Saturday, 25 July 2020

கண்ணில் நீந்தும் நீர்

உள்ளத்த உருக்குரேன்
உனக்கென உரித்தாக்க தான்
தங்கத்த கேப்பியா...
தங்கக்கட்டி கட்டி போயா.. 
என்னனு சொல்லுவேன்.. 
எண்ணமெல்லாம் 
நீ தான் போயா.. 

நீர் துளி கண்ணிலே நீந்தி தான் போகுதே
காரணம் கேக்காதேயா... 
கண்ண பாத்து பேசி
ஆச்சு பல மாசம் நேரில் நீயும் வாயா..

Saturday, 11 April 2020

கல் நெஞ்சம்

காதல் என்பார்
கனவு என்பார்
கதிரவன் சாட்சி என்பார் 
கன்னிகையே காத்திருப்பேன் என்பார்
கயல்விழி என்பார்
கன்னம் சிவக்க நான் கரம் பற்றுவேன் என்பார்
பற்றிய கரம் விடேன் என்பார்
விட்டு விலகேன் என்பார்
ஆயிரம் ஆசைவார்த்தைகள் அள்ளி விடுவார்
விட்ட பின், தவறேதும் நிகழ்ந்திடவில்லை
காதலுக்கு காலம் பதில் சொல்லும் என்பார் 
வாழ்க்கை பாடம் என்பார்
சுயமாய் வாழபழகு என்பார்
முன்பு நான் சுயமாய் தான் வாழ்ந்தேன்
உங்களின் அன்பை எதிர்நோக்கி காத்திருந்ததில்லையே
என மனம் வெகுண்டெழுந்தாலும்
நம்மை புரிந்துகொள்ளாரிடத்து சொல்லும் வார்த்தைகளும் அன்பைப் போல்
அர்தமற்றதாகிவிடும் என்பதால், 
கதிரவன் சாட்சியில் உருவான கானல் நீரை விட்டு பிரிந்தேன்