மென்பொருள் பெண்ணே , ஒரு மெய் சொல்லவா ,
உன் கருவிழி ரெண்டும் , கடத்துதே உன்னுலே ...
அரிதினும் அரிது உன்னை அறிய முட்படுவதே , என் அன்பே ..
எனக்கு புரியாத மொழியிலும் , என்னை புலவனாக்கினாய் நீயே ..
நேரம் மாறும் வேலையிலும் , என் காதல் ஓயவில்லை ,
விசைதட்டில்( keyboard), என் மனதின் இசை அமைக்கும் ,
என் இசைஞானி நீயே ...
உன் திசை நாடி, ஈர்ப்பு விசையில் வந்தவன் நானே..
மாற்று சாவி(shift key) நீயாக ,
உன்னை தாங்கும் கட்டு சாவி(control key)நானாக ..
மாற்று விசை(Alt Key) நீதானே ,
உன் கைக்கோர்க்கும் தத்தல் சாவி (Tab Key) நான்தானே ,
நாம் இணைந்தே இமைத்திடுவோம்(Alt+Tab) ,
புதிதாய் பிறப்பெடுப்போம் ..
என் தங்க கட்டி பெண்ணே நீ , சுட்டி(mouse) தொடும் நேரத்தில் ,
என் மனம் கத்தி துள்ளாட்டம் போடுதே ..
நீ மின்திரை(monitor) நோக்கும் நேரம், என் கண் திரை உனை நோக்குதே, உயிர் தோற்குதே ,
உயிர் பெறவா ? உயிர் தரவா ..? உண்மை சொல் அன்பே நீயே ..
arumaiyaana Oppanai - KANINI : KANNI....
ReplyDeleteKeep it up..!!!!
arumaiyaana Oppanai - KANINI : KANNI....
ReplyDeleteKeep it up..!!!!
nandri
ReplyDelete