Wednesday, 31 December 2025

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026

அகம் அன்பினால் அகப்பட்டு இணைத்திருக்க..
ஆரோக்கியம் அகம் எல்லாம் நிறைந்திருக்க.. 
இதயத்தில் இன்பம் பூத்திருக்க.. 
அமைதி அகிலம் எல்லாம் நிலைத்திருக்க.. 
மனதில் இறைவன் வீற்றிருக்க..
எல்லாம் சுபமாய், சுபிட்சமாய் அமைய 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

Tuesday, 16 December 2025

தீரா வேட்கை

வாழ்க்கையில் சிலரையாவது நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும் என்று தான் மனம் பரிதவிக்கிறது. 
ஆனால் அடுத்த கனமே ஏமாந்ததெல்லாம் ஞாபகம் இல்லையா என்ற சொல் உள்ளூர கேட்கிறது.
தீரா வேட்கை 

Monday, 15 December 2025

வாய்மை

வெற்றிகரமாக ஏமாற்றி விட்டோம் என்று நிம்மதியாக உறங்கும் சில உன்னதமான
மனிதர்களுக்கு தெரியாது,
ஏமாந்தவர்களின்  பொறுமையினாலும், இருக்கட்டும் பார்த்து கொள்ளோம் என்ற எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று. 

சுயமரியாதை

ஆணோ, பெண்ணோ, 
வசதி படைத்தவனோ, 
வாழ்க்கைக்காக உழைப்பவனோ, யாராயினும் சுயமரியாதை அவர்களின் பிறப்புரிமை.
சுயமரியாதையே சொத்து 🙏

உயிரினம்

மனித உருவம் கொண்ட ஓர் உயிரினம் தான் இவர் என்று ஒருவரைப் பற்றி நன்கு  புரிந்துவிட்டால், மனித மாண்புகளையோ பண்புகளையோ அந்த உயிரினத்திடம் எதிர்பார்க்காதே. 
நம் மன அமைதி தான் முக்கியம் 

Sunday, 14 December 2025

கடவுள் நம்பிக்கை


என்னால தாங்கிக்கிற கஷ்டத்தை மட்டும் தான் கடவுள் தருவார். 
ஏன்னா அவருக்கு தெரியும் சொல்லி ஆறுதல் அடையவோ, 
தோள் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விடவும் இந்த உலகத்துல அவரை தவிர வேற யாரும் இல்லை என்று 

பண்பட்ட சமூகம் 😜

பெரிய படிப்பு படிச்சுட்டு
டாக்டராகவோ, 
டாலர்லையோ, 
சம்பாரிக்க தெரிஞ்ச உயிர்களின் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்க தான் செய்யுது இந்த உலகத்தில.. அவங்க ஏமாத்தினா கூட.. 
உண்மையா இருக்குற உறவ, 
பல சமயம் துச்சமாக தான் பார்க்கிறது 
இந்த பண்பட்ட சமூகம் 

பணப் பேய்கள்

படிப்பிற்கும் பண்புக்கும் தொடர்பில்லை. படித்த பொய்யர்கள் பாசாங்கு பேசியே பிழைப்பவர்கள்.
பணத்தை பற்றி அறிய மட்டுமே நல்லவர் போல் நாடகம் அரங்கேற்றம் செய்வார்கள்