Thursday, 31 October 2024

பாப்பா👶❤️

தரையில் தவழும் என் தங்கமே, இடையில் அமரும் என் இமயமே, 
என் சின்ன கண்மணி சிரித்திட
சிறகில்லாமல் வானில் பறக்கிறேனே, 
உன் மேனி எனை தீண்டிட, 
மேகக் கூட்டத்தில் மிதக்கிறேன் நானே, 
மழலை முனங்களில், மொழிகள் பல கற்கிறேன் நித்தமும்.. ❤️👶

யோசி.. நேசி❤️

அதிகம் யோசித்தால் யாரையும் நேசிக்க முடியாது..
ஏதும் யோசிக்காமல் நேசித்தால்,
ஏன் நேசித்தோம், என்று யோசிக்க வைக்கிறார்கள்... 

Wednesday, 30 October 2024

அமரன்

அடைமொழி கொண்டு என்னை அழைத்த போது ஆகாயத்தில் பறந்தேன்..
❤️ ஓய் மம்முட்டி❤️
அன்பாய் என்னை அணைத்த போது, அவரிடத்தில் வீழ்ந்தேன்.. 
கடலோரம் காதல் சொல்லி, கடலலைகளில் கரைந்தோம். 
ஆயிரம் வேற்றுமையிலும், ஓர் ஒற்றுமை கண்டோம்.. காதல்❤️
ராணுவ வீரனுக்குக் களத்தில் போராட்டம். 
துணைவிக்கோ அவரை கண்டால் தான் உயிரோட்டம். 
கண்ணயராது காத்திருந்தேன்,
களம் கண்டு, நம் அகம் வருவீர் என.. 
வந்தீர் வீரனாக...அமரனாக
கண்களில் நில்லாமல் நீரோட்டம். 
என் சுருள் குழல் ஒவ்வொன்றிலும், 
நம் சுகமான நினைவுகள் உள்ளன. 
உங்கள் தோள் சாய்ந்து கோதிவிடுகிறேன். 

      - இந்து முகுந்த்




Monday, 28 October 2024

பிரியா❤️

ஓர் பொழுதினில், ஓர் மழையினில், ஓர் தனிமையில், ஓர் குடையினில், சிறு சிறு கதைகளைப் பரிமாறி, 
நாம் இருவரும் பல நெடுந்தூரம் மெல்லிய மௌனத்தில் நடந்திட.. உள்ளம் இடம் மாறிட.. 
நம் சிரிப்பினில் நாம் நனைந்திட.. 

ஓர் இடியினில் நம் இடைவெளி சுருங்கிட, 
நம் விரல்களின் இடைவெளி மறைந்திட, 
வாழ்நாள் எல்லாம் இந்த அடை மழை தொடர்ந்திட மனம் இறைவனை வேண்டிடுமே.
உன் முகப்புத்தகத்தில் உள்ள முக வரிகளில், என் காதல் முகவரி இருந்திட.. இதயங்கள் இணைந்திட.. 
வரம் என வாழ்நாள் எல்லாம் உன்னுடன் நான் இருந்திட வேண்டுமே. 

உன் உள்ளத்தில இடம் பிடிக்க ஒரு வழி சொல்லம்மா.. 
நம் இல்லத்தில, உன் மணம் கமழும் 
நாள் வருமா.. 

பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா
பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா




Thursday, 10 October 2024

ரத்தன் டாடா🙏

எளிமையின் சிகரம் நீங்கள்,
எதார்த்தத்தின் விலாசம் நீங்கள், 
உழைப்பின் வடிவம் நீங்கள், 
உன்னதமான உள்ளம் நீங்கள், 
சிந்தனைவாதி நீங்கள், 
சாதனையாளர் நீங்கள். 
பலரின் வாழ்வை மெருகேற்றிய
இந்தியாவின் மேன்மை மனிதர் நீங்கள்.
நீங்கள், மண்ணுலகை விட்டு 
நீங்கினாலும், மனிதர்களின் மனங்களில் நீங்கா சரித்திரம். 
ரத்தன் டாடா 🙏