Wednesday, 31 August 2016

வெற்றி

மறையும் கதிரவன் விடியும் முன்  வருவதில்லை வெற்றி ,
மனம் சோர்வடையாது முயல்வோருக்கு அமைவது.


பிரிவு

பாராமுகமாய் போகும் பழகிய முகங்களுக்குப் பரிசு, உங்கள் மனதில் பாரமாய் இருக்கும் என் நினைவுகளே ..

எதிரியாய் பிரிவதை விட, நண்பனாய் விலகிடுவது நன்று .


பிரிவு


மென்பொருள் பெண்ணே

மென்பொருள் பெண்ணே , ஒரு மெய் சொல்லவா ,
 உன் கருவிழி ரெண்டும் , கடத்துதே உன்னுலே ...
அரிதினும் அரிது உன்னை அறிய முட்படுவதே , என் அன்பே ..
எனக்கு புரியாத மொழியிலும் , என்னை புலவனாக்கினாய்  நீயே ..
நேரம் மாறும் வேலையிலும் , என் காதல் ஓயவில்லை  ,
விசைதட்டில்( keyboard), என் மனதின் இசை அமைக்கும் , 
என் இசைஞானி நீயே ...
 உன் திசை நாடி, ஈர்ப்பு விசையில் வந்தவன் நானே..
மாற்று சாவி(shift key) நீயாக , 
உன்னை தாங்கும் கட்டு சாவி(control key)நானாக ..
மாற்று விசை(Alt Key) நீதானே ,
 உன் கைக்கோர்க்கும் தத்தல் சாவி (Tab Key) நான்தானே ,
 நாம் இணைந்தே இமைத்திடுவோம்(Alt+Tab) , 
புதிதாய் பிறப்பெடுப்போம்  ..
என் தங்க கட்டி பெண்ணே நீ , சுட்டி(mouse) தொடும் நேரத்தில் , 
என் மனம் கத்தி துள்ளாட்டம் போடுதே ..
நீ மின்திரை(monitor) நோக்கும் நேரம், என் கண் திரை உனை நோக்குதே, உயிர் தோற்குதே  ,
உயிர் பெறவா ? உயிர் தரவா ..? உண்மை சொல் அன்பே நீயே ..



என்ன உலகம் ?

நல்லதே நினைத்தாலும் நடிப்பென்று நகைக்கும் நாடக உலகமடா இது .

என்ன உலகம்

Tuesday, 30 August 2016

உன்னை மெருகேற்று

உன் வினை ஈடேற, எதிர்முனை தன்னில் உபயம் எதிர்நோக்கி காத்திருப்பின் ....ஏமாற்றமே மிஞ்சும் ...
உன் பிழையின் பால் ,அபயம் கொண்டு ..வில் தொடுத்து ,
உன்  வியர்வை தனை விதைத்தால்,  வெற்றி என்பது விருட்சமாய் மலரும்  ..விஜயம் துளிர்க்கும் .

உன்னை மெருகேற்று

Monday, 29 August 2016

எந்தன் வானவில்

தொட்டும் தொடாமல் தொடர்கிற உறவு இது ..
பட்டும் படாமல் படர்கிற காற்றை போல ..

விட்டு விடாமல் , விழி அளவும்  விலகாமல் ,
உன் விரல்கள் கோர்த்து ..
உன்னோடு வாழ்கிற வாழ்க்கை என்றும் வேண்டும் 
என் வர்ணஜால வானவிலே - இந்த வானிற்கு ..

சித்தம் சிறகடிக்கும் நேரத்திலும் ..
என் சிந்தையில் நீயே இருப்பாய் என் ஸ்நிகிதியே ...




எந்தன் வானவில்

காற்றின் அலைவரிசை

காற்றின் அலைவரிசையில் என் காதலியின் கார்குழல் காற்றாடி போல் பறந்து என் மீது தவழும் என்று எண்ணி ,
அவள் அருகினில் வானமாய் விரிந்தேன்.
கண்டுபிடித்தவள் போல் , குழலைக் கட்டி ,
கண்ணாமூச்சி காட்டிவிட்டாள் ..

Kaatrin Alaivarisai


மழை துளியின் காதல்

 என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே 🌹
 உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து
 மழையாய் பொழிந்தேன் ..
 என் எண்ணம் அறிந்தவள் போல ..
 அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில் .
 நானும் அவளை ஏமாற்றி நின்றேன்.
 துள்ளி வந்தவளிடம் தூறலாய் சேர்ந்தேன் .
 குழலில் முத்து போல் படிந்து , மழையாகிய நான் , அவளின் மணி  மகுடம் ஆனேன்.
 கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து கண் அடித்தாள்.
 அவள் என்னை நுகர்ந்திட நுனியில் விழுந்தேன்.
 இறுதியில் ,மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்,
 என்னை பருகி வாழ்வளித்தாள்.
  Mazhai Thuliyin Kadhal