Karpanai Kolangal
Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
Thursday, 27 March 2025
கன்னம் காணவில்லை
நீ தீண்டிய கன்னங்கள் கரைந்தோடி விட்டது,
அதில் கண்ணீர் மட்டுமே பயணப்பட்டதால்.
எறும்பு ஊர கல்லும் தேயுமல்லவா!
என் கன்னங்கள் என்ன விதிவிலக்கா!!
Sunday, 23 March 2025
இணையே என் வழி துணையே
இணையேவா இணைந்திட வா, இம்மையில் இருவரும் என் முகத்துடன் வாழ்வோம் வா ,
வருங்காலம் வெளிச்சமாகும் வா,
வசந்த காலம் காண்போம் வா
இறையே 🙏
இறையே வா இரைந்திடுகிறேன் உன்னிடம் வா,
இம்மையில் நன்மை செய்திட வா,
இன்முகத்துடன் வா,
இன்பம் இதுதான் என்று காட்டிடவா இறையே..
Saturday, 22 March 2025
அன்பலை
கடல் மணலில் கால் தடம் போல என் கோபத்தை பதிய வைத்தாலும் உன் அன்பு அழகாய் வந்து அதை அழகாய் அழித்து விடுகிறது
Friday, 21 March 2025
புன்னகை
என் புன்னகை தான் உனக்கு பிடிக்கும் என்றால் அதை மாற்றி எழுத நீ நினைத்தது ஏனோ
உன் கண்களுக்கு என் புன்னகையை தான் பார்க்க ஆசை என்றால்,
என் கண்கள் கலங்க காரணமாய் நீ இருந்தது ஏனோ
Wednesday, 19 March 2025
நீ இல்லாமலே
நீங்காத நினைவுகள் நிழல் போல தொடருதே..
தொடரும் என்று நினைத்த உறவுகள்,
தொடங்கியதும் முடிந்ததே..
முடிய வேண்டிய முரண்கள்,
முடிவில்லாமல் நீண்டதே..
நீண்ட வாழ்வை,
நீ இல்லாமலே தொடர்கிறேன்...
Tuesday, 18 March 2025
மனம் மறுக்குமே
சிறுவயதில், அன்னியரிடம் பேச தயங்கிய மனம்,
வயதில் வளர்ந்தபின்,
அறிந்தவர்களிடம் பேச மறுக்கிறது.
முதுகில் குத்திய பின்பும்,
மணக்க, சிரிக்க சிலர் பேசும் போது,
மனம் மறுக்கத்தானே செய்யும்.
Saturday, 15 March 2025
காதலால் ❤️
உன் சுவாசம் எனை முத்தமிட,
உன் கண்கள் என்னை சிறை பிடிக்க
உன் கூந்தல் வலையில் நான் அகப்பட,
ஆதலால் அகம் படப்படக்க..
உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகளில், நான் உருக..
உன் சுவாச காற்றின் வெப்பத்தில்
நான் நீராவியாய் காற்றோடு கலக்கிறேன்,
காதலால்...
Tuesday, 11 March 2025
தமிழின் பலம்
பாலத்தின் தூண்களில் பாரதியாரின் பாரதிதாசனின் வரைபடங்கள்.
பாலத்திற்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் அவர்களின் படைப்புகளே பலம்.,
தமிழைத் தாங்கி பிடிக்கும் தூண்கள்,
தமிழை அனைவர் மனதிலும் ஊன்றிய கோன் (அரசர்)
Monday, 10 March 2025
நீரின் நிலை
வானுயர்ந்த கட்டிடங்களின் நடுவில் உள்ள சிறு நீர் நிலையைப் பார்த்து என் மனம் சொன்னது உன் தலையில் எவ்வளவு சீக்கிரம் மண்ணை வாரி கொட்ட போகிறார்களோ என்று..
உறவு ❤️✅
கோபம் கொள்ளவோ,
கடிந்து பேசவோ,
கேள்வி கேட்கவோ
கண்டிக்கவோ,
கஷ்டத்தை பகிரவோ
கண்ணீரை காண்பிக்கவோ
ஓர் உரிமை வேண்டும்..
மதிப்பீடு செய்யாத உறவு என்ற உரிமை
உறவு
பழைய நினைவுகளை மறக்கடிக்கும்,
வலிகளை வளரச்செய்யாது,
புன்னகையைப் பூக்கச் செய்து,
புத்துணர்ச்சி தரும் உறவு
அனைவருக்கும் வாய்த்திட
வாழ்த்துகள்
காதல் ❤️🥰
காதல் வெறும் சொல்லாடல் மட்டுமே அல்ல..அது ஒரு
ஆத்மார்த்தமான அனுபவம்.
அன்பின் பரிமாற்றம்.
அனுசரணையின் வழித்தோன்றல்.
புரிதலின் பிறப்பிடம்.
Saturday, 8 March 2025
கலங்காதே கண்ணம்மா 💪
கன்னியின் கண்களில் கலக்கமோ, கவலையோ தெரிய கூடாது,
ஏன்னென்றால் அதை கண்டுகொண்டு
கலகம் செய்து, களிப்பு தேடும் கயவர்கள் நிறைந்த உலகம் இது.
கவனம் கண்ணம்மா
Tuesday, 4 March 2025
ரோஜா 🌹
உன் வெளி பேச்சுக்கள் மென்மையான ரோஜா இதழ்கள் போலவே இருந்தன..
ஆனால் உன் ஆழ்ந்த எண்ணங்கள் அதில் இருக்கும் முட்கள் போல இருந்துள்ளன.
முட்களைக் கவனிக்க தவறியது, என் தவறே.
Saturday, 1 March 2025
அன்பின் அழைப்பு ❤️
அலைபேசி அடிக்கும் போது எல்லாம்,
அழைப்பது நீயாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகின்றேன்.
ஆண்டுக்கு ஒரு முறை அளவளாவினாலும்,
அலாதி ஆனந்தம் அடைகின்றேன்,
ஆயூளுக்கும் நினைவில் கொள்கிறேன்..
நினைவுகளை அசைப்போட்டு மகிழ்கின்றேன்.
கவிதை ❤️
உனக்காகவே பிறந்த "கவிதை" ❤️...
ஆனால் கவிதையின் மொழி,
கடினமாக அமைந்தமையால்,
உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை போலும்..
கவிதையின் மொழி,
"காதல்" ஆயிற்றே...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)