தெரிந்திருந்தும், தெரியாதே என்று உன்னிடம் தெரிவிப்பதில் உள்ள காதல், உனக்கு தெரியுமா அன்பே💕
Sunday, 29 October 2017
Saturday, 28 October 2017
வருகிறேன்
எனை பார்க்கத் தயங்கும் கண்களைக்..காண
கவர்ந்திழுக்கும் இதழை இதமாக்க..
கவிதை படிக்கும், காவியத்தை நானும் படிக்க.. தொலைவானம் கடந்து, உன் தோள் நாடி வருகிறேன்..
குறும்பிழுக்கும் கைகளைக் கட்டி இழுத்து.. என்னோடு.. உன்னை அணைத்து, நெற்றி முத்தமிட, நெடு நாள் காத்திருந்து வருகிறேன்..
கண்களில் ஒழிந்திருக்கும் காதலைக் கட்டவிழ்த்து,
கரை ஒதுங்கும், கார்குழலில், எனை தொலைத்து, என்னை உன்னில் கண்டெடுக்க வருகிறேன்.... 👫
ஆசை மொத்தமும், முத்தமும்.. மெத்தையில் உன்னிடம்....
உன் மீசை வரையும், கொலங்கள் மொத்தமும் இந்த பெண்ணிடம்..
மேனியில் பனிபோல் படிந்து, மழைக் காணச் செய்கிறாய்..
கொடி போல் படர்ந்து, எனை குலையச் செய்கிறாய்..
நுனி மூக்கை வாளாக்கி, உனை வீழ்த்திடுவேன்..
நீ வீழாமல் இருக்க, என் வாழ்நாளை அர்ப்பணிப்பேன்
Subscribe to:
Posts (Atom)