Saturday, 25 March 2017

எங்கே போகிறோம்

உலகினில் உயிரைத் தோற்றுவிக்கும்  மண்ணின்  வளத்தை,.     ஆராய்ச்சியின், அரிதாரம் பூசி..       அதன் மகத்துவத்தை அழித்து விட்டு..
புரட்சி செய்து, வளர்ச்சி அடைந்துவிட்டோம்.. என்று பிதற்று்கின்றோம் .
அதே போல் தான் மனித இனமும்.. அறிவியல்
மலர்ச்சி என்னும் பெயரில்.
தன் மரபையும் , மாண்பையும் துறந்து .. உறவுகளை மறந்து..
காகிதத்தின் பின்னால் பறந்து கொண்டு இருக்கிறோம்.

Tuesday, 21 March 2017

விவசாயம்

நீலவானம் பொய்தது.
நிலங்கள் நீரின்றி கருகின.
கதறுவோரை கண்டுக் கொள்ள, கடமை உணர்ந்த அரசும் இல்லை.
காலம் தாழ்த்தினும், கைக்கோர்க்க, தடை தகர்ந்து ஓடி வரும் ஆறுகள்.
ஆனால் அணைப் போட்டு அரசியல் செய்யும் மாக்கள்.
இந்நிலை தொடரின்..
விளைச்சல் வீழ்ந்து .. விலை உயர்ந்து விண்ணை எட்டும்.
இதை சமன் செய்ய,அயல் நாட்டிடம் அடிபணிய வேண்டிருக்கும்

Friday, 10 March 2017

காற்று வெளியிடை

காற்றின் 🌪பின்னால் குடை ☂பறந்தது...
குடையின் ☂பின்னால் கொடி 👸🏻பறந்தாள்..
கொடியினால்👸🏻  இந்த குடியவன்👑 மெய் மறந்தான்..

Monday, 6 March 2017

பெண்

மென்மை -  பெண்மையின் மேன்மைகளில் ஒன்று
நாணம்   -  அவள் மொழிகளில் ஒன்று
அமைதி  -  அவள் ஆயுதத்தில் ஒன்று
தியாகம்  -  அவள் அன்னை என்பதின் சான்று