சிலை போன்றொரு பெண்ணைக் கண்டேன்...
சிலையாகி உறைந்து நின்றேன், சிரிப்பாலே சீண்டிக் கடந்தாள் மெய்சிலிர்த்ததெழுந்து உயிர் பெற்றேன்,
இவளே... இவளே... என் உயிரென கண்டேன்,
உலகும், உறவும் இவளென உணர்ந்தேன்,
நிதமும் அவளின் நிழலை போல நெருங்காமல் நினைவாலே தொடர்ந்தேன்,
மீண்டும்.. மீண்டும்.. அவளை காண்பது போலே கனவில் காட்சிப்படுத்திக் கொண்டேன், நினைவினாலே கண்ட காட்சி நிறைவேற பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்ந்தேன்,
அருகே அருகே அமர்ந்து கொண்டோம்,
அறியா கதைகள் பல பேசி கடந்தோம்,
கண்கள் காதல் ஓவியம் தீட்ட நெஞ்சம் நிறமென மாறி போக கலந்தோம் காதல் ஓவியமாக...