Friday, 26 January 2024

செல்

நினைவில் நிற்காதே செல் நிஜத்தில் நீ இல்லை செல்
கனவில் நிழலாய் தொடராதே செல்
மனதில் மலராதே செல்
முகத்தை மறக்க வேண்டும் செல்

Wednesday, 24 January 2024

வாக்கு, வெற்று வாக்குறுதி

வாக்கு - உணர்வுக்கு மதிப்பளித்து உளமாற உதிர்த்திடும் வார்த்தைகள். 
வெற்று வாக்குறுதி - உண்மை இல்லாத உள்ளங்களால் நேரம் கடத்த மட்டுமே உறவாடும் வார்த்தைகள்

பிரிதலும் அழகே..

பிரிதலும் அழகே.. 
பிரிந்தாலும், முகம் நினைவில் நிழலாடும் நிமிடங்களில்
மனதில் ஒரு சிறு மகிழ்ச்சி மலர்ந்தால், பிரிவும் அழகே. 
புரிதலுடன் கூடிய மென்மையான பிரிவு வலி தந்தாலும், 
காலம் கழித்து கண்கள் சந்தித்தால் விழியில் நீர் சுரக்கும் ஆனந்தத்தில்

Monday, 22 January 2024

ராம்

வைதேகி விழியில் விழுந்தாராம்🦋 வில்லை வளைத்தாராம்🏹
விண்ணவர் வாழ்த்த வைதேகி கரம் பற்றினாராம்🤝
விதி வசத்தால் வனவாசம் கொண்டாராம்🏞️
வாழ்வில் நடப்பது நன்மைக்கே என்றாராம்🙏
வாழ்வில் வசந்தம் துறந்தாராம்🏜️ வானரம் உதவிட விழிமொழியாளை மீட்டாராம்✨
பார் வணங்கும் பகலவனாய் மிளுர்கிறார் ராம்🙏🌟
 

Tuesday, 2 January 2024

அமைதி மௌனம்

அமைதி மௌனம்

 அமைதி - மனதில் ஒன்றும் ஓடாது. 
 மனம் லேசாக உணரும் தருணம். 

மௌனம் - ஆயிரம் எண்ணங்கள் மனதில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தாலும், சொல்லி என்ன ஆக போகிறது என்று பாரமாக இருக்கும் தருணம். 

வேடிக்கை

சில சமயம் முதுகில் குத்தியவர்களைப் பற்றி, 
முதுகில் குத்திக் கொண்டிருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்போம். 
இப்படி செய்து விட்டார்களே என்று. வேடிக்கை👀

Monday, 1 January 2024

தமிழ் மொழி

நீயே என் எழுத்துக்களுக்கு ஆதாரம்✒️ 
நீயே என் வார்த்தைகளின் தொடக்க புள்ளி 🖋️
நீயே என் எண்ணங்களின் மொழி📝 நீயே என் முதல் முகவரி🖊️
தாய் தமிழே நன்றி🤝

கடிகாரக் காதல் ⌚🫶

கண்கள் இரண்டால்👀
காலம் காட்டும் கண்மணியே⌚ 
என் கைகளில் தவழும் 
தார"கை"யே⌚ 
மோகமுள் தைத்தாய் மனதினில் உன் மாறுபட்ட வடிவங்களால்⌚ 
சில சமயம், காலம் தவறாய் நீ காட்ட உன் காதை திருகி கொடுத்தேனே⌚ இதயத் துடிப்பாய் மெல்லிய ஓசையில் நீ ஓட ⌚
காலம் தாண்டியும் கைகள் கோர்க்கிறோம்⌚🤝🫶⌚