப்பேன் என்றாய்.
இப்போது வலிப்பதே உன்னால் தான்.. விழி வழி வரும் நீர் வழிந்திடுவதைத் துடைத்திட விரல் எங்கே தேடுவேன்.
யாரேனும் நலமா என்று கேட்கையில், புன்னகையோடு பூர்ண நலம் என்று சொல்கையில்..
இதயத்தின் குருதி.. எரிமலைக்குழம்பாய் கொதித்து கொல்கிறது...
வலியோடு தானே சிரிக்கிறேன் இன்றும்..
மனம் அதனோடு பழகியதன் மாயம்